Published:Updated:

தகதக தங்கம்... உற்சாகம் பொங்கும்!

வே.கிருஷ்ணவேணிபடங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தகதக தங்கம்... உற்சாகம் பொங்கும்!

வே.கிருஷ்ணவேணிபடங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

சிறிய இடைவெளிக்குப் பின் 'அவள் விகடன்’ நடத்தும் விழா என்பதால், 6.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி... வாசகிகளின் வேடந்தாங்கலானது. 'அவள் விகடன்’ மற்றும் 'அட்வென்ச்சர்ஸ் இந்தியா’ இணைந்து நடத்திய 'தகதக தங்கப் புதையல்’ போட்டிக்கு, அடாத மழையிலும் விடாது ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வந்து சேர்ந்திருந்தனர் தோழிகள்! ஒரே குடும்பத்தில் அம்மா, மகள், பேத்தி என தலைமுறைகள் தாண்டி கைகோத்து வந்திருந்த வாசகிகள் க்யூவில் நின்றதைப் பார்த்தபோது, நிகழ்ச்சி ஆரம்ப மாகப் போகும் தருணத்துக்காக நம் மனமும் குதூகலித்திருந்தது.

சரியாக 10 மணிக்கு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுமதி மேடையேற, போட்டிகள் அமர்க்களமாக ஆரம்பித்தன. வளையல் அடுக்குதல், நடனம், தங்கப் பானை, பால் டேப்பிங், அந்தாக்ஷரி என அனைத்துப் போட்டிகளிலும் கோலாகலமாக பங்கேற்றார்கள் வாசகிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பால் டேப்பிங் போட்டிக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த உஷா சங்கரன், ''வீட்டை விட்டு வரும்போது... ஒரு குடும்பஸ்திரீக்குனு இருக்கற மென்ட்டல் பிரஷர்... மனசுக்குள்ள அப்பிக் கிடந்துச்சு. ஆனா, இங்க இருந்த இந்த அரை நாள்ல அது எங்க போச்சுனே தெரியல. இதுதான்... இந்த மாதிரி நிகழ்ச்சிகள்தான் என்னை மாதிரியான ஆட்களுக்கு அவசியம்'' என்று பொங்கும் உற்சாகத்தில் வார்த்தைகளை பெரும் தூறலாகத் தூவி, போட்டிக்குத் தாவினார்.

தகதக தங்கம்... உற்சாகம் பொங்கும்!

அய்யப்பன்தங்கலைச் சேர்ந்த டீச்சர் கன்னிகா பரமேஸ்வரி, ''என்னோட வேலை பாக்குற எல்லா டீச்சரையும் அழைச்சுட்டு வரணும்னு பிளான் பண்ணி... எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டேன். ஏன்னா... சம்பாதிக்கிற காச எப்படி பத்திரமா இன்வெஸ்ட் பண்ணணும்னு நாங்களும் தெரிஞ்சுக்கணும் இல்லையா! அதையும் தெரிஞ்சுகிட்டோம். போட்டியிலயும் கலந்துகிட்டோம். சந்தோஷமா இருந்துச்சுனு ஒரு வார்த்தையில் முடிக்க முடியாது. இட் இஸ் எ வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ்'' என்று மாணவியின் சந்தோஷத்தோடு துள்ளினார்.

அடுத்து வாஞ்சையாக நம் கைபிடித்து, ''ஒரு சண்டே... சந்தோஷமா சூப்பரா போயிடுச்சு. இப்படி ஒவ்வொரு சண்டேயும் நீங்க நிகழ்ச்சிகளை நடத்தினா... எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?!'' என்று சின்னக் குழந்தை போல் குதூகலித்தார் வளசரவாக்கம் சாரதா மணி. 

தகதக தங்கம்... உற்சாகம் பொங்கும்!

நிகழ்ச்சியின் இடையிடையே, தங்க முதலீடு பற்றி 'அட்வென்ச்சர்ஸ் இந்தியா’ நிறுவன இயக்குநர் சோலையப்பன், நிர்வாக இயக்குநர் ராஜா ஆகியோர் ஸ்டாக் மற்றும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் பொருட்களை எவ்வாறு வாங்குவது விற்பது... தங்கம், வெள்ளியை எவ்வாறு சிறுக சிறுகச் சேமிப்பது என்பதைப் பற்றி வழங்கிய ஆலோசனைகள், வாசகிகளை இன்னும் உற்சாகப்படுத்தியது.

முதல் பரிசு ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசு 5 கிராம் வெள்ளி நாணயம், மூன்றாம் பரிசு 3 கிராம் வெள்ளி நாணயம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் என அனைத்துப் போட்டிகளுக்கும் வழங்கப் பட்டன. முகம் மலர்ந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர் தோழிகள்!

தகதக தங்கம்... உற்சாகம் பொங்கும்!

ஹைலைட்டாக, பார்வையாளர்களில் 100 பேருக்கும் 1 கிராம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட, அரங்கில் பரவியது ஆனந்த அலை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism