குழந்தைகள் வளர்ந்த பிறகு, மீண்டும் பணிக்குத் திரும்ப நினைக்கும் பெண்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இப்போது இந்த நிலை மாறி, பகுதி நேர வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கைகொடுக்கின்றன. அந்த வகையில்... சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பொட்டன்ஷியல் ஜெனீசியஸ் அலுவலகத்தில் அனைவரும் பகுதி நேரப் பணியாளர்களே.

25 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்மணிகள் பரபரப்பாகப் பணியாற்றிவருகிறார்கள். இவர்களில் சிலர், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர்கள். குடும்பப் பொறுப்பு காரணமாக வேலையிலிருந்து விலகி பகுதி நேரமாகப் பணியாற்றுகிறார்கள். பகுதி நேர வேலை என்றாலும் தங்களுடைய பணி அனுபவத்தை மதிப்புமிக்கதாகக் கருதுகின்றனர். அவர்களிடம் பேசினோம்...

``என் சொந்த ஊர் தஞ்சாவூர். திருமணம் ஆனவுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். பொதுப்பணித் துறையில் வேலை கிடைத்தது. என் கணவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை கிடைக்க, பொதுப்பணித் துறை வேலைக்கு வாலன்டரி ரிட்டயர்மென்ட் கொடுத்துவிட்டு, நானும் பிலிப்பைன்ஸுக்குக் கிளம்பிவிட்டேன். இப்போது, என் அம்மாவைக் கவனிக்க வேண்டும் என்பதால், சென்னைக்கு வந்து விட்டேன். அம்மாவுக்கு உதவியும் செய்ய வேண்டும், குடும்பச் செலவுக்காகச் சம்பாதிக்கவும் வேண்டும் என்பதற்காக, பகுதி நேர வேலையைத் தேடினேன். நிறுவனப் பணியில் இருப்பவர்களுக்குப் பயிற்சியளிப்பதோடு, நிறுவனத்துக்கான ஒப்பந்தப் பணிகள் குறித்த கோப்புகளைத் தயாரித்து வழங்கும் பகுதி நேர வேலை கிடைத்தது. ஏற்கெனவே பார்த்த வேலை அனுபவம், பகுதி நேர வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவிவருகிறது. நான் மாநில அரசில் பெற்ற சம்பளத்தைவிட இப்போது இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறேன்” என்றார் ஆஷா.
இருபதாண்டுகளுக்கு மேலாக ஆசிரியைப் பணி, பத்தாண்டுகளுக்கு மேலாகப் பன்னாட்டு நிறுவனத்தில் மொழிப்பயிற்சியாளர் பணி என, தனது அனுபவங்களால் அறுபது வயதைக் கடந்திருக்கும் கெளரியும் பகுதி நேர வேலையில் அசத்திவருகிறார்.

``நான் பிறந்தது சென்னை, வளர்ந்ததோ கொல்கத்தாவிலும் ஜாம்ஷெட்பூரிலும். என் அப்பா, டாடா ஸ்டீல் நிறுவனத்திலும் கணவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தி லும் பணியாற்றினர். நான் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என் மூன்று பெண்களையும் படிக்கவைக்க, 1999-ம் ஆண்டு சென்னைக்கு வந்து செட்டிலானோம். சென்னையிலும் ஆசிரியர் பணி கிடைத்தது. அதன் பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். இப்போது பகுதி நேர ஆங்கில மொழிப் பயிற்றுநராகப் பணியாற்றுகிறேன். என் அறிவையும் அனுபவங்களையும் இளை ஞர்களிடம் பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது” என்றார் கெளரி.

``கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்து முடித்தவுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பின்னர் பன்னாட்டு ஐ.டி நிறுவனத்துக்குத் தாவி, ஏழு வருட காலம் வேலை பார்த்தேன். குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு ஐ.டி வேலையை விடவேண்டியதாயிற்று. குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். `பகுதி நேர வேலை பார்க்கலாமா!’ எனத் தேடியபோது, மென்திறன் பயிற்றுநராகவும் விற்பனைப் பிரிவில் வர்த்தகப் பிரதிநிதியாகவும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது மன அழுத்தம் அதிக அளவில் இருக்கும். பகுதி நேர வேலை, அதுபோன்ற எந்தவிதமான அழுத்தமும் தருவதில்லை. முழு திருப்தியோடு வேலை பார்க்க முடிகிறது'' என்கிறார் பிரியா.

சொந்தமாக நிறுவனத்தை நடத்திவந்த மேரின் அனுகிரகா, இப்போது பகுதி நேர வேலையில் பிஸி. ``வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்றால் ஃப்ளெக்ஸிபிலிட்டி வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருந்துள்ளேன். நானும் என் சகோதரியும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினோம். ஆனால், செட் ஆகவில்லை. பகுதி நேர வேலை கிடைக்கவே, `செய்துதான் பார்க்கலாமே’ என்று களம் இறங்கி உழைத்தோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம். வேலை நேரம்போக, பல நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் பகுதி நேரப் பயிற்சியும் வழங்கிவருகிறோம்” என்கிறார்.

கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்த சுதா ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாகப் பகுதி நேரப் பணியில் இறங்கியுள்ளார். ``இரண்டு வருடங்களாகப் பகுதி நேர வேலை பார்த்துவருகிறேன். ஆங்கில விரிவுரையாளராக வேலைபார்த்த அனுபவம், மென்திறன் பயிற்சிக்குப் பெரிதும் உதவியது” என்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுதா ராஜேஸ்வரி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்து கைநிறைய சம்பளம் வாங்கினாலும், பகுதி நேரப் பணிகளிலும் அக்கறை காட்டுகிறார் சுமதி. ``கடந்த ஐந்து வருடங்களாக ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான தளமாகப் பகுதி நேரப் பணி இருக்கிறது” என்கிற இவர் புதுமையைத் தேடிச்செல்வதில் பேரார்வம் உடையவர்.

கார்ப்பரேட் நிறுவனத்தில் 20 வருடங்கள் வேலைபார்த்த அனுபவம் உள்ள சுபாஸ்ரீ, ``பொறியியல் படிப்பில் 95 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்களே நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இவர்களுக்கு மென்திறன் பயிற்சியளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வாய்ப்பை, ஏற்கெனவே பணியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகியவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிற ஐடியாவை முன்வைக்கிறார். இவரது கருத்தை ஆமோதிக்கிறார் கெளரி கிருஷ்ணன்.

இந்துஜா டெக் நிறுவனத்தில் தலைமைப் பயிற்சியாளராக உள்ள கெளரி பாலசுப்பிரமணியம், ``கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆள்களைத் தேர்வுசெய்து பயிற்சி வழங்குவதை நிறுத்திவிட்டன. முழுத் திறனோடு வருபவர்களுக்கே வாய்ப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பயிற்சிப் பிரிவுப் பணியாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் புதிய வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன” என்றார்.

பெண்களுக்கான பகுதி நேர வேலைவாய்ப்பை ஒருங்கிணைத்து வரும் பொட்டன்ஷியல் ஜெனீசியஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா ராமமூர்த்தி ``வேலைவாய்ப்புகள் மிகுந்திருந்தாலும், தகுந்த பணியாட்கள் இல்லை. பணி அனுபவமிக்க பெண்கள், பகுதி நேரப் பணியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார்.