Published:Updated:

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்
எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

பிரீமியம் ஸ்டோரி

சதியானவங்களைத் தவிர மத்தவங்களுக்கெல்லாம் ஹனிமூன் போறது மூனுக்கே போறமாதிரி எட்டாக் கனவு. ஆனா, அந்தக் காலம் மாறி, ரெண்டு, மூணு இடங்களுக்கு ஹனிமூன் ட்ரிப் அடிச்சு இன்ஸ்டாகிராம்ல படங்களை இன்ஸ்ட்டன்ட்டா அப்லோட் பண்ணிடுறாங்க இன்றைய தலைமுறையினர். ட்ராவல் பண்றதுல ஆர்வமுள்ள இந்தமாதிரி தம்பதியருக்காகவே ஒரு சீஸனல் ஹனிமூன் பிளானரை வழங்குகிறார் சென்னை கெயட்டி ட்ராவல்ஸ் உரிமையாளர் சரோஜினி சண்முக சுந்தரம்.

“திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் எங்கேன்னு யோசிக்கறதைவிட, திருமணத்துக்கு ஒரு மாதம் முன்னரே `எங்கே? எப்படி? எத்தனை நாள்கள்?’ என்பதைத் தெளிவாக முடிவு செய்துவிடுங்கள். போக விரும்பும் இடத்தில் ஆரம்பித்து போக்குவரத்துக்கான டிக்கெட் புக்கிங், தங்குமிடத்தை புக் செய்றதுன்னு எல்லாத்தையும் முன்கூட்டியே தீர்மானிச்சாதான் கடைசி நிமிட பரபரப்பைத் தவிர்க்க முடியும்.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

அதேசமயம் ஹனிமூன் போறதுக்கு முன்னாடி முக்கியமா கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கு. எந்த மாசத்துல போறோமோ... அந்த மாசம் நாம போற எடத்துல ஆஃப் சீஸனா... சம்மர் சீஸன்ல போறதுன்னு முடிவு பண்ணினா, அந்த சீஸன்ல அங்கே ஊர் முழுக்கச் சுத்த முடியுமா... இப்படிப் பல விஷயங்களை மனசுல வெச்சு பிளான் பண்ணிட்டா நீங்க போற ட்ரிப் ஒரு திருப்தியான ட்ரிப்பா பல சந்தோஷ நினைவுகளைத் தரும்” எனத் தன் அனுபவத்தில் விளக்கும் சரோஜினி எந்த மாதம், எங்கெங்கு செல்லலாம் என விளக்குகிறார்.

தமிழ்நாடு

 ஏப்ரல் முதல் ஜூன் வரை

ஊட்டி

பார்க்கவேண்டிய இடங்கள் - மலைத் தொடர்கள், ஊட்டி லேக் ஏரியா, பூங்கா, க்ரீன் வேலி.

ஹைலைட் - சில்லுனு ஒரு டாய் ரயில் பயணம், ஊட்டி ஸ்பெஷல் மொறுமொறு வர்க்கி.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

கொடைக்கானல்

பார்க்கவேண்டிய இடங்கள் - ஸ்டார் லேக், பில்லர் ராக்ஸ், பேரிஜம் ஏரி, காக்கர்ஸ் வாக்.

ஹைலைட் - மலை முழுதும் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள், ஹாட் அண்ட் ஸ்வீட் ஹோம்மேட் சாக்லேட்ஸ்.

 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை


கன்னியாகுமரி

பார்க்க வேண்டிய இடங்கள் - விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சுசீந்திரம் கோயில் மற்றும் கன்னியாகுமரியைச் சுற்றி அமைந்திருக்கும் திற்பரப்பு உள்ளிட்ட அருவிகள்.

ஹைலைட் - சன் செட் மற்றும் சன் ரைஸ், விதம்விதமான வடிவங்களில் கிடைக்கும் கடல் சிப்பிகள். 

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

பாண்டிச்சேரி

பார்க்கவேண்டிய இடங்கள் - சர்ச்சுகள், பாரடைஸ் பீச், சுண்ணாம்பாறு போட் ஹவுஸ், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஜவஹர்லால் நேரு பார்க்.

ஹைலைட் - பாண்டிச்சேரியில் உள்ள கண்கவரும் ரிசார்ட்டுகள்.

நவம்பர் முதல் பிப்ரவரி வரை


இந்த மாதங்களைப் பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்களில் குளிர் அதிகமாக இருக்கும். 

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

இந்தியா

 ஏப்ரல் முதல் ஜூன் வரை

குலுமணாலி

பார்க்கவேண்டிய இடங்கள் - ரோஹ்டாங் மலைப்பாதை, குகைக் கோயில்கள், வசிஷ்ட் வெந்நீர் ஊற்றுகள் மற்றும் சுல்தான்பூர் பேலஸ்.

ஹைலைட் - ட்ரெக்கிங் மற்றும் சர்ஃபிங் ஸ்போர்ட்.

காஷ்மீர்

பார்க்கவேண்டிய இடங்கள் - ஸ்ரீநகர், குல்மார்க், சோனாமார்க், குப்வாரா, கத்வா, கார்கில்.

ஹைலைட் -  ஸ்கையிங், லேக்கில் ஒரு ரைடு மற்றும் குல்மார்க்கில் ஷாப்பிங்.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

டார்ஜிலிங்

பார்க்கவேண்டிய இடங்கள் - கஞ்சன்ஜங்கா மலைத்தொடர், ராக் கார்டன், ஹிமாலயன் ரயில்வே, நைட்டிங்கேல் பார்க் மற்றும் ஆறுகள்.

ஹைலைட் - ரிவர் ரேஃப்டிங்

கோவா

பார்க்கவேண்டிய இடங்கள் - கடற்கரைகள், ராயல் கேசினோ, சர்ச்சுகள், நீர்வீழ்ச்சிகள், நைட் பார்ட்டிகள்.

ஹைலைட் - சனிக்கிழமை நடக்கும் நைட் மார்க்கெட் மற்றும் ஸ்பாக்களில் ஸ்டீம் மசாஜ்.

லட்சத் தீவுகள்

பார்க்கவேண்டிய இடங்கள் - ஊர் முழுவதும் உள்ள குட்டி குட்டித் தீவுகள் மற்றும் கடற்கரைகள்.

ஹைலைட் - கைட் சர்ஃபிங், பாரா கிளைடிங், கேனோயிங் உட்பட அனைத்து வாட்டர் ஸ்போர்ட்ஸ்களும்.

 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை


உதய்ப்பூர்


பார்க்கவேண்டிய இடங்கள் - சிட்டி பேலஸ், ஜக் மந்திர் பேலஸ், வின்டேஜ் கார் மியூசியம், மியூசிக்கல் கார்டன்.

ஹைலைட் - சைக்கிள் டூர் மற்றும் ஹெலிகாப்டர் ரைட் மூலம் உதய்ப்பூரின் பேலஸ்களைச் சுற்றி வருவது.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

மஹாபலீஷ்வர்

பார்க்கவேண்டிய இடங்கள் - எலிபென்ட்’ஸ் ஹெட் பாயின்ட், ஆர்தர்’ஸ் ஸீட், வில்சன் பாயின்ட், பன்ச்கனி, சின்னமன் மற்றும் தோபி நீர்வீழ்ச்சிகள்.

ஹைலைட் - இங்குள்ள கோட்டைகள், கடற்கரைகள் மற்றும் மனதை மயக்கும் ரம்மியமான, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை.

கூர்க்

பார்க்கவேண்டிய இடங்கள் - மல்லாலி நீர்வீழ்ச்சி, அபே நீர்வீழ்ச்சி, புத்தா கோயில்கள் மற்றும் ராக் ரைடு.

ஹைலைட் - ஜங்கிள் ட்ரெக்கிங், ரிவர் ரேஃப்டிங் மற்றும் நீர்வீழ்ச்சிகள்.

வயநாடு

பார்க்கவேண்டிய இடங்கள் - டீ எஸ்டேட்கள், ஹேர்பின் பெண்ட் பயணம், கோயில்கள், ஃபாரஸ்ட் ஸ்டே.

ஹைலைட் - இங்குள்ள ட்ரீ ஹவுஸ் ரிசார்ட்கள் மற்றும் காட்டுக்குள் ட்ரெக்கிங்.

 நவம்பர் முதல் பிப்ரவரி வரை

இந்தியாவின் வடக்கே குளிர் மிகவும் கடுமையாக நிலவும் என்பதால் எந்த இடத்தையும் முழுமையாகச் சுற்றிப் பார்க்க இயலாது.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்இ்ன்டர்நேஷனல்

 ஏப்ரல் முதல் ஜூன் வரை

தாய்லாந்து

பார்க்கவேண்டிய இடங்கள் - புத்தர் டெம்பிள், கோரல் தீவு, ஜெட் ஸ்கூட்டிங் மற்றும் கண்ணைக் கவரும் அழகான இயற்கைக் காட்சிகள்.

ஹைலைட் - இங்குள்ள கடற்கரைகள் மற்றும் ஸ்பாக்கள்.

நியூசிலாந்து

பார்க்கவேண்டிய இடங்கள் - ஆக்லேண்ட், க்ளோ வார்ம் குகைகள், கிங்ஸ்டன், க்ரைஸ்ட் சர்ச், வெலிங்டன்.

ஹைலைட் - கிங்ஸ்டனில் நடைபெறும் ஸ்கை டைவிங், ரிவர் ரேஃப்டிங் மற்றும் பஞ்சி ஜம்பிங்.

சீஷெல்ஸ்

பார்க்கவேண்டிய இடங்கள் - மாஹே தீவு, ப்ராஸ்லின் தீவு, லாடிக்யு தீவு, கௌசின் தீவு, பேர்ட் தீவு.

ஹைலைட் - ராக் க்ளைம்பிங். ஸ்கூபா டைவிங் மற்றும் ரிசார்ட்டுகள்.  

பாலி

பார்க்கவேண்டிய இடங்கள் - உலுவாது டெம்பிள், லொவினா கடலில் டால்ஃபின்களை பார்ப்பது, உபுத் பீச், குத்தா பீச்

ஹைலைட் - இங்குள்ள பீச்சுகள், கோயில்கள் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ். 

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

செப்டம்பர் முதல் அக்டோபர் வரை

துபாய்

பார்க்கவேண்டிய இடங்கள் - புர்ச் கலிஃபா, பாலைவனச் சவாரி, தீம் பார்க்குகள், ஃபெர்ராரி பார்க் மற்றும் அபுதாபி.

ஹைலைட் -  தரமான, மலிவான விலையில் கிடைக்கும் தங்கம்.

சுவிட்சர்லாந்து

பார்க்கவேண்டிய இடங்கள் - பெர்ன் லுஸ் ரீன், சுரீச், ஜெனிவா லேக், சுவிஸ் நேஷனல் பூங்கா.

ஹைலைட் - சுவிஸ் சாக்லேட், ஜங்ஃப்ராவில் அழகான ரோட் ட்ரிப் மற்றும் மனதை மயக்கும் அழகான இயற்கைக் காட்சிகள்.

தென் ஆப்பிரிக்கா

பார்க்கவேண்டிய இடங்கள் - கேப் டவுன், க்ரூகர் நேஷனல் பார்க், ட்ரேகன்ஸ்பெர்க், கார்டன் ரூட், டர்பன்.

ஹைலைட் - வைல்ட் லைஃப் சஃபாரி, டி ஹூப் நேச்சர்  சஃபாரியில் திமிங்கலத்தைப் பார்ப்பது.

லண்டன்

பார்க்கவேண்டிய இடங்கள் - ஸ்டோன்ஹெஞ், பிரிட்டிஷ் மியூசியம், வெஸ்ட்மினிஸ்டர் அபே, பக்கிங்காம் பேலஸ், ட்ரஃபால்கர் சதுக்கம்.

ஹைலைட் - இங்கு இருக்கும் தீம் பார்க்குகள், ஷாப்பிங் மார்க்கெட், மாளிகைகள், பார்லிமென்ட் கட்டடங்கள்.

எந்த சீஸனில் எங்கே போகலாம்? - மினி ஹனிமூன் பிளானர்

ஆஸ்திரியா

பார்க்கவேண்டிய இடங்கள் - ஷான்பிரன் பேலஸ், ஹால்ஸ்டாட், ஆல்பைன் ரோடு, ஹாஃபக் இம்பேரியல் பேலஸ்.

 ஹைலைட் - இங்குள்ள குட்டிக் குட்டி கிராமங்களில் உள்ள தோட்டங்கள், ரோட் ட்ராவல், சீஃபெல்டில் பனிச்சறுக்கு.

நவம்பர் முதல் பிப்ரவரி வரை


ஆஸ்திரேலியா

பார்க்கவேண்டிய இடங்கள் - மெல்போர்ன், சிட்னி, கோல்டு கோஸ்ட், ஃபிலிப் தீவு, மூவி வேர்ல்டு.

ஹைலைட் - க்ரேட் ஓஷன் ரோடில் கார் பயணம், ஃபிலிப் தீவில் பென்குயின் பரேட்.

சிங்கப்பூர்

பார்க்கவேண்டிய இடங்கள் - யுனிவர்சல் ஸ்டூடியோ, சென்டோசா தீவு, சென்ட்ரல் ஜூ, பேர்ட் பார்க், லயன் நீர்வீழ்ச்சி.

ஹைலைட் - சிங்கப்பூரின் சங்கி விமான நிலையம், தீம் பார்க்குகள் மற்றும் பெர்ஃப்யூம்கள்.

மலேசியா

பார்க்கவேண்டிய இடங்கள் - ஜெட்டிங் ஹைலேண்ட், லங்காவி பீச், மலேசியா முருகன் கோயில் மற்றும் ரிசார்ட்டுகள்.

ஹைலைட் - ரிசார்ட்டுகளில் ஒருநாள், தீம் பார்க்குகளில் உள்ள விளையாட்டுகள் மற்றும் மலேசியன் உணவகங்களின் சிறப்பு உணவுகள்.

அப்புறம் என்ன  டிக்கெட் போடுங்க... பேக் பண்ணுங்க... கிளம்புங்க..!

ஹேப்பி ஹனிமூன்!

- எஸ்.எம்.கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு