ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது திருமணங்களை அடையாளப்படுத்தும் விதமாகத் தனித்துவமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்கின்றனர். அவ்வகையில் தங்களுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பழக்கவழக்கங்களைக் கொண்ட கொங்கணி சமூகத்தினர், தங்கள் வீட்டுத் திருமணங்களை ஊரையே கூட்டித் திருவிழாவைப்போல நிகழ்த்தி மகிழ்கிறார்கள். கொண்டாட்டங்கள் நிறைந்த கொங்கணித் திருமணத்தைப் பற்றியும், அதன் சடங்குகளைப் பற்றியும் கூறுகிறார் இச்சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவ்கூர்.

மாப்பிள்ளை அழைப்பு (Edur Kansani)

திருமண நாள் காலையில் மணமகளின் சகோதரனும் தாய்மாமாவும் உறவினர்களுடன் மணமகன் வீட்டுக்கு மேளதாளத்துடன் சென்று, தங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வரும்படி அழைப்பர். மணமகனும் மகிழ்ச்சியோடு இனிப்புகள், பூக்கள் மற்றும் மணப்பெண்ணின் வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கவர்வதற்காக சிறு சிறு பரிசுப் பொருள்களையும் எடுத்துச் செல்வார்.

மணமகன் திருமண மண்டபத்துக்கு வரும்போது, பெண் வீட்டார் மங்களப் பொருள்கள் நிறைந்த தட்டினை மாப்பிள்ளை வீட்டாரிடம் பகிர்ந்துகொண்டு குங்குமம் கலந்த நீரால் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுப்பர். மணமகளின் தந்தை மாப்பிள்ளையின் கையில் ஒரு தேங்காயைக் கொடுத்து மாலை அணிவித்து மணமேடைக்கு அழைத்துவந்து அமர வைப்பார்.

பூணூல் இடுதல் (Phool Muddi)

மாப்பிள்ளையுடன் திருமணமாகாத அவரது சகோதரரும் மண மேடையில் அமர வைக்கப்படுவார். பின் மணமகளின் பெற்றோர் மணமகனின் கால்களை மஞ்சள் கலந்த நீரால் கழுவி, பூணூல் அணிவித்து மோதிரம் போடுவர். மாப்பிள்ளைக்குத் தலைப்பாகை அணிவித்து ஐந்து வகையான இனிப்புகளும் பாலும் கொடுப்பார்கள். பின் மணமகனுக்கும் அவரது சகோதரருக்கும் புத்தாடை அளித்து ஆசி வழங்குவர்.

இப்போது மணமகளின் முறை, திருமண மண்டபத்துக்கு வந்த மணப்பெண்ணை, மணமகன் வீட்டார் ஆரத்தியெடுத்து வரவேற்று மணமேடையில் மணமகனுக்கு அருகில் அமர வைப்பார்கள். மணமகளின் சகோதரியும் மணமேடையில் அமருவார். மணமகனின் தாய் மணப்பெண்ணுக்குப் புடவை, ஆபரணங்கள் வழங்கித் தலையில் பூச்சூட்டி ஆசி வழங்குவார். மணமகனுக்குக் கொடுத்தது போலவே ஐந்து வகை இனிப்புகளும் பாலும் மணமகளுக்கும் வழங்கப்படும். மணமகளின் சகோதரிக்கும் புத்தாடை அளித்து ஆசி வழங்குவர்.

திருமண பூஜை (Reethi Rivaz)

திருமணம் சிறப்பாக நடைபெறுவதற்காக, திருமணத்தன்று காலையில் மணமகளின் வீட்டில் பண்டிதர்களால் பூஜை நடத்தப்படும். பின் மணமகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று, சாதாரணமான ஒரு புடவையை அணிந்து கொள்வார். பின்னர், அவர் திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்.

கங்கா பூஜை (Ghade Udhak)

நீர் நிரப்பப்பட்ட ஐந்து பித்தளை கலசங்களை மணமக்களின் குலதெய்வத்தின் முன்வைத்து மணப்பெண்ணுக்கு ஒரு கலசம், அவரின் தாயார் மற்றும் சகோதரிக்கு தலா ஒரு கலசம். அதேபோல மணமகனின் தாயார் மற்றும் சகோதரிக்கும் வழங்கி, பண்டிதர்களின் வழிநடத்துதல் மூலம் கங்கா பூஜை செய்யப்படும்.

காசி யாத்திரை (Kaashi Yatra)

இதுவரை நடந்த சடங்குகளால் மிகவும் களைப்படைந்த மாப்பிள்ளை ஒரு குடை மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி காசி யாத்திரை சென்று தியானம் செய்யப்போவதாகச் சொல்வார். உடனே மாப்பிள்ளையின் தந்தை அவரைத் தடுத்து, வாழ்க்கையின் நல்லொழுக்கங்களைப் பற்றி அவரிடம் பேசி சமாதானப்படுத்துவார். பின்னர் மாப்பிள்ளைக்குப் பணம், பரிசுகள், புத்தாடை வழங்கி, ஆரத்தி எடுத்து, காலை உணவுக்கு அழைத்துச்செல்வர்.

தாரே மணி அணிவித்தல் (Dhaare Mani)

மணப்பெண்ணுக்குப் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் அணிவிப்பர். அதன்பின் கொங்கணி சமூகத்தில் முதல் மாங்கல்யம் என அழைக்கப்படும் தாரே மணியான பவளம் மற்றும் கறுப்பு மணிகள் கோக்கப்பட்ட தங்கச்சங்கிலியை மணப்பெண்ணின் தாயார் தன் பெண்ணுக்கு அணிவிப்பார்.

தாம்பூலத் தட்டு (Talee - Thali or Plate )

புத்தாடை உடுத்திய மணமகன் மணமேடைக்கு அழைத்து வரப்படுவார். மணமகளின் தாயார் ஒரு தாம்பூலத் தட்டில் இரண்டு புடவைகள், வெற்றிலைப் பாக்கு, பூக்கள், பச்சரிசி, தேங்காய், ஜாக்கெட் துணி, குங்குமம் ஆகியவற்றைத் தயாராக வைத்திருப்பார். அதேபோல மணமகனின் தாயார் திருமாங்கல்யம், பூக்கள், பச்சரிசி, வெள்ளிக் குங்குமச்சிமிழ், தந்தத்திலான சீப்பு, கண்ணாடி, திருமணப் புடவை, கண் மை ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தட்டில் வைத்திருப்பார். மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகனின் முன்பு இந்தத் தட்டுகளை வைத்து, பின் மணமக்களின் பெற்றோர் மணமகனுக்கு ஆரத்தி எடுப்பர்.

பெண் அழைத்தல் (Anthar Paat)

புதிய பட்டு உடுத்திய மணப்பெண்ணை பார்க்க முடியாதபடி, துணியால் திரையிட்டு, மலர் தூவி மங்கள இசை முழங்க அழைத்து வருவார்கள். பின் மணமகள் தன் தாய்மாமாவின் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு, பண்டிதர்கள் மந்திரம் முழங்க மணமேடைக்கு வந்தமர்வார்.

கன்னிகா தானம் (Dhaar Votuchain)

லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளிப் பாத்திரமும் அதன்மேல் ஒரு தேங்காயும் வைக்கப்படும். அதில் மணமக்களும் மற்றவர்களும் பண்டிதர்கள் கூறியவாறு தமது கைகளால் பாலை ஊற்றுவார்கள். அதன்பின் மணமகனின் பெற்றோரால் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் திருமாங்கல்யத்தை, பெரியோர் ஆசியுடன் மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவார். பெற்றோர் மணமக்களின் கன்னத்திலும் கைகளிலும் மஞ்சள் தடவி, அட்சதைத் தூவி ஆசி வழங்குவர். பின் மஞ்சள் காப்பு மணமக்களின் கையில் கட்டப்படும். இப்போது பெண்ணின் தாயார் புனிதமான யாக வேள்வியைத் தொடங்கி வைப்பார்.

மெட்டி அணிவித்தல் (Toe Rings)

மணமகளின் தாய்மாமா மணப் பெண்ணுக்கு மெட்டி அணிவித்து விடுவார். பின் மணமக்கள் பண்டிதர் அறிவுரைப்படி அக்னி யாகத்தை ஏழு முறை வலம்வந்து வணங்குவர். பின் திருமணமான பெண் என்பதற்கு அடையாளமாக மணமகளின் தாயார் தன் பெண்ணுக்குத் தாம்பூலம் வழங்கி ஆசியளித்து. தன் மகள் சிக்கனமாகச் செலவு செய்பவள் என்பதற்கு அடையாளமாக ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அவரது முந்தானையில் முடிந்து வைப்பார்.

புதுப்பெயர் சூட்டல் (Keeping the Name)

இச்சமூகத்தில் திருமணமான பெண்ணுக்குப் புதுப்பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது. ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில்லை. மணமகனின் தாயார், திருமண மேடையிலேயே தன் மருமகளின் காதில் அவளுக்கான புதுப்பெயரை ஐந்து முறை மெதுவாகக் கூறுவார். இதுபோன்ற பல வித்தியாசமான சடங்குகளுடன் கொங்கணித் திருமணங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

- சு.சூர்யாகோமதி

படங்கள் : ‘ஃபோகஸ் ஸ்டூடியோ’ சென்னை