Published:Updated:

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'

'அடடே' அறுவை சிகிச்சைகள்ரேவதி,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'

'அடடே' அறுவை சிகிச்சைகள்ரேவதி,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

''மூக்கு, உதடு, காது என அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது போல், உடலையும் 'ஸ்லிம் பியூட்டி’யாக மாற்றிக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், உடல் எடையைப் பாதியாகக் குறைத்து, அழகான உடலமைப்பை உருவாக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளுக்கு பெண்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது!'' என்கிறார் 'லைஃப் லைன் மருத்துவமனை’யின் நிர்வாக இயக்குநரும் சீஃப் டாக்டருமான ராஜ்குமார்.

''உடல் எடை ஒரே நாளில் அதிகரித்து விடுவதில்லை. அதேபோல்... ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. இன்றைய அவசர யுகத்தில் துரித உணவுகளே தினப்படி உணவுகளாக மாறிவிட்டன. அளவுக்கு அதிகமான உணவு, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எண்ணெய் - மசாலா பொருட்கள் இவற்றால் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போகும்போது, உடல் பெருத்து, வயதுக்கு மீறிய தோற்றம் தெரிகிறது. இதய நோய், நீரிழிவு, கேன்சர் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'
'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'

ஒவ்வொருவரின் உயர‌த்‌துக்கும் ஏற்ற எடையைக் கணக்கிட பிஎம்ஐ (BMI-Body Mass Index)அ‌ட்டவணை உள்ளது. இந்த அளவீட்டைத் தாண்டி ஒருவர் 30 ‌கிலோ அ‌திக உடல் எடையுடன் இரு‌ந்தா‌ல், அவருடைய ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டுகள் வரை குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு!

இப்படி உடல் எடையால் பாதிக்கப்படுபவர்கள், பழையபடி நடமாடவே, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சைகள் பயன்படுகின்றன. இதில்... ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி,  கேஸ்ட்ரிக் பைபாஸ், கேஸ்ட்ரிக் பேண்டிங் மற்றும் லிபோசக்ஷன் ஆகிய சிகிச்சைகள் உள்ளன'' என்ற டாக்டர், ஒவ்வொன்றையும் பற்றி விவரித்தார்...

ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி (Sleeve gastrectomy)

இரைப்பையின் அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை இது. இரைப்பையின் அளவை 75 சதவிகிதம் சுருக்கிவிடுவோம். பசியைத் தூண்டும் ஹார்மோனும் அகற்றப்பட்டுவிடும். இதனால், இரண்டு தோசை சாப்பிட்டால்கூட ஐந்து தோசைகள் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இந்த

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'

சிகிச்சை முறையினால், சாப்பிடும் உணவு அளவுதான் குறையுமே தவிர, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகித்துக்கொள்வதில் எந்தக் குறைவும் இருக்காது. தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடத் தேவையில்லை.

முன்பு ஓபன் சர்ஜரியாக செய்யப்பட்ட இந்த சிகிச்சை, முறை இப்போது லாப்ராஸ்கோப்பி மூலமாக செய்யப்படுகிறது. இதனால் தழும்புகூடத் தெரியாது. அறுவை சிகிச்சையும் 45 நிமிடத்தில் முடிந்துவிடும். 110 கிலோ எடையுள்ள ஒருவர், 60 கிலோவாக குறைந்துவிடுவார். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் அரிதாக சிலருக்கு மட்டுமே திரும்பவும் எடைகூட வாய்ப்பு இருக்கிறது என்பதால், எந்த பயமும் தேவையில்லை.

கேஸ்ட்ரிக் பை-பாஸ் (Gastric by-pass)

'எதைக் குறைத்தால் எடை குறையும் ?'

இதில், சிறுகுடலின் அமைப்பைக் கொஞ்சம் மாற்றி அமைக்கிறோம். 2,000 கலோரிகளைக் கொடுக்கக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும்கூட வெறும் 400 கலோரிகளை மட்டுமே உடம்பு எடுத்துக் கொள்ளும். ஆறு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து இந்த சிகிச்சையைப் பெறவேண்டும். வாழ்நாள் முழுவதும் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

கேஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric banding)

பிஎம்ஐ (BMI) அளவானது 45-க்கு கீழ் இருப்பவர்கள் கேஸ்ட்ரிக் பேண்ட்டிங் சர்ஜரி செய்து கொள்ளலாம். இரைப்பையின் அளவைக் குறைக்கும் வகையில், ஒரு பேண்ட் போடப்படும். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டு வாரம் வீட்டில், ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் பேண்ட் அட்ஜஸ்ட் செய்வதற்காக மருத்துவமனை வரவேண்டியிருக்கும். இதன் மூலம் 50% எடையைக் குறைத்து விடலாம்.

லிபோசக்ஷன் (Liposuction)

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவது லிபோசக்ஷன். கை, கால், தொடை, இடுப்பு, வயிறு என பல்வேறு இடங்களில், தோலின் அடியில் உள்ள கொழுப்பை லேசர் கதிர்கள் மூலம் உறிஞ்சி எடுக்கும் முறைதான் இது. 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம். ஆறில் இருந்து எட்டு கிலோ வரை உடல் எடையைக் குறைத்துவிடலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism