Published:Updated:

செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா

செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா
பிரீமியம் ஸ்டோரி
செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா

நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : ப.சரவணகுமார்

செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா

நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : ப.சரவணகுமார்

Published:Updated:
செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா
பிரீமியம் ஸ்டோரி
செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா

ங்கு பார்த்தாலும் செயின் பறிப்பு சம்பவங்கள்... வீடுகளில் நகைக் கொள்ளைகள்... தங்கம் அணிந்தபடி நடமாடுவதும், தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. திருமணத்துக்குத் தங்கம் வாங்க நினைப்போருக்கும் அவற்றைப் பாதுகாக்க முடியுமா என்கிற பயம் அதிகரித்திருக்கிறது. தங்க நகைகளுக்கான விளம்பரங்களில் நடிக்கிற மாடல்களே பாதுகாப்பு கருதி, இன்று கவரிங் நகைகளைத்தான் அணிகிறார்கள். ஒருநாள் நிகழ்வான திருமணத்துக்கும் இன்று நிறைய பேர் அதையே பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். பல்வேறு டிசைன்களில் இதற்கான கவரிங் நகைகள் கிடைக்கின்றன. யாரும் அணிந்திராத பிரத்யேக டிசைன்களில் வேண்டும் என்கிறவர்களுக்கு ஸ்பெஷலாக அவற்றைச் செய்து தருகிறார் சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவரும் பிரைடல் நகைகள் செய்வதில் நிபுணருமான உமா. 

செயற்கை நகைகள்... செம பிசினஸ்! - உமா

 ``பத்தாவது வரைதான் படிச்சிருக்கேன். நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதுல எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா செயற்கை நகைகள் டிசைன் பண்றது. அதுலயும் முக்கியமா கழுத்துக்கான முழு செட்டும் டிசைன் பண்றதுல நான் எக்ஸ்பெர்ட். நெக்லஸ், சின்ன ஆரம், பெரிய ஆரம்... இந்த மூணும் ஸ்பெஷல். கூடவே தோடு, நெத்திச்சுட்டியும் செய்து தரேன். இதுல எதையுமே கவரிங்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அசல் தங்க நகைகளைப் போலவே ஜொலிக்கும்.

நகைகள் மேல் பெண்களுக்கு நிறைய சென்டிமென்ட்ஸ் இருக்கும். இன்னொருத்தர் போட்டுக்கிட்டது மாதிரி இருக்கக்கூடாதுனு நினைப்பாங்க. தான் விரும்பற டிசைன்ல கிடைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. கடைகளில் ரெடிமேடா கிடைக்கிற கவரிங் நகைகளில் இருக்கிறதுல பிடிச்சதைத் தேர்ந்தெடுக்கலாம். தங்க நகைகளில் மட்டும்தான் நாம விரும்பற டிசைன்களைச் சொல்லிச் செய்ய முடியும். கவரிங்ல சாத்தியமில்லை. ஆனா, நான் பண்ற கவரிங் நகைகளில் எனக்கு ரெஃபரென்ஸ் கொடுத்துட்டா அதைப் போலவே செய்து கொடுப்பேன்...'' - அறிமுகம் தருகிற உமா, பிரைடல் நகைகள் பிசினஸில் ஈடுபட விரும்புவோருக்கான வழிகாட்டல்களை வழங்குகிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

நெக்லஸ் மற்றும் ஆரம் செய்யத் தேவையான அனைத்தும் தனித்தனியே மார்க்கெட்டில் கிடைக்கும். அவற்றை வாங்கி, நம் கற்பனைக்கேற்பவோ, வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்பவோ டிசைன் செய்து கொடுக்க வேண்டியதுதான். மாங்காய், சதுரம், மயில், பூ என வேறு வேறு டிசைன்களில் தனித்தனியே பார்ட்ஸ் கிடைக்கும். இவற்றை இணைக்கும் நெக்லஸ் பகுதியும் ஆரம் பகுதியும்கூடத் தனித்தனியே கிடைக்கும். நமது கற்பனைக்கேற்ப கூடுதலாக அலங்காரப் பொருள்கள் வைத்து டிசைன் செய்வதில்தான் இருக்கிறது சிறப்பு. அவற்றுக்கான டூல்ஸ், வயர், கொக்கிகள் போன்றவற்றையும் மொத்தமாக வாங்க வேண்டும். ஒரு செட்டுக்கு 1,500 ரூபாய் முதலீடு தேவைப்படும். இது குறைந்தபட்ச முதலீடு. ஸ்டோன்ஸ் வைத்த செட் என்றால் இன்னும் அதிகமாகும்.

எத்தனை நாள்கள் தேவை... லாபம் எவ்வளவு?

தோடு, நெக்லஸ், ஆரம் உள்ளிட்ட ஒரு முழு செட் செய்ய மூன்று மணி நேரம் போதும்.

வாடகைக்கும் கொடுக்கலாம். வாடகைக்கு வாங்குபவர்களைவிடவும் புதிதாக வாங்க நினைக்கிறவர்களே அதிகம். ஒரு செட்டுக்கு அதன் வேலைப்பாடுகளைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை லாபம் வைக்கலாம்.

கடன் வசதி?

குறைந்த முதலீட்டில் சிம்பிள் டிசைன்களில் செய்து சிறிய அளவில் விற்பனையைத் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தை அடுத்தகட்ட முதலீடாகப் பயன்படுத்தலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருந்தால் உள்கடன் வசதி பெற்று பிசினஸைப் பெருக்கலாம்.

விற்பனை வாய்ப்பு?

கடைகளுக்கு சப்ளை செய்துதான் விற்க வேண்டும் என்கிற அவசியம் இன்றில்லை. வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் பேஜ் போன்றவற்றில் டிசைன்களின் படங் களை அனுப்பி ஆர்டர் பிடிக்கலாம்.
வாங்க விரும்புவோருக்கு நேரில் சென்று காட்டி, அவர்கள் சொல்கிற ஆல்ட்டரேஷன்களுடன் செய்துதருவது கூடுதல் ஆர்டர் களுக்கு வழிவகுக்கும். பியூட்டி பார்லர்களுடன் தொடர்பில் இருந்தால், மணமகள் மேக் கப்புக்கு வருவோரிடம் பேசி விற்கிற வாய்ப்பும் கிடைக்கும்.

பயிற்சி?

ஒருநாள் பயிற்சியில் மொத்த செட்டும் செய்யக் கற்றுக்கொள்ளலாம். தேவையான மெட்டீரியல் களுடன் சேர்த்துக் கட்டணம் 1,500 ரூபாய். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism