Published:Updated:

"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்..."

உள்ளம் பொங்கும் கிராமிய ஹீரோயின்ஸ்

''ஏலே பேச்சியம்மா... இங்கிட்டு வாயேன்டி. இங்க உன்ற மச்சான் வந்திருக்காக பாரு'' என்று திரையில் கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்து நம் மனதை அள்ளும் ஹீரோயின்கள், அதற்கு முன் தங்கள் வாழ்க்கையில் கிராமத்தை நேரில் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படி கிராமப் பின்புலம் கொண்ட படங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளிய 'சிட்டி கேர்ள்ஸ்’ சிலர், தங்களின் கிராம அனுபவங்களைப் பகிர்கிறார்கள் இங்கு!

'களவாணி’ படத்தில் மனதை களவாடிய பூ, ஓவியா. கேரளத்து ஓவியம் இது!

"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்..."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'

##~##

'திருச்சூர் டவுன் பொண்ணு நான். வீடு விட்டா ஸ்கூல், ஸ்கூல் விட்டா வீடுனு போயிட்டு இருந்த என்னை, 'களவாணி’ படத்துக்காக தஞ்சாவூர் பக்கத்துல இருக்கற ஒரத்தநாடு சுற்றுவட்டார கிராமங்கள்ல வாழ வெச்சுட்டாங்க. கொஞ்சம் பிரேக் கிடைச்சாலும், வயல், வரப்பு, காடு, மேடுனு அந்த ஊரு குட்டிப் பசங்களோட சேர்ந்துட்டு ஓடி பிடிச்சு விளையாட ஆரம்பிச்சுடுவேன். பட்டாம்பூச்சி பிடிச்சு, என் கையில இருந்து மறுபடியும் அதை பறக்க விடும்போது, நானும் ஒரு பட்டாம்பூச்சியாவே மாறிடுவேன். மண்ணுக்கும், சேத்துக்கும்கூட இவ்வளவு மணமும், வாசனையும் உண்டுனு அப்பதான் தெரிஞ்சுது. அறுபது நாட்கள் ஷூட்டிங் முடிஞ்சு, கிராமத்து ஜனங்க பிரியாவிடை கொடுத்தப்போ, பிறந்த வீட்டுல இருந்து புகுந்த வீட்டுக்குப் போற மாதிரி இருந்துச்சு!''

'மைனா’ படத்தில் சிவப்பு தாவணி, கறுப்பு பிளவுஸ் என ஈர்த்த கேரளத்து அழகு, அமலா பால்.

''கிராமத்துப் பொண்ணு கேரக்டருக்காக உடம்பு இளைச்சு... மேக்-அப், பெடிக்யூர், மெனிக்யூர் எல்லாம் மறந்து, வெயில்ல நின்னு கருத்துனு... ரொம்ப மெனக்கெட்டேன். அதிகாலை அஞ்சு மணிக்கே எழுந்து ரெடியாகி கிளம்பினா, தேனிக்குப் போய் சேரவே ஆறு மணியாகிடும். அதுக்கப்புறம், அந்த 'கொரங்கினி’ மலை மேல மூணு கிலோ மீட்டர் தூரம் ஏறணும். அந்த மலை அவ்வளவு அழகா, பசுமையா, ஒரு குட்டி சொர்க்கமா இருக்கும்.

"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்..."

மலை மக்களோட வீடுகளுக்குள்ள திடீர்னு விருந்தாளியா நுழைஞ்சு, ஜாலியா அரட்டை அடிக்கறது பொழுதுபோக்கு. ஒரு வீட்டுக்குள்ள போனா... ஒரே ஒரு அறைதான் அந்த வீடே. அதுக்குள்ள அஞ்சு பேர் குடியிருக்காங்க. எனக்கு ஒரே ஆச்சர்யம். கூடவே அதிர்ச்சியும்! அங்க ஒரு பொண்ணு, ரொம்ப சின்ன வயசு... 'ஜாக்கெட்’ கூட போடாம, வெள்ளை சேலை கட்டியிருந்தா. தனியா கூட்டிட்டுப் போய் விசாரிச்சப்போ, தூக்கிவாரிப் போட்டுச்சு. பதிமூணு வயசுலயே கல்யாணம் செய்து வெச்சுட்டாங்களாம். ஒரு மாசத்துலயே கணவன் இறந்துவிட, பிறந்த வீட்டுக்கு அடிச்சு துரத்திட்டாங்களாம். 'அப்போ விட்டுக்குள்ள போனவ... இதுவரைக்கும் வெளிய வந்து வெயிலைப் பார்க்கல’னு சொல்லி அழுதா. மனசு பாரமாயிடுச்சு.

"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்..."

சிட்டியில இருக்கற நாம என்னவோ வசதிகளை அனுபவிச்சுக்கறோம். ஆனா, கிராமங்கள் இன்னும் கிராமங்களாதான் இருக்கு. எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது!''

'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் தெக்கத்தி பொண்ணாகவே வாழ்ந்திருக்கும் வசுந்தரா, நினைவலைகளில் நீந்துகிறார்!

''பிறந்து, வளர்ந்தது டெல்லியில. என் தாத்தா ஊரு தஞ்சாவூர்னு சொல்லுவாங்க. பெயரளவுல மட்டுமே அந்த ஊர் எனக்குத் தெரியும். ஷூட்டிங்குக்காக தேனிக்கு போனப்போதான் முதல் முதலா கிராமத்தையே பார்த்தேன். 'கிராமத்து ஆளுங்க... பார்த்து பத்திரமா இருந்துக்கோ’னு நிறைய பேர் சொல்லி அனுப்பிச்சாங்க. ஆனா, அந்த மக்கள்கூட பழகினப்போதான் தெரிஞ்சுது... அவங்க எல்லாம் எவ்ளோ ஸ்வீட்னு! அந்த ஊர்க்கார பெண்கள் எல்லாம், நாங்க வெயில்ல கஷ்டப்பட்டு நடிச்சதைப் பார்த்துட்டு, 'ரொம்ப இளைச்சுப் போய்ட்டீங்க’னு சொல்லி சத்துணவு உருண்டை கொடுத்தாங்க. அதை நினைச்சா... இப்போகூட எச்சில் ஊறுது!''

'மகிழ்ச்சி’ படத்தில் கிராமத்துக்காரியாக காதல் செய்த 'அஞ்சலி’, ஆந்திரா கேர்ள்!

''ஏற்கெனவே 'கற்றது தமிழ்’, 'ரெட்டைச் சுழி’னு வில்லேஜ் சப்ஜெக்ட் பண்ணிட்டதால, கிட்டத்தட்ட நான் அரை கிராமத்துக் காரி.

'ரெட்டைசுழி’ படத்துல ஒரு டயலாக்கை பாரதிராஜா சார் சொல்லிக் கொடுத்தாரு. 'விறகு அடுப்பை பத்த வைக்க அண்ணிகிட்ட தீபெட்டி வாங்கிகிட்டு வா’ அப்படிங்கறதுதான் டயலாக். நான் புரியாம, 'அண்ணிகிட்டயா, அடுப்புகிட்டயா?’னு கேட்க, ஒட்டுமொத்த டீமுக்கும் ஒரே சிரிப்பு. எனக்கு, அடுப்புங்கற வார்த்தையே தெரியாது.

"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்..."

'மகிழ்ச்சி’ படம் முழுக்க நாகர்கோவில்லதான் எடுத்தாங்க. அங்க ஒரு வீட்டுல தங்கினோம். அந்த வீட்டுக்காரவுங்க முறுக்கு சுட்டு விற்கறவங்க. அப்பப்போ சாப்பிடறதுக்கு எதையாவது செஞ்சு கொடுத்துட்டே இருப்பாங்க. பக்கத்து வீட்டுல யாரு இருக்கானே தெரியாம வாழற நம்ம சிட்டி லைஃப் வேஸ்ட். வழிப்போக்கர்கள்கூட ஓய்வெடுக்க திண்ணையும், அவங்க தாகம் தணிக்க திண்ணையில தண்ணியும் வைக்கற கிராமத்து மனுஷங்களோட நேசம், ரியலி லவ்வபிள்!''

வே.கிருஷ்ணவேணி !