Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு!

'தலை'யாய பிரச்னைகளுக்கு கை மேல தீர்வு !

என்ன அழகு... எத்தனை அழகு!

'தலை'யாய பிரச்னைகளுக்கு கை மேல தீர்வு !

Published:Updated:
என்ன அழகு... எத்தனை அழகு!
##~##

பெண்களின் 'தலை’யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊட்டச்சத்து இன்மை

புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் (ஙி12) குறைபாடுகள் இருந்தால், தொட்டாலே உடைந்து போகும் அளவுக்கு முடி பலவீனமாகிவிடும். இளைக்கிறேன் பேர்வழி என்று 'உண்ணாவிரதம்’ இருக்கும் பெண்களுக்கும், தலைமுடி உதிரும் வாய்ப்பு இருக்கிறது. 'வைட்டமின் ணி’ அடங்கிய சோயாபீன்ஸ், காட்டேஜ் சீஸ், பாதாம், பால், காய்கறி, பழங்கள் அடங்கிய சத்தான உணவு, நிறைய தண்ணீர் என எடுத்துக் கொள்வதுதான், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி.

 தலையில் அழுக்கு

கபாலம் (ஸ்கால்ப்) சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் முடி கொட்டும். அதனால் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, ஆயில் பாத் எடுக்கலாம். தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்வது நல்லது.

டென்ஷன்

எதையாவது நினைத்து எப்போதும் டென்ஷனோடு இருந்தால், தலைமுடி உதிரும். அதேசமயம், டென்ஷன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால், டென்ஷனைக் கையாள முடியுமே..! யோகா, தியானம் என செய்யலாம். வீடு, ஆபீஸ் என்று மாறி மாறி அடைந்து கிடக்காமல்... வாக்கிங், ஸ்போர்ட்ஸ் என்றும் கவனத்தைத் திருப்பினால், டென்ஷனும் வராது; முடியும் கொட்டாது.

என்ன அழகு... எத்தனை அழகு!

உடல் பிரச்னைகள்

உடலில் ஏற்படும் சில பிரச்னைகளும் முடி கொட்டச் செய்யும். குறிப்பாக நிமோனியா, டைஃபாய்ட் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கோ முடி கொட்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். சிகிச்சை எடுத்துக் கொண்டால், முடி உதிர்வது தானாகவே நின்றுவிடும். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். பிரசவம், அபார்ஷன் என எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இப்பிரச்சனை தலைதூக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதனால், முடி நன்றாக வளரும். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சுரப்பிகள் நார்மலாவதுடன், பிரசவம் காரணமாக உடலில் ஏற்படும் இழப்புகளாலும் அந்த காலகட்டத்தில் முடி உதிர்வது இயற்கையே.  

தெளிவோம் தவறான கற்பிதங்களில் இருந்து..!

தலைமுடியை எந்த அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்கிறோமோ, அந்த அளவுக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். தலைமுடியை பிரஷ் செய்வதினால் தலையில் ரத்த ஓட்டம் அதிகமாகும், தலையில் இருக்கும் எண்ணெய்ப் பசை எல்லா இடத்துக்கும் சீராக பரவும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அளவுக்கு அதிகமாக பிரஷ் செய்தால்... தலைமுடி பிரஷோடு சேர்ந்து வந்துவிடும், அல்லது பாதியிலேயே உடைந்துவிடும்.

என்ன அழகு... எத்தனை அழகு!

ஷாம்பு பயன்படுத்தினால் முடி உதிர்ந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அடிப்படையில் ஷாம்பு என்பது தலைமுடியை சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள். இப்போது மூலிகை அடிப்படையிலான ஷாம்புகளே வந்துவிட்டதால்... அந்த பயம் தேவையில்லை. கண்டிஷனர் உபயோகிப்பதால், கேசம் பொலிவு பெறும். ஆனால், கண்டிஷனரை கபாலத்தில் அப்ளை செய்தால் அங்கே இருக்கும் சிறிய துவாரங்கள் அடைபடும், அழுக்கு சேரும், பொடுகுப் பிரச்னை வரும். அதனால் அதைத் தலையில் தேய்க்காமல், முடியின் நுனி பாகத்தில் துவங்கி, மேல் நோக்கித் தேய்த்து, கதகதப்பான அல்லது குளிர்ந்த நீரால் சுத்தமாக 'வாஷ்’ செய்துவிட வேண்டும்.

 அடிக்கடி முடியை வெட்டினால், முடி வேகமாக வளரும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. 'ஸ்ப்ளிட் எண்ட்ஸ்' எனப்படும் உடைந்திருக்கும் முடிகளின் முனைகளை நீக்குவதற்காக மூன்று மாதத்துக்கு ஒருமுறை முடியை வெட்டிக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை...

உலோகத்தினால் ஆன சீப்பு மற்றும் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்தினால் முடி பாதிப்புக்குள்ளாகும்.

அடுத்தவர் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

மிளிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism