Published:Updated:

பசுத்தோல் போர்த்திய புலிகளே !

உயிர்களை உரசும் தொடர்

மேனகா காந்தி
படம் :தி.விஜய்

உழவுக்குத் துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி 'மாட்டுப் பொங்கல்’ கொண்டாடும் இந்நேரத்தில், மாடுகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மதங்கள் தோன்றாத காலத்திலிருந்தே கால்நடைகளுக்கு நம் மூதாதையர்கள் கொடுத்து வந்திருக்கும் மரியாதை... அளவிட முடியாதது! சொல்லப் போனால், அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல ஆரம்பித்ததே... கால்நடைகளுடனேயேதான். அதனால்தான் அவை இருக்கும் இடத்தையே புனித இடமாகக் கருதினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பசுத்தோல் போர்த்திய புலிகளே !
##~##

காளை மாட்டை 'நந்திகேஸ்வரர்’ என்று கோயிலில் வைத்து பிரதோஷ பூஜை நடத்தினார்கள். பசுவை சாட்சாத் லட்சுமி தேவியாகவே பாவித்து, 'கோமாதா குலமாதா’ என்று கொண்டாடினார்கள். பார்வதி தேவியை 'பசு மாதிரி அழகானவள்’ என்ற அர்த்தத்தில்தான் 'கௌரி’ என்கிறோம். லட்சுமி தேவி வாசம் செய்யும் இடம் வேண்டுமானால் நாராயணனின் இதயமாக இருக்கலாம். ஆனால், அந்த நாராயணனே பசுவின் உடம்பில்தான் வாசம் செய்கிறார் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அத்தகைய பசுவை துன்புறுத்துகிறவனுக்கு பாவ விமோசனம் என்பதே கிடையாது என்று கருதினார்கள்.

புனித நதிகளில் நீராடுவதால் கிடைக்கும் புண்ணியம், பசுவை வணங்கினால் கிடைக்கும் என்பதும் மூதாதையர்களின் நம்பிக்கை. அதனால்தான் 'கோமதி’, 'கோதாவரி’ என்று புனித நதிகளுக்குப் பெயர் சூட்டினார்கள். பல ஊர்களுக்கும்கூட பசுவின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். குஜராத்தில் இருக்கும் ஊர் 'கோத்ரா’; 'பசுக்களின் தேசம்’ என்பது பொருள். கோபால்கஞ்ச், கோபால்பூர், கோவா, கௌஹாத்தி, கூர்காவோன்... என்று இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

புத்தரை, 'கௌதமன்' என்று நாம் கொண்டாடுவதும் இந்தக் காரணத்தின் அடிப்படையில்தான். நேபாள தேசத்தில் இருந்து வருகிறவர்களை 'கூர்கா’ என்கிறோம் இல்லையா! அது, 'கோரக்ஷா' என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல். 'பசுக்களை பாதுகாக்கிறவர்கள்' என்பதுதான் அந்த வார்த்தைக்கு அர்த்தம்!

'குலம் கோத்திரம்’ என்ற சொற்றொடரில் இருக்கும் 'கோத்திரம்’ என்ற வார்த்தையிலேயே, மனிதனின் வாழ்க்கையோடு எப்படி பசு பிணைந்திருந்திருக்கிறது என்பது புரியும். அதனால்தான் நமது வேதங்கள், 'நாகரிகத்தின் தாய்' என்றே பசுவைக் குறிப்பிட்டுப் பேசுகின்றன.

அரேபிய கதைகளில், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கதாபாத்திரம்... அல்லாவுதீனின் அற்புத விளக்கில் இருந்து வரும் 'ஜீனி’. இதுவே வெள்ளைக்காரர்களின் கதைகள் என்றால்... மந்திரக்கோலோடு உலவும் 'தேவதைகள்’. ஆனால், நமது புராணங்களில் 'காமதேனு’ என்ற பசுதான் கேட்பதையெல்லாம் அள்ளி கொடுக்கும் தெய்வம்!

சரி... நிகழ்காலத்துக்கு வருவோம். மாட்டின் சாணம் மற்றும் அதன் சிறுநீர் போல பக்க விளைவுகள் எதுவும் இல்லாத ஓர் உரம் உண்டா? கிடையாது! மாடுகள் மாதிரி வேறு எந்த விலங்குகளாவது நமக்காக உழைக்கின்றனவா? கிடையாது! எவ்வளவு பாரம் ஏற்றினாலும் அதை இழுக்கின்றன. உடல் நோக அடித்தால் கூட மௌனமாகத்தான் அழுகின்றன. இருந்தாலும் மாடுகளை நாம் ஏன் இப்படி கொடூரமாக நடத்துகிறோம்?

பசுத்தோல் போர்த்திய புலிகளே !

இன்று, அதிக எண்ணிக்கையில் மாடுகளைக் கொல்வது கேரளமும் மேற்குவங்கமும்தான். வாழ்நாள் முழுவதும் உழைப்பையும் பாலையும் கொடுக்கும் இந்த மாடுகளை, அடிமாடுகளானதும் மனிதாபிமானமற்ற முறையில் லாரியில் திணித்து இந்த மாநிலங்களுக்கு ஏற்றி அனுப்புகிறோம். உணவு, தண்ணீர் என்று எதுவும் இல்லாமல் நின்று கொண்டே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் அந்த வாயில்லா ஜீவன்கள், ஒவ்வொரு முறை லாரி பிரேக் அடித்து நிற்கும் போதும் ஒன்றோடு ஒன்று மோதி முகத்தையும் கால்களையும் உடைத்துக் கொள்கின்றன. இதைவிடக் கொடுமை, இறைச்சிக் கூடங்களில் அவை கொடூரமான முறையில் கொல்லப்படுவது. அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அதனால் என்ன... நமது அரசாங்கம் பீற்றிக் கொள்வது மாதிரி உலகிலேயே நமது நாடுதான் அதிக அளவில் தோல் ஏற்றுமதி செய்கிறதே!

காலகாலமாக நாட்டின் சின்னமாக இருந்ததே பசுதான். ஆனால், இடையில் புலி எப்படி நமது தேசிய விலங்கானது என்று புரியவில்லை. ஒருவேளை ஏறக்குறைய ஒழித்துக் கட்டிவிட்ட குற்ற உணர்ச்சியில் புலியை தேசிய விலங்காக ஆக்கிவிட்டோமோ என்னவோ?

ஆனால், அந்த இடத்தை புலியோடு சேர்ந்து பசுக்கள் பங்கு போட்டுக் கொள்ளக்கூடிய நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. தோல் பொருட்களின் வியாபாரமும் ஏற்றுமதியும் மாடுகளை இங்கே வாழவிடாது என்கிற அச்சம் பலருக்கும் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பில், ஆந்திராவில் 25 லட்சம் பேர் வசிக்கும் மாவட்டம் ஒன்றில் வெறும் 1,200 பசு மாடுகள்தான் இருக்கின்றனவாம்!

பசுக்கள் இல்லாத நாட்டில் பாவிகளாக இருக்கப் போகிறதா நம் சந்ததி?!

- சந்திப்போம்...