Published:Updated:

இது பொம்மைக் கல்யாணம்!

இது பொம்மைக் கல்யாணம்!

பிரீமியம் ஸ்டோரி
இது பொம்மைக் கல்யாணம்!

பொம்மைகள்... நம் பால்ய பருவத்தை அழகாக்கியவை. பெண்கள் பலரின் பதின்ம வயதுகளில் இருந்த தனிமையைத் தனது இருப்பால் நிறைத்தவை. அவை நம் கைகளில் இருந்து இறங்கிச் சென்ற பின்புதான் அவற்றின் அருமையை நாம் உணர்ந்திருப்போம். அந்தக் காலத்தில் மக்களுக்கு  சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது, மணப்பெண்ணாகப் புகுந்த வீட்டுக்குச் செல்லும் சிறுமிகளுக்கு  ‘மரப்பாச்சி பொம்மை’களைப் பிறந்த வீட்டிலிருந்து கொடுத்துவிடுவார்கள். அந்தப் பொம்மைகளுக்குத் தாவணி கட்டி, கண்ணுக்கு மையிட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, தன் குழந்தையைப் போல் பாவித்து விளையாடுவார்கள் அந்தச் சிறுமிகள். குடும்ப உறவுகளைச் சித்திரிக்கும் வண்ணம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, கணவன், மனைவி என பொம்மை செட்டுகளாகவும் இருக்கும். அன்றாடம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பொம்மைகளாக வைத்து விளையாடுவார்கள். 

இது பொம்மைக் கல்யாணம்!

இப்படி விளையாட்டுப் பொருள்களாகவும், மருத்துவக் குணம் கொண்டவையாகவும் இருந்த மரப்பாச்சிப் பொம்மைகள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் அருக ஆரம்பித்தன. பின்னர், சில கல்யாணங்களில் வெறும் சடங்குக்காக மட்டுமே வைக்கப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக இந்த மரப்பாச்சிப் பொம்மையானது பிளாஸ்டிக் மற்றும் துணி பொம்மைகளாகப் பரிணாமம் அடைந்து வருகிறது. திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு வைபவத்தையும் பொம்மைகளை வைத்து உருவாக்கி அலங்காரமாக வைப்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. அப்படியான‌ பொம்மைகளைத் தயாரித்து கவனம் ஈர்த்துவரும் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த ‘சாய் கல்யாண் க்ரியேஷன்’ கார்த்தியாயினியிடம் பேசினோம்.

இது பொம்மைக் கல்யாணம்!
இது பொம்மைக் கல்யாணம்!

“நான் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வங்கியில் வேலைபார்த்து வந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் வங்கிப் பணியில் இருந்து விலகி, கல்யாண அலங்காரப் பொருள்கள் தயாரிக்கும் வேலையில் இறங்கினேன். கல்யாண வீடுகளில் பிளாஸ்டிக் பொம்மைகளை வைப்பதைப் பார்க்கும்போது, அது ஏதோ ரொம்ப அந்நியமாக தெரிந்தது. அதிலும் சேலைகட்டிய பார்பி பொம்மைகளைப் பார்க்கும்போது, ஏதோ இந்தியாவுக்கு டூர் வந்த வெளிநாட்டினர் சேலை கட்டியிருப்பாங்களே, அதுமாதிரியே இருக்கும், அப்போதுதான், `பிளாஸ்டிக் பொம்மைகளுக்குப் பதிலாக துணியால் ஆன பொம்மைகள் செய்யலாம். சுற்றுச்சூழலுக்கும் கேடு தராது, பார்க்கவும் நம் ஊர் நயத்தோடு அழகாக இருக்கும்’ என ஒரு யோசனை தோன்றியது. என் அத்தை கொலு பொம்மைகள் செய்வதில் கைதேர்ந்தவர். அவரிடமிருந்து சில ஐடியாக்களை எடுத்துக்கொண்டு, என் ஐடியாவையும் சேர்த்து பொம்மைகள் செய்ய ஆரம்பித்தேன். 

இது பொம்மைக் கல்யாணம்!
இது பொம்மைக் கல்யாணம்!

இப்போதைக்கு என் நிறுவனத்தில் 15 பேருக்கு மேல் பணிபுரிகிறார்கள். இந்தப் பொம்மைகளின் முகங்களை கொல்கத்தாவில் இருக்கும் திறமையான கலைஞர்களிடமிருந்து செய்து வாங்குகிறோம். அனைத்து முகங்களையும் தென்னிந்திய முகச்சாயலிலேயே செய்கிறோம். பின்னர், இங்கே துணிகளால் உடல்பாகங்களை உருவாக்கி, குட்டி துணி உடுத்தி, நகை அலங்காரம் செய்வோம். தமிழ்நாட்டுக் கலாசாரம் மட்டுமல்ல... எந்த ஊர்க் கலாசாரமாக இருந்தாலும் அதற்கேற்ற பொம்மைகளை நாங்கள் உருவாக்கித் தருகிறோம். மணமக்கள் எந்த வண்ணத் துணி அணிகிறார்களோ அதையே பொம்மைகளுக்கும் தைத்து உடுத்துகிறோம். சமீபகாலமாக, இந்த பொம்மைகள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும், பிரபலங்களிடம் இருந்தும்கூட ஆர்டர்கள் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது” என்பவர் பொம்மைகளின் விலைகுறித்துக் கூறினார்... 

இது பொம்மைக் கல்யாணம்!
இது பொம்மைக் கல்யாணம்!

“பொம்மைகளின் உயரத்துக்கேற்ப விலை வேறுபடும். தமிழ் மற்றும் தெலுங்குத் திருமணங்களில் 13 வைபவங்கள் உள்ளன. அவற்றை பொம்மைகளாகச் செய்துதர கிட்டத்தட்ட 20,000 ரூபாய் ஆகும். திருமணத்துக்கு 2-7 நாள்கள் முன்பாக ஆர்டர் கொடுத்தால் போதும்’’ என்றார். 

இது பொம்மைக் கல்யாணம்!

அப்புறம் என்ன, இந்த குட்டிக் குட்டி மனிதர்களையும் உங்கள் வீட்டுத் திருமணத்துக்கும் அழைக்கலாமே..!

- ப.சூரியராஜ் படங்கள் : ர.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு