Published:Updated:

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!
பிரீமியம் ஸ்டோரி
எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

பியூட்டி பேஸிக்ஸ்ஸ்ரீஜா நரேன் - படங்கள் : தி.குமரகுருபரன்

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

பியூட்டி பேஸிக்ஸ்ஸ்ரீஜா நரேன் - படங்கள் : தி.குமரகுருபரன்

Published:Updated:
எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!
பிரீமியம் ஸ்டோரி
எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

ன்றைய தலைமுறைப் பெண்கள் அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம்.  குறிப்பாக பிரைடல் மேக்கப் என்பது, பெண்களின் ‘வெடிங் ட்ரீம்’களில் முக்கியமான ஒன்றாகியிருக்கிறது. அடுத்து, அழகுக்கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு, ‘இதை நாம பிசினஸா எடுத்துச் செய்தா என்ன?’ என்கிற யோசனை மிதக்க ஆரம்பித்திருக்கிறது. அழகை மெருகேற்ற நினைப்பவர்களையும் அந்தக் கலை கைவரப்பெற்றுத் தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் களையும் பயன்பெறச் செய்யும் நோக்கத்தில், அவள் விகடன், பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகாவுடன் கைகோத்து ‘பியூட்டி பேஸிக்ஸ்’ என்கிற மூன்று மணி நேர மேக்கப் பயிற்சி வகுப்பை நடத்தியது.    

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

‘`அழகுபடுத்துதல் என்பது வேலையல்ல; உங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கலை. அந்தக் கலை உங்களுக்குள் ஒளிந்திருப்பது உங்களுக்கே தெரியாத நிலையில், அதை வெளிக்கொண்டுவந்து, வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் ஒரு பயிற்சிதான் இந்த மூன்று மணி நேர மேக்கப் வொர்க்‌ஷாப்” என்ற ராதிகா, பயிற்சியைத் தொடங்கினார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

ஈவ்னிங் லுக், பிரைடல் லுக் ஆகிய இரண்டுவித மேக்கப் பயிற்சிகள். முதலில் வாசகி மஞ்சுவுக்கு பார்ட்டி மேக்கப் செய்யப்பட்டது. மாய்ஸ்ச்சரைஸர், கன்சீலர், பவுடர் பேக், ஐ ப்ரோ பென்சில், ஐ லைனர், காஜல், ஐ ஷேடோ, ஷிம்மர் பவுடர், மஸ்காரா, ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், பிளஷர், லிப் லைனர், லிப்ஸ்டிக், ஹைலைட்ஸ் என்று தொடர்ந்த  பேஸிக் ஈவ்னிங் லுக் மேக்கப் பயிற்சியில், வந்திருந்த வாசகிகளின் விருப்பத்துக்கேற்ப, அவர்கள் கொண்டுவந்திருந்த அழகு சாதனப்பொருள் களைக் கொண்டே அழகூட்டி அசத்தினார் ராதிகா. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிரைடல் லுக் மேக்கப்புக்கு மேடையேறியவர், வாசகி நமீதா. 

எது அழகு! - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்!

பயிற்சியில் மேக்கப் போட்டபடியே ராதிகா அவ்வப்போது வலியுறுத்திய பியூட்டி செக் நோட்ஸ், சுவாரஸ்யம்...

*அழகுக்காக மிகவும் சிரத்தையெடுத்துக் கொள்ளாதீர்கள். போகிறபோக்கில் செய்து முடிக்கிற விஷயமாகவே அது இருக்க வேண்டும். 

*மேக்கப் போட்டுக்கொள்பவரின் மனநிலையையும் உடல்வாகையும் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மேக்கப் போட்டது தெரியாத வகையில் அழகை வெளிப்படுத்துவதே சிறந்த அலங்காரம்.

*விசேஷ தருணங்களில் போடும் மேக்கப்பில் அளவுக்கு அதிகமான காஸ்மெட்டிக்ஸைப் பயன்படுத்தாதீர்கள். அது கேமரா கண்களில் மிக அதிகமாகப் பளிச்சிடும்.

*இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சரும நிறத்தை வெள்ளையாகக் காட்ட மெனக்கெட வேண்டாம்.

*யாரோ ஒருவரின் கமென்ட்டால், ‘இந்த மேக்கப் நமக்கு சூட் ஆகவில்லையோ’ என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். ஒருவரின் மேக்கப் இன்னொருவருக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

*அழகுக்கலைக்குத் தன்னம்பிக்கை முக்கியம். எங்கு சென்றாலும், அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உங்களை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ராதிகாவிடம், வாசகிகள் பலரும் கேட்ட கேள்வி, “ஹெச்டி (HD - High Definition) மேக்கப் பயிற்சி எப்போ?”

விரைவில்..!  

நகைகள் உதவி: பிரபு ஜுவல்லர்ஸ், மயிலாப்பூர், சென்னை; உடைகள் உதவி: ‘ஸ்தூவ க்ளோத்திங்’, வேளச்சேரி, சென்னை; இடம் உதவி: மெட்ரோ மேனர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism