தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!

பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!

நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : பா.காளிமுத்து

ஜோதிகா கல்யாணத்துக்குக் கட்டியிருந்த அதே பிங்க் கலர் சேலைதான் வேண்டும் எனத் தேடித் தேடிப் பார்த்து வாங்கி அணிந்த மணமகள் ட்ரெண்டு இன்றில்லை. ஐஸ்வர்யா ராயே அணிந்திருந்தாலும் அதே கலரிலும் டிசைனிலும் தனக்கு வேண்டாம் என்பதே இந்தத் தலைமுறை மணப்பெண்களின் மனப்பான்மை. சேலை, நகைகளில் மட்டுமல்ல; தலைக்கு வைத்துக்கொள்கிற பூ அலங்காரத்திலும் அப்படியே தனித்தன்மையை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். 

பிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்!

சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மோகனா, மணப்பெண்களுக்கான பிரத்யேக பூ அலங்காரம் மற்றும் பூக்களி லேயே செய்யக்கூடிய நகைகளில் நிபுணர்.

‘`பதினெட்டு வருஷங்களா பியூட்டிஷியனா இருக்கேன். இந்தத் துறையில் புதுசு புதுசா அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். இன்னிக்கு லேட்டஸ்ட் ட்ரெண்டுனு பார்த்தா பூக்களில் செய்யற நகைகளும், கலர்ஃபுல் அலங்
காரங்களும்தான். பூக்களிலேயே ஜடை, மாலை, நெத்திச்சூட்டினு எல்லாமே பண்ணலாம்.இயற்கையான பூக்களில் குறிப்பிட்ட சில நிறங்கள்தான் கிடைக்கும். ஆனா, கோல்டன் ஜரிகை போட்ட பச்சைக் கலர் பட்டுப்
புடவைக்கு மேட்ச்சா பூ அலங்காரமும் ஃப்ளவர் ஜுவல்லரியும் வேணும்னா என்ன செய்ய முடியும்?

உடல் முழுக்க நீலம், பார்டர் டார்க் நீலம்னா அதே கலர்ல பூக்கள் கிடைக்காதே... ஸ்பிரே பண்றது மூலமா நாம நினைச்ச கலர்களைக் கொண்டுவர முடியும். முன்பெல்லாம் ஜடையில வெறும் மல்லிகைப்பூவை வெச்சுத் தைக்கிறதுதான் வழக்கமா இருந்தது. இப்போ எல்லாவிதமான பூக்களிலும் ஸ்பிரே பண்ணி அதை வெச்சு ஹேர் ஸ்டைல் பண்றதுதான் ட்ரெண்டு.

நிச்சயதார்த்தம், கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா, சீமந்தம் போன்ற விசேஷங்களுக் கெல்லாம் இந்தப் பூ அலங்காரம் இப்போ அதிகமா விரும்பப்படுது. சில பெண்கள் பூக்களையே விரும்ப மாட்டாங்க. கல்யாணம், ரிசப்ஷன் மாதிரி நாள்களில்கூட பூக்களைத் தவிர்க்க நினைப்பாங்க. தலைமுடியைப் பின்னல் போடாம, லூஸா விட விரும்புவாங்க. அவங்களுக்கெல்லாம் சாட்டின்லயும் பிளாஸ்டிக்லயும் பெரிய பூக்கள் டிசைன் பண்ணி, அதுலயே ஸ்டோன்ஸ் ஒட்டி அரை முழம் அளவுக்கு ரெடி பண்ணி, முடியோடு பொருத்திடுவோம்.

இதோட அடுத்த கட்டமா, பூக்களை வெச்சே நகைகள் பண்றதும் லேட்டஸ்ட் ஃபேஷனாகியிருக்கு. வளைகாப்பு, சீமந்தம் பண்றபோது, அந்தப் பெண்களால அதிக வெயிட்டான நகைகளைச் சுமக்க முடியாது. அவங்களுக்கு மல்லிகை அல்லது நந்தியா வட்டை மொட்டுலயே நெத்திச்சூட்டி, கம்மல், ஹாரம், வளையல்னு எல்லா நகைகளையும் டிசைன் பண்ணிக் கொடுக்கலாம். புடவைக்கு மேட்ச்சான கலர்லயே இதையும் பண்ணலாம். ஸ்பிரே பண்றதால பூக்கள் வாடாமலும் இருக்கும். விசேஷம் முடியற தினம் சாயந்திரம் வரைக்கும் பூக்களில் செய்யற நகைகள் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். ஒட்டியாணம்கூடச் செய்யலாம். அதுல நடுப் பகுதியில பெரிய பூவை வெச்சும், அடியில செயின் தொங்கற இடத்துல மொட்டுகளைக் கோத்துக் கட்டியும் செய்வோம். கழுத்துக்கு ஹாரம், ஒட்டியாணம், நெத்திச்சூட்டி, தோடு, மாட்டல், வளையல் உள்பட எல்லாமே செய்யலாம்.’’

முதலீடு?

மல்லிகை, விதம் விதமான ரோஜா, நந்தியாவட்டை, மரிக்கொழுந்து, சம்பங்கி, கலர் ஸ்பிரே, கோல்டன் பீட்ஸ், மணிகள், சமிக்கி உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள்... மொத்தவிலை பூக்கடைகளில் எல்லாமே கிடைக்கும். கலர் ஸ்பிரேதான் இதில் பெரிய முதலீடு. அவற்றுக்கான செலவு என்பது எப்படிப் பயன்படுத்துகிறோம், எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. மற்றபடி பூக்களுக்கான முதலீடு தனி. எல்லாவற்றுக்கும் சேர்த்து 2 ஆயிரம் ரூபாய் தேவை.

லாபம்?


மூவாயிரம் ரூபாய்க்கு மொத்த செட்டும் செய்து கொடுக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் தரும் பிசினஸ் இது. கவரிங் நகைகள் வாங்குவதானால் வாடகையே 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும். பலரும் பலமுறை உபயோகித்தவை என்பதால் அவற்றில் தனித்தன்மையை எதிர்பார்க்க முடியாது. பூக்களில் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் செய்ய முடியும். எல்லாப் பூக்களும் எல்லா சீஸன்களிலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், நந்தியாவட்டை ஆல்டைம் ஃபேவரைட்டாகக் கைகொடுக்கும். சின்ன நந்தியா வட்டையைக் கொண்டைக்கும்  மாட்டலுக்கும் நெற்றிச்சூட்டிக்கும் பயன்படுத்தலாம். பெரிய பூக்களை ஜடை பில்லைக்குப் பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு பூ சீஸன் இல்லா
மலும் விலை அதிகமாகவும் இருக்கும்போது அதில்தான் மொத்த அலங்காரமும் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு அதற்கேற்ற பட்ஜெட்டில் செய்து கொடுக்கலாம்.

பயிற்சி?

பூக்கள் கட்டும் முறை, ஸ்பிரே செய்வது, நகைகள் செய்முறை என எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 1,500 ரூபாய். ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம்.