Published:Updated:

டிப்ஸ்...டிப்ஸ்....

டிப்ஸ்...டிப்ஸ்....

ஐடியா
வாசகிகள் பக்கம்

டிப்ஸ்...டிப்ஸ்....

'தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்' என்று நமக்குத் தெரியும். ஆனால், உபயோகிப்பதற்கு எடுக்கும்போது அது இறுகாமல் இருக்க வேண்டுமே..! முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியை வெறுமனே நன்கு சூடாக்கி, அடுப்பை அணைத்துவிடுங்கள். துருவலை அதில் போட்டு, நாலைந்து முறை புரட்டி, ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வையுங்கள். எடுக்கும்போது உதிர் உதிராக இருக்கும். கெட்டியாக இருந்தாலும் ஸ்பூனால் லேசாக சுரண்டும்போதே பூப்பூவாக உதிரும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- எஸ்.மங்கையர்கரசி, வடலூர்

டிப்ஸ்...டிப்ஸ்....

எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் வைத்தால்... அதிலிருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இதையெல்லாம் பக்குவமாக பொறுக்கி, ஓரம் வைத்துவிட்டுச் சாப்பிடுவதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கும். 'அட, இஞ்சி வயித்துக்கு நல்லது... கறிவேப்பிலை தலைமுடிக்கு நல்லது' என்று சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. அந்தப் பொருட்களை எல்லாம் தண்ணீர் விடாமல் அரைத்து, சாதத்தைத் தாளிக்கும்போது  சேர்த்துவிடுங்கள். பிரச்னை தீர்ந்தது!

- எஸ்.நித்யா, சென்னை-56

டிப்ஸ்...டிப்ஸ்....

சாதம் மீந்துவிட்டதா? ஒரு கப் சாதத்தை எடுத்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் கூழாக மசித்து கொள்ளவும். ஒரு கப் பொட்டுக் கடலையை மிக்ஸியில் நைஸாக பவுடராக்கி சாதக் கூழுடன் கலந்து கொள்ளவும். இதில் உப்பு, மிளகாய்த் தூள் கலந்து, விருப்பட்ட காயை தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம். அல்லது வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து பக்கோடாவாக பொரித்தால்... ருசி அசத்தலாக இருக்கும்!

- வரலஷ்மி முத்துசாமி,சென்னை-37

டிப்ஸ்...டிப்ஸ்....

மட்டர் பனீர், சன்னா சுண்டல் முதலியன செய்ய திடீர் ஐடியா தோன்றுகிறது. ஆனால், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றை முன்கூட்டியே ஊற வைக்கவில்லை. கவலையை விடுங்கள். வெறும் வாணலியில் அவற்றைப் போட்டு, ஐந்தாறு நிமிடங்கள் நன்கு வறுக்கவும். பின்னர், இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடா போட்டு, உப்பு சேர்க்காமல் குக்கரில் ஐந்தாறு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால்... நன்கு வெந்திருக்கும். அதிகப்படி தண்ணீரைக் கொட்டிவிடாமல் தாளிப்புடன் சுண்ட விடவும்.

- ஆர்.வனஜா, போளூர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 75
படங்கள்:து.மாரியப்பன்