பன்னீர்ப் பூக்கள், ஈறுகள் தெரியச் சிரித் துக் கொண்டிருந்த ஒரு மழை நாளில், நானும் லலிதாவும் சந்தித்தோம். நீலாங்கரையில் மழை தேவதை தன் பரிபூரண அன்பை பூச்சொரிந்த அற்புதமானதொரு மாலை அது. ''என்ன சுமதி...'' எனும் லலிதாவின் குரல், எங்களது 25 ஆண்டு கால நட்பின் ஆழத்தையும், உறவின் வாஞ்சையையும் சுமந்து வீட்டுக்குள் நுழைந்தபொழுது, பூக்களுக்கு நடுவே ஏற்றப்பட்டு இருந்த சிறிய மெழுகுத் தீபங்கள் செல்லமாகச் சுழித்தபடி மேலும் சுடர்விட ஆரம்பித் தன. தரை அதிராமல் அவர் நடந்து வந்து உட்கார்ந்ததை, சுருக்க மற்ற அந்த இருக்கை அவர் அறியாவண் ணம் எனக்குச் சொன் னது.

மதுரை, தியாகராசர் கல்லூரியில் எனது முதுகலைப் பட்டப் படிப்பு, எனக்குத் தந்த பல பொக்கிஷங்களுள் லலிதாவின் தோழமையும் ஒன்று. இன்றைக்கும் என்னை மிக வசீகரிக்கின்ற, வாய் மலர்ந்த சிரிப்புடன் அவர் எனக்கு அறிமுகமான அந்த நாளின் வண்ணம், இனிப்பு என்றே என் நினைவில் பதிந்திருக்கின்றது.

ஒரு விடுமுறை நாளில் என்.எஸ்.எஸ். எனப்படுகின்ற சமுதாயப் பணிக்காக மதுரை அருகில் இருக்கின்ற 'திருமோகூர்’ கோயிலுக்கு, விடுதி மாணவிகளுடன் பேருந்தில் புறப்பட்டோம். இடையில் பூக்கூடையுடன், பெரியதொரு தாமரைப் பூப்போலச் சிரித்தபடி வந்த லலிதாவை அது ஏற்றிக்கொண்ட அன்றும் ஒரு மழை நாள்தான். கூடை நிறைய உதிரியாய்ப் பலவகைப் பூக்கள். அவற்றை அழகாக நாரில் கட்டியபடி எங்களில் ஒருவராக இணைந்து கொண்ட லலிதா, எனது மதிப்புக்குரிய பேராசிரியர் சுகுமாறன் அவர்களின் மனைவி.

பேரன்பின் ஒரு துளியை லலிதா அன்றைய தினம் கட்டுச்சாதப் பொட்டலமென, சிறுதீனி டப்பாக்களெனப் பிட்டுப் பிட்டு எங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார். வீட்டிலிருந்து அக்கறையோடு தயாரித்துக் கொண்டு வந்திருந்த பதார்த்தங்களை அம்மாவுக்குரிய புரிதலோடும், தோழிக்குரிய உற்சாகத்தோடும் பரிமாறிய லலிதாவின் அந்தக் கைகளில் இருந்த மல்லிகை மணத்தை, இன்னமும்கூட சமயங்களில் புளியோதரைக் கட்டுச் சாதத்தில் நான் உணர்ந்திருக்கின்றேன். அன்று ஆழ்மனத்தில் விழுந்த அந்த ஒரு சொட்டு அமுதம்தான், இன்றும் என் வாழ்வின் எல்லாக் காலகட்டத்திலும் உடன் நிற்கின்ற வற்றாத சுனையாய் ஊறிக் கொண்டிருக்கிறது; தோள் கொடுக்கும் விரிமரமாய்க் கிளைத்து நிற்கிறது.

என் வளரிளம் பருவத்தின் ஆளுமையைச் செதுக்கியதில், லலிதாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஒரு கூட்டுக் குடும்பத்தின் பொறுப்புகளைச் சுணங்காமல் சுமக்கின்ற மருமகளாக, தன் கணவர் மீது மட்டற்ற காதலும் புரிந்துணர்வும் கொண்ட மனைவியாக, தனது இரண்டு குழந்தைகளுக்கான வளர்ப்பிலே முழு ஈடுபாடுகொண்ட தாயாக மட்டுமே லலிதா எனக்கு ஆதர்சமாகவில்லை. அபாரமான ரசிப்புத் தன்மையும், தமிழ் இலக்கியத்தில் ஆழமான ஈடுபாடும், வாசிப்பும் உடைய கலா பூர்வமான பெண்ணாகவும் என்னை ஈர்த்தவர் அவர்.

அவசரச் சமையலான உப்புமாவாகட்டும், நிதானித்துப் போடுகின்ற கோலமாகட்டும், ரசனையோடு உடுத்துகின்ற புடவையாகட்டும்... எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியும், ஈடுபாடும், கவித்துவமான பகிரலும் லலிதாவிடமிருக்கும். தமிழின் செவ்வியல் வாசிப்பையும், நவீனத் துவத்தின் அறிமுகத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் பேராசிரியர் சுகுமாறன் என்றால், தனது கடிதங்கள் மூலமாக தி.ஜ.ரா-வின் 'அம்மா வந்தாள்’, 'மரப்பசு’ இவற்றையெல்லாம் உருகி, உருகி எனக்குள் விதைத்தது லலிதாதான். கல்லூரியில் நடைபெறுகின்ற எனது நாட்டிய நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்புக்கள் ஒன்றைக்கூடத் தவறவிட்டதில்லை அவர். முகம் மலர்ந்த பெருமை யுடன் முன் வரிசையில் அவர் அமர்ந்து ரசித்த அந்த நாட்களை, இந்த மழை மாலை விசிறிவிட, கனன்று மெதுவாய் எரிந்த நினைவுக் கங்குகளின் இதத்தில் இருவருமே இளைப்பாறத் துவங்கினோம்.

செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த லலிதா, ஒருபோதும் மிகையாகத் தன்னை அதன் வழி வெளிப் படுத்திக் கொண்டதே இல்லை. 'லலிதா ஜுவல்லரியின் உரிமை யாளர் என் தந்தை' எனும் தன்முனைப்போ, கர்வமோ சிறிதுமில்லாதவர்.

தனக்கான விழுமியங்களுடன், உறுதியான நெறிமுறைகளுடன், அசாத்தியமான நம்பிக்கை யுடன், இந்தக் கணம்வரை வாழ்வின் மீது பெருங்காதலுடன் இருக்கின்ற லலிதாவின் உலகம்... குடும்பம், நட்பு, ரசனை, சேவை எனும் துளைகள் அடங்கிய சிறு மூங்கில்தான். ஆனால், அது என்னிடம் பகிர்ந்துகொண்ட இசையோ எனது சுகத்தைப் பெருக்கியும், துக்கத்தைக் குறைத்தும் இன்றுவரை உடன் வருகின்ற பெருவனத்துப் புல்லாங்குழல். அப்பாவை இழந்து கையறு நிலையில் நான் துக்கித்து இருக்கையிலும், எனது முதல் பெண் குழந்தை ஸரயுவைப் பார்க்க வந்தபோதும், லலிதா என் கரம்பிடித்தபோது உணர்ந்த நெகிழ்வும், ஆதரவும்... இன்றும் என் கரங்களுக்குள் சேமிக்கப்பட்டிருக்கிறது.

அருகிலிருந்த வீணையை எடுத்து லலிதாவை வாசிக்கச் சொன்னேன். அந்த முற்றத்தில் சப்பணமிட்டு, ஒரு குழந்தையைக் கையாள்வது போல் அதனை மடியில் லலிதா இருத்திக் கொண்டதும், மிக அருகாக அமர்ந்து அதனை நான் லயித்துக் கேட்டதும், அந்த மாலையினை சோபிதமாக்கிய அபூர்வ நிமிடங்கள்.

தியாகராசர் கல்லூரியை ஒட்டிய தெப்பக்குள மும், எதிர்த்தாற் போலிருந்த முக்தீஸ்வரர் கோயில் படிக்கட்டுகளும், விடுதியின் ஜன்னல் களும், தேநீர் கடையும், வகுப்பறைகளும், தோழி களின் குரல்களும் மங்கிய நிழலசைவுகளென நினைவுத் திரை விலக்கி பிம்பமாடின. இருவருமே தத்தம் மனவெளியின் சுகானுபவத்தை அனுபவித்தபடி சற்று நேரம் மௌனமாயிருந்தோம் கலைய மனமின்றி. பன்னீர்ப்பூ வாசம் சுமந்து வந்த மென்காற்று மனமிளக்கியது. அவரது தோளில் மெல்லச் சாய்ந்தபொழுது, ''எப்போதும் இது உங்களுக்கு இருக்கும்'' என்ற லலிதாவின் குரல், 'குறையன்றுமில்லை’ எனும் பாடலாய் ஒலித்தது.

பவளமல்லிப் பூக்கள் என்றால் லலிதாவுக்கு உயிர். அவை தரையில் உதிர்ந்திருக்க, தள்ளி அமர்ந்தபடி அவற்றைப் பார்த்தும், முகர்ந்தும் வாழ்வின் உயிர்ப்பைச் சுவைக்க எனக்குக் கற்றுத் தந்தது லலிதாதான். காரில் அவர் ஏறுவதற்கு முன்பாக, சென்ற கோடை விடுமுறையில் திருமோகூர் சென்று தாமரைக் குளத்தைப் பார்த்து வந்ததைச் சொன்னேன். நாங்களிருவரும் சேர்ந்து வெயிலையும் பொருட்படுத்தாது அக்குளக்கரையில் அமர்ந்திருந்ததையும், திரும்புகையில் சுவாசம் முழுக்கத் தாமரைகளைச் சுமந்து வந்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டவர், ''நம்மால் முடிந்தது பூக்களை மலர விடுவதும், அவற்றை நசுக்காமல் முகர்வதும்தானே சுமதி...? நிஜத்தில் பூக்களைப் புரிந்து கொண்டால்... மனிதர்களைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்பட மாட்டோம்தானே?!'' என்று சிரித்தார்.

பவளமல்லி பூத்தாற்போல் பரவசமாயிருந்தது. சிந்தாமல் லலிதாவின் அந்தச் சிரிப்பை இமை விரித்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன். இரவு இறுக அணைத்திருந்த வானில் நிலவோ, நட்சத்திரங்களோ தென்படவில்லை. மெல்லிய ஒளிக்கீற்றென மினுங்கிய லலிதாவின் மூக்குத்தி, அன்பின் பால்வீதியில் தனித்ததொரு துருவ நட்சத்திரமாக மிளிர, ஊஞ்சலின் மீது வைக்கப்பட்டிருந்த ஜாதி மல்லியின் சுருள் வட்டத்தில் நிலா எழும்பாமல் ஒளிந்து கொண்டு இருந்தது!

- இறகு வருடும்...