Published:Updated:

`குவிர்க்கி இன்வைட்ஸ்’ - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

`குவிர்க்கி இன்வைட்ஸ்’  - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
`குவிர்க்கி இன்வைட்ஸ்’ - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

அழைப்புகானப்ரியா

தீம் வெட்டிங்,  டி.ஜே மியூசிக், திருமண வரவேற்பில் மணமக்களின் நடனம் என எல்லா விஷயங்களிலும் புதுமைகளையும் கொண்டாட்டங்களையும் விரும்பும் இந்தக் காலத்து இளைஞர்கள், அழைப்பிதழ்களை மட்டும் விட்டுவைப்பார்களா? அப்படிப்பட்ட வித்தியாசங்களை விரும்பும் இளைய தலைமுறைக்காகவே வந்துவிட்டது `குவிர்க்கி’, `கன்டெம்பொரரி’ போன்ற புதிய வகை அழைப்பிதழ்கள். நம் பாரம்பர்யத்தோடு புதுமைகளை அழைப்பிதழ்களில் புகுத்தி ட்ரெண்டு செட் செய்துவரும் பாலாஜியிடம் பேசினோம்.

`குவிர்க்கி இன்வைட்ஸ்’  - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

``பலரும் தனித்தன்மை வாய்ந்த பொருள்களையே இப்போது விரும்புகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எனத் தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ்களை வடிவமைத்துக்கொடுப்பதால் கஸ்டமர்ஸ் ரொம்ப ஹேப்பி” என்று தொடங்கிய பாலாஜி, தான் கடந்துவந்த பாதையில் கிடைத்த பரவச அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

`குவிர்க்கி இன்வைட்ஸ்’  - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

``டிசைனிங்மீது அதிக ஆர்வம்கொண்டதால், வலைதள வடிவமைப்பாளராக என் முதல் பணி தொடங்கியது. பிறகு `சும்பக்’ (Chumbak), பிராண்டு போன்ற அழகிய கலைநயம்கொண்ட டிசைன்களின் மீதான ஆர்வத்தால், ஃபோக் ஆர்ட் (Folk Art) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் அதன் பாரம்பர்யத்தைப் போற்றும்விதமாக ஒரு நாட்டுப்புறக் கலை இருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி நாட்டுப்புறக் கலைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த நம் நாட்டின் பாரம்பர்யக் கலைகளை உலகமறியச் செய்ய ஆசைப்பட்டேன். அந்த முயற்சியில் ஆரம்பித்ததுதான் `இந்தியன் ஃபோக் ஆர்ட் 365’ (Indian Folk Art 365) எனும் பயிற்சிப் பட்டறை. மூன்று மணி நேரம்தான் இந்தப் பயிற்சிப் பட்டறையின் கால நேரம். வட்டம் வரையத் தெரியாதவர்கூட இந்த மூன்று மணி நேரத்தில் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்கொள்ளலாம். இதையே என்  முயற்சிக்கான வெற்றியாக நினைக்கிறேன். அடுத்த கட்டமாக, பெருமைவாய்ந்த நம் நாட்டுப்புறக் கலைகளை, இன்விடேஷன் மூலமாகவே உலகளவில் கொண்டு சேர்க்க முடியும் என நம்புகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நம் பாரம்பர்யக் கலைகளை, அதன் தன்மை மாறாமல் புதுமைகளைப் புகுத்தி இன்விடேஷனாக அச்சிடத் தொடங்கியதுதான் `குவிர்க்கி இன்வைட்ஸ் (Quirky Invites)’.

`குவிர்க்கி இன்வைட்ஸ்’  - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

புதுமையான வடிவங்களைக் கொண்டு வர, பல ஆராய்ச்சிகள்ல ஈடுபட்டேன். என் மனைவி வடஇந்தியர் என்பதால், அந்தப் பாரம்பர்யம் பற்றி அறிந்துகொள்வது எளிதாக இருந்தது. மேலும், இந்தியா முழுவதுமுள்ள என் நண்பர்கள், புகைப்படக் கலைஞர்கள் மூலமாகவும் பல தகவல்களைச் சேகரித்து, அழைப்பிதழ்களை டிசைன் செய்தேன். அறுபதுக்கும் மேற்பட்ட குவிர்க்கி அழைப்பிதழ்களை நானே வடிவமைத்தேன். மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ்நாடு, கேரளா, குஜராத், சீக்கியர், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துவகையான மாநிலம் மற்றும் மதங்களுக்கு ஏற்றவாறு டிசைன் செய்துகொடுக்கிறேன். இப்போது ட்ரெண்டில் இருக்கும் கலம்காரி போன்ற டிசைன்களையும் விட்டுவைக்கவில்லை. என்னுடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் வெளிநாட்டவர்கள்தான். அந்த வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப மாடர்னாகவும் நம் நாட்டு பாரம்பர்யத்துடனும் கலந்து டிசைன் செய்வதால், மற்றவர்களுக்கும் என்னைப் பரிந்துரைக்கிறார்கள். இ-கார்டுகளும் வடிவமைக்கிறேன். இதற்கு 2,500 ரூபாய் கட்டணம். மற்ற கார்டுகளுக்கு 25 முதல் 350  ரூபாய் வரை ஆகும். என் அடுத்த இலக்கு `அனிமேஷன் அழைப்பிதழ்கள்’.  இப்படி நிறைய வெரைட்டிஸ் கொடுத்துக்கொண்டே இருப்பேன். நம் பாரம்பர்யத்தை உலகறிய செய்வேன்” என்று உறுதியுடன் சொல்கிறார் பாலாஜி.