Published:Updated:

முல்தானிமெட்டி, வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் - முகத்துக்கான மேஜிக்! #BeautyTips

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முல்தானிமெட்டி, வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் - முகத்துக்கான மேஜிக்! #BeautyTips
முல்தானிமெட்டி, வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் - முகத்துக்கான மேஜிக்! #BeautyTips

அதிகப்படியான வெயிலில் செல்வது, பல மணி நேரம் ஏசியில் பணிபுரிவது போன்றவற்றால் பெண்களின் கூந்தலும் சருமமும் பாதிப்புகளைச் சந்திக்கும். இதற்கு, அழகு க்ரீம்களை மட்டுமே பயன்படுத்தினால், நிச்சயம் இளம் வயதிலே வயதான தோற்றம், சருமம் நிற மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

றே நிமிடத்தில் சிகப்பழகு... ஐந்தே நிமிடத்தில் முகப்பொலிவு... இதுதான் அலுவலகம் செல்லும் பெண்களை அதிகம் கவரும் விளம்பரங்கள். நிமிடங்களில் கிடைக்கும் இதுபோன்ற அழகு, அந்த நேரத்துக்கு உதவுமே தவிர, நிரந்தர அழகைக் கொடுக்காது. உங்கள் அழகைத் தக்கவைக்க தினமும் கடைப்பிடிக்கவேண்டிய பியூட்டி டிப்ஸ்களை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அதிகப்படியான வெயிலில் செல்வது, பல மணி நேரம் ஏசியில் பணிபுரிவது போன்றவற்றால் பெண்களின் கூந்தலும் சருமமும் பாதிப்புகளைச் சந்திக்கும். இதற்கு, அழகு க்ரீம்களை மட்டுமே பயன்படுத்தினால், நிச்சயம் இளம் வயதிலே வயதான தோற்றம், சருமம் நிற மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, அழகைத் தக்கவைக்க தொடர்ந்து செய்யவேண்டிய அடிப்படையான விஷயங்கள்...

ஹேர்கேர்:

ஃப்ரீ ஹேர்தான் இப்போதைய ட்ரெண்ட். இதற்காக, தினமும் ஷாம்பு வாஷ் செய்கிறார்கள். இது ஸ்கால்ப்பில் தேங்கும் அழுக்களை நீக்கி பொடுகு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கிறது. எனினும், ஷாம்பு வாஷ் செய்துகொள்வதற்கு முன்பு, ஆயில் மசாஜ் செய்து, அதன்பின் ஹேர் வாஷ் செய்துகொள்வது நல்லது. இதன்மூலம், கூந்தல் வறட்சி ஏற்பட்டு உடைந்துபோவதைத் தடுக்கலாம். ஆயில் மசாஜ் செய்ய, ஆலிவ் ஆயில், நல்லெண்ணய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெட்டிவேர், செம்பருத்திப் பூ, வெந்தயம் போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சி, 4 நாள்கள் வெயிலில்வைகக்வும். பிறகு, ஸ்கால்ப்பில் அப்ளை செய்து மசாஜ் செய்து குளிக்கவும். கூந்தல் வறட்சி நீங்கி, பட்டு போன்று மின்னும்.

மஜாஜ் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், அலுவலகத்துக்குப் புறப்படும்போது ஜோ ஜோ ஆயிலை 10 சொட்டுகளை கூந்தலில் அப்ளை செய்துகொண்டு செல்லலாம். இது, எண்ணெய் அப்ளை செய்த  உணர்வைத் தராது. அதேநேரம், கூந்தல் வறண்டுப்போகாமலும், சிக்கல் இல்லாமலும் பட்டு போன்று இருக்கும்.

அதிகளவு ஹேர் டேமேஜ் ஏற்பட்டிருந்தால், பார்லருக்கு சென்று ஹாட் அல்லது கூல் மசாஜ் செய்துகொள்ளலாம். மேலும், உங்கள் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப ஸ்ட்டீரிமர், ஹேர் பேக், கண்டிசனர் என ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் தேர்வுசெய்து வாரம் ஒருமுறை செய்துகொண்டால், கூந்தலின் பாதிப்பைச் சரிசெய்யலாம்.

முக அழகு:

உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை...

காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவவும். மாசு மருவற்ற முகம் பளிச்சென மிளிரும்.

பேஷ் பேக்:

முல்தானிமெட்டி - ஒரு டீஸ்பூன்

வெள்ளரிக்காய் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்

ரோஸ்வாட்டர் - ஒரு டீஸ்பூன்

இவற்றை ஒன்றாகச் கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவவும். அல்லது, பாலாடையுடன் குங்குமப் பூ, வெள்ளரிச் சாறு, அரைத்த சந்தனம் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பேக் போட்டுக்கொள்வதன் மூலம் முகம் அழகாக மிளிரும்.

இதனைச் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், க்ளென்சிங், டோனிங் மாய்சரைஸிங்கை உங்கள் சருமத்துக்கு ஏற்ப க்ரீம் டைப்பாகவோ, ஜெல் டைப்பாகவோ தேர்வுசெய்து பயன்படுத்தலாம். அல்லது, மாதம் ஒருமுறை பார்லரில் சென்று பேஷியல் செய்துகொள்வதன் மூலம், இறந்த செல்களைச் சருமத்திலிருந்து நீக்கி, முகத்தைப் பளிச்சிட செய்யலாம்.

சரும அழகு:

நல்லெண்ணய்யைச் சூடு செய்து, உடல் முழுவதும் அப்ளை செய்து, நலுங்கு பொடியால் தேய்த்து வாரம் ஒருமுறை குளிக்கலாம். அல்லது, ஆல்மண்ட் ஆயில் ஒரு டீஸ்பூன், ரோஜா ஆயில் ஒரு சொட்டு, லேவண்டர் ஆயில் ஒரு சொட்டு எடுத்து, உடல் முழுவதும் அப்ளை செய்து 2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கலாம்.

ஆபிஸ் கோயிங் பெண்களுக்கான டிப்ஸ்:

முகத்துக்கு நிறத்தின் தன்மைக்கு ஏற்ப, காம்பெக்ட் பவுடரை தேர்வுசெய்து பயன்படுத்தலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தை டச்அப் செய்துகொள்வதன் மூலம், ஃபிரெஷ்ஷாக இருக்கலாம்.

கூல் கலர் ஆடைகளுக்கு கூல் கலர் லிப்ஸ்டிக், வார்ம் கலர் ஆடைகளுக்கு வார்ம் கலர் லிப்ஸ்டிக் என நாம் பயன்படுத்தும் ஆடையின் நிறத்துக்கு ஏற்ப லிப்ஸ்டிக்கை தேர்வுசெய்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு