Published:Updated:

`100% ஃபிட்டா இருக்கேன்; அது போதுமே!'- 100 கிலோ எடையால் நடிகை அஸ்வினி குஷி

டல் பருமனாக, அதே நேரம் பப்ளியாக இருப்பார் 'ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி' தொடரின் கதாநாயகியான அஸ்வினி. இன்று அவருக்கு பிறந்தநாள். பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினியிடம் பேசினேன்.

``பலமுறை பேட்டிகள்ல சொன்னதுதான். என்னோட உடல் எடையைப் பார்த்துத்தான் என்னை சீரியலுக்கே செலக்ட் பண்ணினாங்க. இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் என் வெயிட் பத்தி சொன்னதில்லை. ஆனா பர்த்டே அன்னைக்கு கேக்குறீங்கங்கிறதுனால சொல்றேன். 95 கிலோவில் இருந்து 100 கிலோவுக்குள்ள இருப்பேன். ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை 95ல இருந்து 100க்கு போவேன். மறுபடி 95-க்கு வர்றதுமா இருக்கும் என் வெயிட். என் வெயிட் பத்தி வெளிய சொல்றதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை.

ஆனா 95-க்கு கீழ வெயிட் குறைஞ்சதில்லை. பெண்கள் தங்களோட உடல் எடையை நினைச்சு மனச வருத்திக்கிறாங்க. நான் அப்படியெல்லாம் இல்ல. ஆரோக்கியமா இருக்கோமாங்கிறதை மட்டுமே பார்ப்பேன். 100% ஃபிட்டா இருக்கேன். அது போதுமே. பிறகு, எதுக்கு வெயிட் பத்தி கவலைப்பட்டுகிட்டு...'' என்று ஹேப்பியானார்.

ஹேப்பி பர்த்டே பேபி!

அடுத்த கட்டுரைக்கு