Published:Updated:

என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!

என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!

தீபிகாபுதிய நம்பிக்கைமு.பார்த்தசாரதி - படம் : வீ.நாகமணி

என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!

தீபிகாபுதிய நம்பிக்கைமு.பார்த்தசாரதி - படம் : வீ.நாகமணி

Published:Updated:
என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!
பிரீமியம் ஸ்டோரி
என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!

‘’கேட்கவே சந்தோஷமாயிருக்கு. இப்போ நான் ஒரு நாவலாசிரியர். இன்னும் நிறைய எழுதணும்; விருது வாங்கணும்; மேடைகள் பார்க்கணும்!” - கனவுகள் ததும்பும் கண்கள் தீபிகாவுக்கு. சிறுவயதிலிருந்தே பார்வைக்குறைபாடு உடையவர்.  அதையும் மீறி இன்று, ‘தி பில்லியன் டாலர் ட்ரீம் (The Billion Dollar Dream)’ என்கிற ஆங்கில நாவலின் ஆசிரியராக அவதாரம் எடுத்திருக்கிறார், 28 வயதில்.   

என்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்!

“சொந்த ஊர் மதுரை. வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு ஸ்கூல்ல படிச்சேன். நாலு வயசில் போர்டுல இருக்கிற எழுத்துகள் தெரியலைனு டாக்டர்கிட்ட போனோம். எனக்கு ரெடினிட்டிஸ் பிக்மெண்டோஸா பிராப்ளம் இருக்கிறதா சொன்னாங்க. ‘வளர வளர, பார்வைத்திறன் குறைஞ்சுட்டே வரும். புக்ஸைக் கண்ணுக்கிட்ட வெச்சுதான் வாசிக்க முடியும். சூரியஒளியில் மட்டும்தான் படிக்க முடியும். மாலை, இரவு நேரங்களில் விளக்கின் ஒளியில் படிக்கவோ, எழுதவோ முடியாது’னு டாக்டர்ஸ் வரிசையா சொல்ல, என் பெற்றோர் ரொம்ப அதிர்ந்துட்டாங்க. என் அம்மா மருத்துவர் என்பதால், கண் சிறப்பு மருத்துவ நண்பர்கள் பலரிடமும் என் பிரச்னை பற்றி ஆலோசிச்சாங்க. ஆனா, இந்த நோய்க்கான சிகிச்சை இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்குனு எல்லோரும் சொல்லிட்டாங்க.

எனக்குச் சின்ன வயசிலேயே ஆங்கில மொழியில் ரொம்ப ஆர்வமிருந்தது. ஆனா, வாசிக்கிறதும் எழுதுறதும் எனக்குச் சவாலாகிப்போக, ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதையெல்லாம் கடந்துவருவதற்காக, சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்தவர்களுடைய வரலாறுகளைப் படிக்க ஆரம்பிச்சேன். எதிர்மறையா எதையும் யோசிக்காம, என்னையும் என் சூழலையும் பாசிட்டிவ் வைப்ரேஷனோட வெச்சுக்க ஆரம்பிச்சேன். அதிக வெளிச்சம் இருக்கிற இடமா பார்த்து அமர்ந்து, கிடைக்கிற நேரத்தை குவாலிட்டி டைமா மாத்திக்கிட்டுப் படிப்பேன். ஒரு கட்டத்தில் என் குறையைப் பற்றியே நான் மறந்துபோய், உற்சாகமா வாழ்க்கையை அணுக ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் தீபிகா, அந்த உத்வேகத்துடன் மதுரை லேடி டோக் கல்லூரியில் பி.எஸ்ஸி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.பி.ஏ-வும் முடித்திருக்கிறார். இன்னொரு பக்கம், வளர வளர அவருடைய பார்வைத்திறன் முழுமையாக பாதிப்படைந்துவிட்டது.

‘`துவண்டுபோகாமல் அதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாரானேன். ஒரு விஷயம் தெரியுமா... எம்.பி.ஏ-ல நான்தான் பேட்ச் டாப்பர். பி.எஸ்ஸி, எம்.பி.ஏ-னு படிச்சாலும், எழுத்தில்தான் என் ஆர்வம் மையம்கொண்டிருந்தது. படிப்பை முடித்ததும் நிறைய போட்டித் தேர்வுகள் எழுதினேன். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலையில் சேர்ந்தேன். என் குறைபாட்டை வென்று, மற்றவங் களைப்போல நானும் படிப்பு, வேலைனு செட்டில் ஆனதும், வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில், என் கனவைத் துரத்த ஆரம்பிச்சேன்’’ என்பவர், தான் எழுத்தாளரான கதையைத் தொடர்ந்தார். 

``ஒரு க்ரைம் நாவல் எழுதினேன். ஆனா, அதை முடிக்கிறதுக்குள்ள, வேற ஏதாச்சும் எழுதலாம்னு தோணுச்சு. ஐ.டி துறையில் வேலைபார்க்கிற ரெண்டு பெண்களை மையமா வெச்சு ஒரு நாவல் எழுத முடிவு பண்ணினேன். பார்வைத்திறனற்ற பெண் ஒருத்தி, அவள் தோழியோடு சேர்ந்து எப்படி பில்லியன் டாலர் டார்கெட்டை அடையறா என்பதுதான் கதையின் கரு. என் கனவுகளுக்குச் சிறகுகள் கட்டிவிட்டு அந்த ரெண்டு கதா பாத்திரங்களையும் சுதந்திரமா பறக்க வெச்சேன். என்னால பார்க்க முடியாத, அனுபவிக்க முடியாத அனைத்தையும் என் நாவல்ல வர்ற கதாபாத்திரங்கள் மூலமா அனுபவிச்சேன். அது ரொம்ப  சந்தோஷமான, எமோஷனலான அனுபவமா இருந்தது. ரெண்டு வருஷ உழைப்புக்குப் பிறகு, ‘தி பில்லியன் டாலர் ட்ரீம்’ நாவல் பார்ட் 1 வெளியாகியிருக்கு. மகிழ்ச்சியின் உச்சம் என்பது இதுதான்னு நினைக்கிற அளவுக்குச் சந்தோஷமாயிருக்கு’’ என்று சொல்லும் தீபிகாவின் குரலில் அவ்வளவு ஆனந்தம். 

‘`நான் ஒரு மருத்துவராகயிருந்தும் என் பொண்ணைக் குணப்படுத்த முடியாத சூழல்ல ரொம்பவே உடைஞ்சுபோயிருந்தப்போ, தீபிகாவே எங்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஆரம்பிச்சா.  அவளுக்குப் பார்வையில்லை என்பதையே மத்தவங்களால கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்குத் தன்னை மெருகேத்திக்கிட்டு பெரிய சாதனை படைச்சுட்டா’’ என்கிற தன் அம்மாவை இடைமறித்துத் தொடர்கிறார் தீபிகா.

“தொடர்ந்து எழுதணும்கிற ஆசை, இப்போ எக்கச்சக்கமா பெருகிப்போயிருக்கு. ‘தி பில்லியன் டாலர் ட்ரீம்’ நாவலின் பார்ட் 2, பார்ட் 3 எல்லாம் விரைவில் எழுதி முடிக்கணும். ஏற்கெனவே நான் பாதியிலவிட்ட க்ரைம் நாவலை முடிக்கணும். இலக்கிய உலகத்தில் எனக்குனு ஓர் இடம்பிடிக்கணும். இன்னும் நிறைய இருக்கு. என் கனவுகள் எல்லைகள் அற்றது!”

தன்னம்பிக்கையோடு பேசும் தீபிகாவுக்கு ஆயிரம் பூங்கொத்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism