நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ள திருவேள்விக்குடி, திருமண வரம் அருளும் திருத்தலமாகத் திகழ்கிறது. கி.பி 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் சிவபெருமான் திருமணக் கோலத்தில் உமையவளின் திருக்கரம் பற்றி, மணவாளேசுவரராக அருள்புரிகிறார். அம்பிகையின் திருப்பெயர் பரிமளசுகந்தநாயகி.

ஒருமுறை சிவபெருமானும் திருமாலும் சொக்கட்டான் ஆடுகின்றனர். ஆட்டத்துக்கு நடுவராக இருந்தவர் அம்பிகை. அப்போது, பகடைக்காய் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் எழுந்தபோது, அம்பிகை திருமாலுக்கு ஆதரவாகப் பேசுகிறார். இதனால் கோபம்கொண்ட சிவபெருமான், அம்பிகையைப் பசுவாக மாறிவிடும்படி சபித்துவிடுகிறார். ஐயனின் சாபத்தின்படி பசுவாகப் பிறந்த அம்பிகை, இந்தத் தலத்தில் சாப விமோசனம் பெற்றதுடன், பரத முனிவரின் மகளாகப் பிறந்து, தவமிருந்து சிவபெருமானை மணம்புரிந்த திருத்தலமும் இதுதான்.

சிவன் - அம்பாள் திருமணத்துக்கு வேள்வி நடந்த இடம் இது என்பதால், இத்தலத்துக்கு திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தொழுநோய் ஏற்பட்டபோது, இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, தொழுநோய் நீங்கப்பெற்றார் என்பது தல வரலாறு.

கோயிலின் மகத்துவம் குறித்து நம்மிடம் பேசினார் வைத்தியநாத குருக்கள்... ‘`இரு மனங்கள் இணையும் திருமணத்தைத் தடையில்லாமல் நடத்தி வைக்கிறார் மணவாளேசுவரர். சிவ-சக்தியரின் திருமணத்தைப் பிரம்மா தலைமையேற்று நடத்திவைத்த அற்புதமான திருத்தலம் இது. எனவே, இங்கே கொடி மரம் கிடையாது. தங்கள் சாபம் நீங்க நவகிரகங்கள் பூஜித்ததால், நவகிரகங்களும் இங்கே இல்லை. ஈசனே நவகிரகங்களாகவும் திகழ்கிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் தடையில்லாமல் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக, தனக்குத் தானே விநாயகர் பூஜை செய்துகொண்டதால், இங்குள்ள விநாயகர் சங்கல்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் திருமணம் செய்துகொண்ட சிவனும் அம்பாளும் எதிர்கொள்பாடியில் திருமண வரவேற்பைப் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு திருமகிழ்ந்தசேரியில் மகிழ்ச்சியாக இருந்த தலம்தான் திருமணஞ்சேரி. இப்போது திருமணஞ்சேரியையும் திருமணத் தலமாக வழிபடத் தொடங்கி விட்டார்கள்’’ என்றார்.

‘`திருமணம் ஆகாதவர்களுக்கு இங்கே எப்படிப்பட்ட பரிகாரம் செய்யப்படுகிறது?’’ என்று வைத்தியநாத குருக்களிடம் கேட்டோம்.

‘`திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்தாலோ, பௌர்ணமி நாள்களில் இங்கே நடைபெறும் யாக பூஜையில் கலந்துகொண்டாலோ அவர்களுக்குத் திருமண தோஷம், நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், இருதார தோஷம் போன்ற எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். நானே பலரின் வாழ்க்கையில் இதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். அதனால்தான்,

75 வயதிலும் இறைவனுக்கு பூஜை செய்து வருகிறேன். மணவாளேசுவரரின் பூரண அருளால் திருமணம் முடிந்து தம்பதி சமேதராக வருபவர்களைக் கண்டு நான் அடையும் ஆத்ம திருப்தி ஒன்றே எனக்குப் போதும்’’ என்றார்.

நாம் அங்கே சென்றிருந்தபோது, வெங்கடேஸ்வரன் என்பவர் மனைவியுடன் வந்திருந்தார். ‘`வெளிநாட்டில் பணிபுரியும் எனக்கு ரொம்ப நாளாகவே பெண் தேடி வந்தார்கள். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அதற்குப் பிறகுதான் மணவாளேசுவரர் மகிமையைப் பற்றி அறிந்துகொண்டு, இந்தக் கோயிலுக்கு வந்து என் ராசி, நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைத்தார்கள். பிறகு நான் ஊருக்கு வந்த இருபதே நாள்களில் பெண் பார்த்து நிச்சயித்துத் திருமணமும் முடிந்துவிட்டது. நல்ல குணவதி எனக்கு மனைவியாக அமைந்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எல்லாமே மணவாளேசுவரரின் கருணைதான் என்று பரிபூரணமாக நம்புகிறேன்’’ என்று சிலிர்ப்புடன் தெரிவித்தார்.

திருமணத்தடை உள்ளவர்கள் ஒரு நடை போடலாமே திருவேள்விக்குடிக்கு!

- மு.இராகவன்

படங்கள்: க.சதீஷ்குமார்

கோயிலுக்குச் செல்வது எப்படி?

நாகை மாவட்டம், மயிலாடு துறையிலிருந்து பூம்புகார்-கல்லணை நெடுஞ்சாலையில் மேற்கே 10 கி.மீ தொலைவிலும், குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 கி.மீ.தொலைவிலும் திருவேள்விக்குடி கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: ஆர்.வைத்தியநாத குருக்கள் 04364-235462, 09750881536