வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் பெய்யப் போகும் மழையை, முன்கூட்டியே நமக்குச் சொல்பவர் சென்னை, வானிலை மைய இயக்குநர்... எஸ்.ஆர்.ரமணன்!

சமீப வாரங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ஓர் அடைமழை முன் இரவில், சென்னை, மேற்குமாம்பலத்தில் உள்ள வீட்டில் சந்தித்தோம்... ரமணன் மற்றும் மிஸஸ் ரமணன் (மதுமிதா) இருவரையும். சுடச்சுடச் தேனீரும், சிரிக்கச் சிரிக்கப் பேச்சுமாக நிகழ்ந்தது அந்தப் பொழுது!

''மன்னர்கள், டாக்டர்கள் ஜோக்குக்கு அடுத்தபடியா, மழைக் காலம் வந்துட்டா... இவரைப் பத்தின ஜோக்ஸ்தான் அதிகம் ரவுண்ட் அடிக்கும்.

'நான் சொன்னதும் மழை வந்துச்சா, நான் சொல்லல வெயில் வந்துச்சா...’னு 'மயக்கம் என்ன?’ படத்துல வந்திருக்கற பாட்டை, இப்ப இவருக்குதான் நிறைய பேர் டெடிகேட் பண்றாங்க!'' என்று ஜாலியாக வந்தமர்ந்தார், மதுமிதா!

மென்மையான சிரிப்புடன் வார்த்தைகளை ஆரம்பித்தார் ரமணன்.

''நான் பிறந்தது புதுக்கோட்டையில். வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னைதான். பி.எஸ்சி., ஃபிசிக்ஸ், எம்.எஸ்சி., ஜியோகிராபியில் பிஹெச்.டி முடிச்சு, சென்னை வானிலை மையத்துல வேலைக்குச் சேர்ந்தேன். எட்டு வருஷமா தமிழ்நாட்டு மக்களுக்கு வானிலை பத்தி சொல்லிட்டு இருக்கேன்!'' என்று ரமணன் சிரிக்க,

''நான் திருச்சி பொண்ணு. இப்போ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்துட்டு இருக்கேன். ஒரு பெண், ஒரு பையன்னு எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. மகள் நிவேதிதா, கணவரோட சுவிட்சர்லாந்தில் இருக்கா. பையன் அரவிந்தாக்ஷன், பி.டெக்., ஃபைனல் இயர்'' என்று தானும் சுருக்கமாக அறிமுகம் தந்த மதுமிதா,

''ஊர், உலகமே மழை வருமா, இடி வருமானு இவர் சொல்றதை கேட்கக் காத்திருக்கும். ஆனா, நான் கேட்கவே மாட்டேன். ஒரு நாள் சாயந்திரம் 'மழை வரும்’னு இவர் டி.வி-யில் சொல்லிட்டு இருந்தார். அதை கண்டுக்காம மவுன்ட் ரோட்ல இருக்கிற எங்க ஆபீஸ்ல இருந்து, டைடல் பார்க்ல இருக்கிற டென்டல் ஆஸ்பிட்டலுக்கு போயிட்டேன். அங்கிருந்து வெளிய வந்தா, ஆக்ரோஷமான மழை. பயங்கர டிராஃபிக். பஸ்ல வந்தவங்க எல்லாம் இறங்கி நடக்க, நானும் நடக்க ஆரம்பிச்சேன். ஏழு மணிக்கு நடக்க ஆரம்பிச்சவ, கிண்டிக்கு வந்தப்போ ராத்திரி மணி 12. அப்புறம் ஷேர் ஆட்டோ பிடிச்சு அசோக்பில்லர் வந்து, என் மகள் பிக்-அப் பண்ணினா. வாசல்ல நின்னபடி 'நான் சொல்றதைக் கேட்டிருக்கலாம்ல’னு சொன்னார் சார். அதிலிருந்துதான் சாரோட வானிலை அறிக்கையை சின்ஸியரா கேட்க ஆரம்பிச்சேன்!'' என்று மதுமிதா சிரிக்க,

''வானிலையை நான் சோழி எதுவும் போட்டுக் கணிக்கறதில்லை. அதுக்காகவே இயங்குற டீம்கள் பல ஆராய்ஞ்சு, தொகுத்துத் தர்ற ரிப்போர்ட்டைதான் உங்ககிட்ட சேர்க்கிறேன்'' என்று ரமணன் தன்னிலை விளக்கம் தர...

''மழைக்காலம் ஆரம்பிச்சுடுச்சுனா, வீட்டுல கூட போனும் கையுமாதான் இருப்பார். கடலூர், நாகை மாதிரியான மாவட்டங்கள்ல இருந்து விவசாயிகள் போன் போட்டு நிலவரம் கேட்டுட்டே இருப்பாங்க. அதுக்குப் பிறகுதான் களை எடுக்கறது, உரம் போடுறதுனு விவசாய வேலைகளைப் பார்ப்பாங்க. அது பலிச்சவொடன அவங்க சொல்ற நன்றிகளும் நிறைய.

ஒருபக்கம் இவ்வளவு பொறுப்புகள் சுமந்தாலும், இன்னொரு பக்கம் ஸ்டாம்ப் கலெக்ஷன், காயின் கலெக்ஷன்னு சின்னப் பசங்க போல அவ்வளவு ஆர்வமா, எனர்ஜெட்டிக்கா இருப்பார்'' எனும்போது, பெருமிதம் மதுமிதா முகத்தில்.

''என்னால மறக்க முடியாத மழை... என் பொண்ணு கல்யாணத்தன்னிக்கு கொட்டின மழைதான். 2010 மே மாசம், என் பொண்ணு கல்யாணம். அது அக்னி நட்சத்திர காலம். ஆனா, கல்யாணத்தன்னிக்கு லைலா புயல் வீச, கோடை மழை கொட்டோ கொட்டுனு கொட்டிடுச்சு. கல்யாணத்துக்கு வரவேண்டியவங்க 500, 600 பேர் வராம போயிட்டாங்க. 'வடாம் போடுறதுக்கும், வீட்டுல இருந்து குடை எடுத்துட்டுப் போறதுக்கும்கூட ரமணன் சார் என்ன சொல்றார்னுதான் காத்திருப்போம். ஆனா, பொண்ணோட கல்யாணத்தன்னிக்கு வந்த மழையை உங்களால கணிக்க முடியாம போச்சே’னு இப்பவும் ஜாலியா கிண்டல் செய்வாங்க'' என்று ரமணன் தானும் சிரிக்க,

வெளியில் மழை முடிந்திருந்த நேரம், உள்ளே மழைப் பேச்சும் முடிந்திருந்தது !