முகம் அறியாத இருவர் திருமணம் எனும் பந்தத்தில் நுழைந்து ஓருயிராவது அவ்வளவு எளிதல்ல. தனக்கு மனைவியாக வருபவளை சக மனுஷியாக நடத்த வேண்டிய கடமை ஒவ்வோர் ஆணுக்கும் உள்ளது. அதேபோல, புகுந்த வீட்டு உறவுகளோடு பாசப்பிணைப்பு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது. எவ்வளவுதான் முற்போக்குப் பேசி யதார்த்தமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் இயல்பாக ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் அடங்கியிருக்கும் அந்த மிருகம் எப்போதாவது தலைகாட்ட ஆரம்பித்துவிட்டால் அதன்பின் அந்தத் திருமண வாழ்வே நரகமாகிப் போகும்.

தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி ஆண் பெண் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளது. திருமணம் நிச்சயமான உடனேயே இதயம் இடம் மாறுவதற்கு முன்பாகக் கைபேசி எண்கள் இடம்மாறுகின்றன. முகநூல் பக்கம், வாட்ஸ்அப் என அவர்கள் வம்பளந்து விளையாட பல தளங்கள் உள்ளன. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் இந்தத் தளங்களே இன்றைய அளவுகோலாக உள்ளது. ஒருவரது முகநூல் பக்கத்தில் உள்ள பகிர்வுகளை வைத்தே அவரது கேரக்டரை முடிவு செய்யும் ட்ரெண்ட் இப்போதைய திருமணங்களில் இயல்பாகியுள்ளது.

உரையாடலுக்கான தளங்கள் எவ்வளவு விரிவடைந்திருந்தாலும், திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணின் மனதிலும் பெண்ணின் மனதிலும் அடுக்கடுக்காகக் கேள்விகள் முளைக்கும். யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் அந்தக் கேள்விகள் மனதுக்குள் புதைக்கப்படும். பதில் தெரியாத கேள்விகளின் பதைபதைப்புடனே இருவரும் காணப்படுவார்கள். இயல்பாகப் பழகவும் முடியாது. இருவருக்கும் இடையில் இதுவே ஒருவித தயக்கத்தை உருவாக்கும். இல்லறம் எனும் நல்லறத்தில் இணையப்போகும் அந்த இரண்டு உள்ளங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் உளவியல் நிபுணர் பாபு ரங்கராஜன்.

மணப்பெண்: புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் சுதந்திரம் கிடைக்குமா?

‘`திருமண பந்தத்தில் பெண்ணே இடம் மாறுகிறாள். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் வாழ்ந்த வாழ்க்கை, தன்னைச் சுற்றிலுமிருந்த உறவுகளையும் விட்டுப் பிரிகிறாள். புதிதாக வாழப்போகும் வீட்டில் முழுக்க முழுக்க கணவன் எனும் உறவை மட்டும் நம்பி நுழைகிறாள். ‘இதுவரை இருந்த தனது பழக்கங்களைப் புகுந்த வீட்டில் தொடர முடியுமா? காலை எட்டு மணி வரை தூங்குவதாக இருக்கலாம். இரவில் பசித்தால் பால் குடிப்பதாக இருக்கலாம். இதையெல்லாம் புகுந்த வீட்டில் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறார்களோ?’ என்கிற சந்தேகம் பெண்ணுக்குள் இருக்கும். இன்றைய பெண்கள் புகுந்த வீட்டிலும் தனக்கான சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பது நியாயம்தானே? மணமகன் இதைப் புரிந்துகொண்டு தன் மனைவிக்கான ஸ்பேஸ் தனது வீட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். திருமணத்துக்கு முன்பான உரையாடல்களிலும் வருங்கால மனைவியின் எதிர்பார்ப்புகளைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தனது வீட்டில் சில விஷயங்களை மாற்றிக்கொள்வது நல்ல புரிதலை உருவாக்கும். இதன்மூலம் புகுந்த வீட்டில் மணப்பெண்ணின் ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் பெஸ்டாக அமையும்.”

மணப்பெண்: திருமணத்துக்குப் பின்னும் பழைய நட்பைத் தொடரலாமா?

‘`ஆணுக்குள் இப்படி ஒரு கேள்வியே தோன்றாது. பெண், தான் பழகிய அத்தனை பேரையும் விட்டுவிட்டே கணவன் என்ற புதிய உறவோடு கரம்கோக்கிறாள். அந்தக் காலத்தில், திருமணத்துக்குப் பின் எந்த ஒரு பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காகவே பெரும்பாலும் பெண்கள் பழைய நட்புகளைப் தொடர்வதில்லை. இன்றைய சூழல் அப்படியில்லை. ஆணுக்கு இணையாகப் பெண்ணுக்கும் நட்பு வட்டம் இருக்கிறது. இதுபோன்ற சுதந்திரங்களைத் திருமணத்தில் இழந்து விடக் கூடாது என்பதால், திருமணத்தைத் தள்ளிப்போடுகிற பெண்களும் உண்டு. திருமண உறவில் கணவனாக வரும் ஆணுக்குத் தன் மனைவியின் மேல் பொசசிவ்னஸ் அதிகம் இருக்கும். இதனால் பழைய நட்பால் புதிய பந்தத்தில் சிக்கல் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் பெண்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.’’

மணப்பெண்: சிலமுறை மட்டுமே பார்த்துப் பேசிய ஒருவருடன் முதலிரவில் எப்படி இயல்பாக நடந்துகொள்வது?

‘`ஆண், பெண் இருவருக்குள்ளும் இந்தக் கேள்வி எழும். பெண் இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. பருமனாக இருப்பது, உயரம் குறைவு அல்லது கறுப்பாக இருப்பது போன்ற காரணங்களால் கணவனுக்குத் தன்னைப் பிடிக்குமா, தாம்பத்ய உறவில் பிரச்னைகள் வருமா போன்ற கேள்விகள்கூட எழலாம். முதன் முதலில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும்போது வலி குறித்த பயங்களும் அதிகமாக இருக்கும். இதுபற்றி தனியாகக் குழம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை. பிரீ-மேரிட்டல் கவுன்சலிங் இதற்குத் தீர்வு தரும். மனநல ஆலோசகரிடம் அத்தனை கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமான பதில்கள் பெற்றுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆணின் பயங்களையும் இதுபோன்ற கவுன்சலிங் தெளிவுபடுத்தும்.’’

இனி மணமகனின் சந்தேகங்கள்...

மணமகன்: நிச்சயம் ஆனபிறகு பெண்ணிடம் ஓப்பன் மைண்ட்டடாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமா?

``பெண்ணுக்குள் எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்துகொண்டே இருக்கும். நடக்கும் சம்பவங்களை வைத்து சந்தேகம் கொள்வது என்பது பெண்ணின் இயல்பு. இது பாதுகாப்பு அம்சத்தின் ஒரு பகுதியே. சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆனபின் ஒரு மணமகன் தனது பழைய காதல் பற்றிப் பெண்ணிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் பழைய காதலியோடு எங்கெல்லாம் போனார் என விசாரித்துள்ளார். மணமகன் உண்மையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எல்லாவற்றையும் மனைவியாக வரப்போகிறவரிடம் கொட்டிவிட, கடைசியில் அந்தப் பெண் வேறொரு பெண்ணை விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தவிர்த்துவிட்டார். திருமணமே நின்று போனது. `வெளிப்படையாக இருக்கிறேன்’ என்ற எண்ணத்தில் மணமகன் தன் பழைய வாழ்க்கை மொத்தத்தையும் கொட்ட வேண்டியதில்லை. தன்னுடன் வாழப் போகிற பெண்ணின் நம்பிக்கையைத் தகர்க்கும்விதமாக எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிதாக வாழப்போகும் இருவரும் பாசிட்டிவ்வான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் மனதில் நம்பிக்கைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். இதுவே இனிய இல்லறத்துக்கான விதையாக அமையும்.’’

மணமகன்: சோசியல் மீடியாவை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம். இதிலும் வெளிப்படைத்தன்மை தேவையா?

‘`இருவருக்கும் எந்த எல்லையும் கட்டுப்பாடும் இல்லை என்று எண்ணும் சிலர்கூட, உறவில் கசப்புகள் ஏற்படும் போது பழைய விஷயங்களை ஆயுதங்களாக மாற்றும் அபாயமுள்ளது. இருவருக்குமான சுதந்திரத்தை இருவருமே மதிக்க வேண்டும். தனக்கான பர்சனல் பேஸ் மொத்தத்தையும் காட்டத் தேவையில்லை. சோசியல் மீடியாவைப் பயன்படுத்தும் நேரத்தை இருவரும் திட்டமிட்டுக் கொள்ளலாம். தங்களுக்கான பர்சனல் நேரத்தில் சோசியல் மீடியாவில் மூழ்கிக்கிடப்பது பரஸ்பரம் எரிச்சலையே ஏற்படுத்தும்.

பெண்ணைப் பொறுத்தவரை, அவளது உணர்வுகளை மதிப்பதும், அவளுக்கான சுதந்திரத்தை அனுமதிப்பதும் நம்பிக்கையை மேம்படுத்தும். பொது இடங்களில் ஒருவரது குறையை பலர் அறியச் சொல்லிக் கிண்டல் செய்வதுகூட பெண் மனதில் காயத்தையே ஏற்படுத்தும். தங்களுக்கான பர்சனல் நேரத்தில் மனைவிக்குப் பதிலாக இணையத்தில் மூழ்கியிருப்பது பலவித பிரச்னைகளை ஏற்படுத்தும். இருவருக்குமான தனிமை களில் அன்பு மட்டுமே ஆதிக்கம் செலுத்தட்டும்.’’

மணமகன்: புதிதாக வரப்போகிற பெண் என் அம்மாவை மதிப்பாளா?

``மணமகனின் அம்மா பல ஆண்டுகளாக அவனோடு வாழ்பவர். ரத்தபந்தமும்கூட. இருவருக்குமிடையே இயல்பிலேயே புரிதலும் அன்பும் இருக்கும். புதிதாக வரும் பெண் கணவனை மட்டுமே தனக்கானவனாக நம்பி வருபவள். கணவன் தன் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பு செய்பவனாக இருக்க வேண்டும் என்றே ஆணிடம் எதிர்பார்ப்பாள். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நிற்பது மகன் தான். தன்னை நம்பி வந்த மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதற்கான தேவையைத் தன் தாய்க்கும் புரியவைப்பது அவசியம். வீட்டுக்கு வரும் புதிய குழந்தையை எப்படிக் கொண்டாடுவார்களோ, அப்படித்தான் புதுப்பெண்ணையும் புகுந்த வீடு கொண்டாட வேண்டும். அது புகுந்த வீட்டு உறவுகளின் மீதான நம்பிக்கையையும் பிணைப்பையும் அதிகரிக்கச் செய்யும். இதற்கான சூழலை மனைவி வரும் முன்பே வீட்டில் உருவாக்க வேண்டியது மணமகனின் கடமை!’’

- திருமகள்