வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

'பர்த் டே'க்கு இல்லை... எனக்கு!

என் மகன் மூன்றாம் வகுப்பு படித்தபோது, அவன் பிறந்த நாள் அன்று கலர் டிரெஸ் அணிந்து சந்தோஷமாகப் பள்ளிக்குச் சென்றான். நானும் அவனுமாக எல்லா ஆசிரியர்களுக்கும் ஸ்வீட் கொடுத்தோம். அப்போது ஒரு மிஸ், ''டிரெஸ் க்யூட்டா இருக்கே... 'பர்த் டே’க்கு எடுத்ததா?'' என அன்பாகக் கேட்க, இவன் சட்டென்று, ''இல்லை மிஸ்... எனக்கு எடுத்தது!'' என்றான் சீரியஸாக. நானும், மிஸ்ஸும் சத்தமாகச் சிரித்துவிட்டோம். பிறகு, அந்த ஜோக்கை கேட்டு, மொத்த ஸ்கூலும் அன்று முழுவதும் சிரித்தது... அன் லிமிட்டெட்!

- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

குடத்தைக் குளிப்பாட்டறாங்க!

காலை வேளையில் அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தபோது, மூன்று வயது மகன் விசும்பியபடியே வந்து, ''அம்மா என்னைக் குளிப்பாட்டு'' என்று நச்சரித்தான். ''குழாயடியில் பாட்டி இருக்காங்க... அங்க போ. அவங்க குளிக்க வைப்பாங்க'' என்று அனுப்பி வைத்தேன். போனவன் சில நிமிடங்களில் அழுதபடியே மீண்டும் என்னிடம் வர, என்னவென்று விசாரித்தேன். ''அம்மா, பாட்டி அங்க குடத்துக்கு எல்லாம் சோப்பு போட்டு அழகா குளிப்பாட்டுறாங்க. என்னைய மட்டும் குளிக்க வைக்க மாட்டேங்கிறாங்க'' என்று அழுகையும், மழலையுமாக அவன் சொல்ல, சமையல் டென்ஷனையும் மறந்து சிரித்தேன். நீங்களும்தானே?!

- இரா.தீபா, தச்சநல்லூர்

'கொசுதானே கதவைச் சாத்தணும்..?’

சாயந்திர நேரம் கொசு வீட்டுக்குள் வந்துவிடும் என்பதால்... கதவு, ஜன்னல்களைச் சாத்திவிடுவோம். 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் வருபவர்கள் எல்லோரும் கொஞ்சமாகக் கதவை திறந்துகொண்டு, அவசரமாக உள்ளே வந்து கதவை சாத்திவிடுவோம். ஒருநாள் மாலை வெளியே விளையாடச் சென்றிருந்த ஐந்து வயதுப் பேரன் விகாஸ், கொஞ்சமாகக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே வந்தான். ஆனால், அவன் கதவை மீண்டும் சாத்தாமல் விட, ''கொசு அத்தனையும் உள்ளே வந்துடும்... கதவை சாத்தாம வந்துட்டியேடா...'' என்றேன் கோபமாக. உடனே அந்தச் சுட்டி, ''நீதானே பாட்டி, எப்போதும் கடைசியா வர்றவங்க கதவைச் சாத்திட்டு வரணும்னு சொல்வே..? இப்போ எனக்கப்புறம் கொசுதானே வந்துச்சு. அப்போ அதுங்கதானே கதவைச் சாத்தணும்..?'' என்று சீரியஸாகப் பேசியதும், வீடே சிரிப்பில் அதிர்ந்தது!

- விஜயா ராஜன், பெங்களூரு