Published:Updated:

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

 கேபிள் கலாட்டா!
ரிமோட் ரீட்டா
படங்கள் .எம்.உசேன்
 

'' 'மக்கள் தொலைக்காட்சி'யில திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ராத்திரி          9 மணிக்கு ஒளிபரப்பாகற 'கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் சேட்டை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கற கிருத்திகா, 'திண்டுக்கல்’ சரவணனோட லொள்ளு தாங்க முடியலப்பா. நக்கல், நையாண்டி, நகைச்சுவைனு கலந்து கட்டி கும்மாளம் போட்டு, சூப்பரா என்டர்டெயின் பண்றாங்க''னு வாசகிகள் பலர் வாழ்த்து மடல் வாசிக்க, கிருத்திகாவுக்கும், சரவணனுக்கும் 'கங்கிராட்ஸ்’னு கை கொடுக்கக் கிளம்பினேன்!

 

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அழகழகா கண் சிமிட்டி, அழகழகா பல் வரிசைக் காட்டி தொலைக்காட்சியில பார்த்த அதே அழகு மாறாம பேசினாங்க கிருத்திகா. ''எம்.பி.ஏ. முடிச்சுட்டு ஷிப்பிங் கம்பெனியில பி.ஆர்.ஓ. வேலை பார்த்திட்டிருக்கேன் ரீட்டா. காம்பயரிங் வேலை பார்ட் டைம்தான்''னு சர்ப்ரைஸ் கொடுத்து ஆரம்பிச்சவங்க,

''எஃப்.எம்-ல வேலை பார்த்திட்டிருந்த நான், ஜெயா டி.வி-யில 'சினிமா சினிமா’, 'புத்தம் புது பாடல்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டிருந்தேன். பார்த்திருப்பியே நீ?! அப்புறம் 'மக்கள்’ தொலைக்காட்சி வாய்ப்பு வரவே 'பக்'குனு பத்திக்கிட்டேன். தொலைபேசியில உரையாடற நேயர்களை நாங்க கலாய்க்க, அவங்க எங்களைக் கலாய்க்கனு ஹுயூமரை மட்டுமே ஹார்ட் பீட்டா வெச்சு நடத்தற 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ நிகழ்ச்சிக்கு எல்லார்கிட்டயும் நல்ல வரவேற்பு. எங்க டீமே ஏக குஷியில இருக்கோம். இன்னொரு குட் நியூஸ்... ஜெயா டி.வி-யில சீக்கிரமே ஒளிபரப்பாக இருக்கற 'வைஷ்ணவி’ங்கற சீரியல்ல நடிகையாவும் அறிமுகமாகப் போறேன்! பாஸ் மார்க் வாங்கறேனானு பார்த்துட்டு சொல்லு ரீட்டா!''னு சிரிச்சாங்க!

கிளிசரின் ரெடியா கிருத்திகா?!

''ஹலோ... எத்தனை தேன் மிட்டாய் கொடுத்தாங்க கிருத்திகா? அதைவிட ரெண்டு அதிகமா தர்றேன்... என் பேட்டியையும் போடுங்க!''னு தன்னோட டிரேட் மார்க் குறும்போட ஆரம்பிச்சார் 'திண்டுக்கல்’ சரவணன்.

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

''ஒன்பதாவது படிக்கறப்போ 'திண்டுக்கல்’ லியோனி சார்தான் எனக்கு வகுப்பாசிரியர். கிளாஸ்ல எப்பவும் கலகலனு பேசி, எங்களை சிரிக்க வெச்சுட்டே இருப்பார். அந்த இன்ஸ்பிரேஷன்லதான் என்னாலயும் கொஞ்சம் காமெடியில கலக்க முடியுதுனு நினைக்கறேன்''னு தன்னடக்கத்தோட குருபக்தி காட்டினவர்,

''இன்னொரு பக்கம் சினிமாவுலயும் வாய்ப்புகள் தேடி ஓட்டிட்டு இருக்கேன் ரீட்டா. 'ஒரு கல்லூரியின் கதை’யில ஆர்யாவுக்கு ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். சீக்கிரமா ரிலீஸ் ஆகப்போற, பிரேம்ஜி ஹீரோவா நடிக்கற '2010 பாக்கியராஜ்’ங்கற படத்துலயும் ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். 'தம்பி உடையான்’ படத்துல டயலாக் எழுதியிருக்கேன். 'டைரக்டர் சரவணன்'ங்கறதுதான் என்னோட கனவு!''னு வழக்கம்போல கையாலலேயே ஆங்கிள் வெச்சுக் காட்டினாரு சரவணன்!

காமெடி ஸ்கிரிப்ட்டா வெச்சிருக்கீங்களா..?!

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

சன் டி.வி. 'உறவுகள்’ சீரியல்ல ஹீரோவா கலக்கிட்டிருந்த ஸ்ரீ, 'இதயம்’ சீரியல்ல வில்லனா வெளுத்துக் கட்டறாரு. ''எங்கப்பா (சங்கர்) கணேஷ் பெரிய இசையமைப்பாளரா இருந்தாலும், என்னோட சொந்த முயற்சியிலதான் இந்த ஃபீல்டுக்குள்ள அடியெடுத்து வைக்கணும்னு ரொம்பவே கஷ்டப்பட்டேன் ரீட்டா. நிறைய இந்திப் படங்கள்ல உதவி கேமராமேனா வொர்க் பண்ணேன். முதன் முதலா நடிக்க வந்தப்போ, என்னோட சம்பளம் வெறும் ஐம்பது ரூபாதான். படிப்படியா முன்னேறி, இன்னிக்கு சேனல் ரசிகர்கள் எல்லாருக்கும் இந்த ஸ்ரீ அறிமுகமாகியிருக்கான். 'சிவசக்தி’ சீரியலுக்காக சிறந்த நடிகருக்கான விருதை 'சன் குடும்பம் விழா’ல வாங்கினது, ஒரு பூஸ்ட். அன்புக்கு மனைவி, அள்ளி அணைக்க குழந்தை, ஆரோக்கியத்துக்கு ஜிம்முனு என் லைஃப் இப்ப ஜம்முனு போயிட்டு இருக்கு!''னு ரைமிங்கா முடிச்சாரு ஸ்ரீ!

லா... லல்லா... லல்லல்லா!

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

வயிறு வலிக்கு 100% கியாரன்டி தர்ற 'கிரேஸி’ மோகன் டிராமா டீமுல... கிட்டத்தட்ட வெள்ளி விழா தாண்டியும் ஹீரோவா கலக்கிட்டிருக்கறவர் மாது பாலாஜி. சென்னைத் தொலைக்காட்சியில நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கற இவர், நடிக்க வந்து 31 வருஷம் ஆயிடுச்சாம்! 'வாழ்த்துக்கள் சார்'னு சொல்லிட்டு சந்திச்சேன்.

''இப்போ வரையிலும் இந்த நாடக கம்பெனி தரத்தோடு இருக்கறதுக்கு காரணமே... எங்க அண்ணன் மோகனோட உழைப்புதான் ரீட்டா. எப்பவும் ஷோவுக்கு புதுசு புதுசா ஏதாவது யோசிச்சுட்டே இருப்பாரு. இதுவரைக்கும் 5,000 மேடைகள் ஏறியாச்சு. டி.வி. சீரியல்களும் நிறைய பண்ணியாச்சு. 25 கார்ப்பரேட் பிலிம்ஸ் தயாரிச்சி கொடுத்திருக்கோம். எங்களோட புதுவரவு, 'வம்பு கனா ஒன்று கண்டேன்’ங்கற நாடகம்தான். அதுக்கான பிராக்டீஸ் தீவிரமா போயிக்கிட்டிருக்கு. இதுல வயிறு வலிக்கு நாங்க 200% கியாரண்டி''னு வழக்கமான டிரேட் மார்க் சிரிப்போட சொன்னாரு பாலாஜி!

சூப்பர் ஜி!

வாசகிகள் விமர்சனம்

கொடூர வேண்டுதல்!

 

''சன் டி.வி. 'தங்கம்’ தொடரில் எல்லோரையும் அலற வைக்கும் கேரக்டர் இளவஞ்சி. ஆனால், அவளையே, அவளுடைய ஓரகத்தி அதிர வைப்பது போல் ஒரு காட்சி. அதாவது, வேண்டுதலுக்காக இளவஞ்சி தலையில் நூற்றியெட்டு தேங்காய்களை உடைக்க வைக்கிறார் ஓரகத்தி. பார்த்தவர்களெல்லாம் பதைபதைத்துப் போயிருப்பார்கள் என்பதுதான் உண்மை. இப்படியரு கொடூரமான வேண்டுதலை, சுயபுத்தி உள்ள எவருமே வேண்டமாட்டார்கள். ஒரு தேங்காயை மண்டையில் உடைத்தாலே மூளை கலங்கிவிடும், நூற்றியெட்டு தேங்காய் என்றால் 'கபால மோட்சம்’தான்! பல லட்சம் பேர் பார்க்கும் சீரியலில் இப்படி படுபயங்கரமான காட்சியை வைத்தது வருந்தத்துக்குரியது'' என்று பொருமுகிறார் பெங்களூரில் இருந்து ஹைமா ஜெயராமன்.

நெகிழ வைத்த நடிகர்திலகம்!

''கலைஞர் டி.வி-யில் 'மறக்க முடியுமா’ நிகழ்ச்சியில், ஜே.பி.சந்திரபாபுவின் சகோதரர் சொன்ன சம்பவம் நெஞ்சை உருக்கியது. சந்திரபாபுவின் அம்மா வைத்த மீன்குழம்பை ஷூட்டிங் ஸ்பாட்டில் ருசி பார்த்து, அதில் உருகிப் போன நடிகர் திலகம் சிவாஜி, 'உங்க அம்மாவை இப்பவே பார்க்கணும்யா...' என்று காரை அனுப்பி வரவழைத்திருக்கிறார். வந்திறங்கிய அம்மாவை நெஞ்சுருக வணங்கிய சிவாஜி, 'இந்த வணக்கம் நீங்க வெச்ச மீன் குழம்புக்காக இல்ல... இப்படியரு மகாநடிகனை நீங்க பெத்ததுக்காக' என்று வெள்ளந்தியாக புகழ்ந்தாராம். என்னே நடிகர்திலகத்தின் பெருந்தன்மை!''  என்று நெகிழ்கிறார் கோவையில் இருந்து பத்மா திருமலை.

கடவுளா... யந்திரமா?

ஜெயா பிளஸ் சேனலில், 'தெரிஞ்சிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியில் மகேஷ் ஐயர் என்பவர், நேயர்களின் கேள்விக்கு, 'ராசி கற்கள் சொல்லி அணியும் முறை, யந்திரம் வணங்கும் முறையைப் பற்றி சொன்னார். அதற்கு, 'நேயர் இதெல்லாம் கண்டிப்பாக செய்யத்தான் வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே, 'ஆமாம். கடவுள் சிலைக்கே ஜலம், பூ, நெல்மணி வைத்த பிறகுதானே பிரதிஷ்டை நடக்கிறது. யந்திரம் அதைவிட முக்கியமானதாயிற்றே!' என்றார் மகேஷ். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ச்சியாகிவிட்டேன். கடவுளைவிட, யந்திரம் உசத்தியா? இவரெல்லாம் வேதம் படித்து என்ன பிரயோஜனம்? பதிலளிப்பதில் கவனம் வேண்டாமா?'’ என்று பொருமுகிறார் சென்னையில் இருந்து ராஜேஸ்வரி வெங்கட்.

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கிளிசரின் ரெடியா கிருத்திகா ?!

75