தன் தேவ கான குரலால் உலகையே தாலாட்டிய சங்கீத அமிர்தம், எம்.எஸ். சுப்புலட்சுமி! அவரின் 95-வது பிறந்த நாளையட்டி, உலகம் முழுவதும் 'கீதம் மதுரம்’ என்கிற பெயரில் எம்.எஸ்-ன் பாடல்களைத் தொகுக்கும் கச்சேரிகளை நடத்த இருக்கிறது 'உத்சவ் மியூஸிக்’ நிறுவனம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி என இதற்காக நாடெங்கிலும் இருந்து வந்து இணைந்திருக்கும் இளம் இசைப் பெண்கள், இந்த நிகழ்ச்சியைத் தொடுக்கிறார்கள்.

சமீபத்தில் சென்னை, மதுரையில் கச்சேரி நடத்தியிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று மார்கழி இசை சீஸனை மனதில் வைத்து இசைமழை பொழிய இருக்கிறார்கள். அதற்கான பயிற்சியில் இருந்த அந்த இசைப் பறவைகளில் சிலரை, ஓர் சங்கீத அந்தியில் சந்தித்தோம்!

'பஜரே யதுநாதம்...’ என பீலு ராகத்தில், வருடும் குரலில் கீ-போர்டு வாசித்தபடியே பாடிய ஜனனி, ஸ்டெல்லா மேரீஸ் ஸ்டூடன்ட். ''ஆறு வயசில் இருந்து பாட்டு, வீணை, வயலின், கீ-போர்டுனு எல்லாத்தையும் கத்துக்கிட்டு, 800 மேடைகள்ல கச்சேரி பண்ணிருக்கேன். என் சின்ன வயசில் எம்.எஸ். அம்மாவை ஒருமுறை போய் பார்த்து, 'குறையன்றுமில்லை...’ பாட்டை அவங்ககிட்ட பாடிக் காட்டினேன். 'நீ நிச்சயம் பெரிய ஆளா வருவே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அன்னிக்கு நான் அடைஞ்ச சந்தோஷம், இப்ப இந்த நிகழ்ச்சி மூலமா எனக்குத் திரும்பவும் கிடைக்கற மாதிரி உணர்றேன்!'' என்றார் விழிகள் மூடாமல்.

மூன்று வயது முதல், விரல்களால் வித்தை காட்டி மிருதங்க வித்வானாக பல மேடைகளை அதிர வைத்துக் கொண்டிருக்கும் லாவண்யா, மும்பையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர். ''சங்கீதப் பரம்பரையில் வந்தவ நான். அப்பா, கணவர்னு வீட்டுல நிறைய மிருதங்க வித்வான்கள் இருக்கோம். எம்.எஸ் அம்மாவோட எல்லா பாட்டுக்களையும் கத்துக்கிட்டா, அதுவே ஒரு வரம்தான்!'' என்றவர், தான் பயிற்சி முடித்து வருவதற்காக, எதிரே காத்திருக்கும் தன் ஒரு வயது மகளை கண்களாலேயே ஒருமுறை அணைத்துக் கொண்டது... அழகு!

ஒன்பது வயதிலிருந்து கடத்தை மடியில் கிடத்தியவர் ரம்யா. ''பெண்கள் அதிகம் கத்துக்காத வாத்தியம் இது. ஆனாலும், அதில் ஆர்வமாகி, சின்ஸியரா பயிற்சி எடுத்தேன். இப்போ இந்த மாதிரி ஒரு குழுவோட சேர்ந்து வாசிக்கிற வாய்ப்பு, அற்புதமான அனுபவமா இருக்கு'' என்றார் கம்பீரமாக.

ஹைதராபாத்திலிருந்து வந்திருந்த சுமிதா மாதவ், ஒரு வழக்கறிஞர். பரத நாட்டியக் கலைஞரும்கூட. ''ஓயாமல் பிராக்டீஸ் செஞ்ச தாலோ என்னவோ... சென்னை கச்சேரியில் பாட முடியாமல் தொண்டை புண்ணாயிடுச்சு. ஆனா, மதுரையில் அமர்க்களமா பாடிட்டேன். இந்த கச்சேரிகள் எல்லாம் முடிச்சுத் திரும்பும்வரை, என்னைவிட என் குரலைப் பத்திரமா பார்த்துக்கணும்!'' என்றார் புன்னகை யுடன்.

இசையரசியின் பாடல்களுக்காகத் தயாராகும் இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்!