Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150

 சீரியல் தெரியாத பாட்டி!

அமெரிக்காவிலிருந்து என் மகன், மருமகள், பேத்தி, பேரன் அனைவரும் வந்திருந்தனர். ஐந்து வயது பேரன் ரோஹனை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு, மற்றவர்கள் வெளியில் சென்றிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு !
##~##

சிறிது நேரத்தில், ''பாட்டி... எனக்குப் பசிக்குது'' என்றான் பேரன். நான் தோசை செய்து கொடுத்தேன். ''எனக்கு தோசை வேணாம். சீரியல்தான் வேணும்'' என்று அடம் பிடித்தான். 'டி.வி. சீரியல் தெரியும்.... இது என்ன சாப்பிடற சீரியல்... புதுசா இருக்கே’ என்று நான் தடுமாற, அவன்  பிடிவாதமாக, ''சீரியல்தான் வேண்டும்'’ என்று அழுது கொண்டே இருந்தான்.

நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே மருமகள் வந்துவிட, சீரியல் கதையை சொன்னேன். குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவள், ''கார்ன்ஃப்ளேக்ஸை பாலில் போட்டு, சர்க்கரை கலந்து கொடுப்பேன். அதைத்தான் சீரியல் (நீமீக்ஷீமீணீறீ) என்று சொல்லியிருக்கிறான்'’ என்று விளக்கம் சொன்னபடியே அவனிடம் கார்ன் ஃப்ளேக்ஸ் பாக்ஸை தந்தாள். கீழேயெல்லாம் சிந்தியபடியே... ''ம்... பாட்டிக்கு சீரியலே தெரியல'' என்று  பேரன் சர்டிஃபிகேட் கொடுக்க... குலுங்கி குலுங்கிச் சிரித்தேன்!

- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி

சாக்லேட் பெருசா... மூக்குத்தி பெருசா?

குட்டீஸ் குறும்பு !

நான், தோழி, அவளுடைய மகன் மூவரும் சமீபத்தில் நகைக் கடைக்குச் சென்றிருந்தோம். நாங்கள் நகை செலக்ஷன் மும்முரத்தில் இருந்தோம். அவளுடைய பையனோ... சேல்ஸ்மேனிடம், ''அது என்ன அங்கிள்..?'', ''இது கையில போடுறதா அங்கிள்..?'' என்று வாயாடிக் கொண்டிருந்தான். கடை முதலாளி அருகில் வர, அவரிடம் ஒரு மூக்குத்தியைக் காட்டி, ''அங்கிள்... இது எத்தனை ரூபா..?'' என்றான். அவரும் பொறுமையாக, ''இது ரெட்டைக் கல் மூக்குத்திப்பா. அஞ்சாயிரம் ரூபா!'' என்றார். உடனே அந்த வாண்டு, ''போங்க அங்கிள்... நீங்க ரொம்ப நாட்டி!'' என்றவன், தன் கையில் இருந்த சாக்லேட்டைக் காட்டி, ''இவ்வளவு பெரிய சாக்லேட்டே பத்து ரூபாதான். சின்னூண்டு மூக்குத்தி அஞ்சாயிரம் ரூபாயா..? நான் சின்னப் பையன்னுதானே

இப்படி சொல்றீங்க?'' என்று படபடவெனப் பேச, நாங்கள் அனைவரும் சிரித்த சிரிப்பில் பக்கத்து செக்ஷனே திரும்பிப் பார்த்தது!

- த. லாவண்யா, செய்யார்

பார்க்காமல் எழுதுவது எப்படி?

குட்டீஸ் குறும்பு !

எல்.கே.ஜி. படிக்கும் மூன்று வயது மகள், அன்று ஹோம் வொர்க் எழுதியபோது, நோட்டைப் பார்க்காமல் முகத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எழுதினாள். இரண்டு, மூன்று முறை அவள் முகத்தை நேராக வைத்து எழுத வைத்தேன். திரும்பவும் முகத்தைத் திருப்பி, நோட்டைப் பார்க்காமல் எழுதினாள். புரியாமல், ''ஏண்டா செல்லம் இப்படி பண்றே..?'' என்று கேட்க, அவள் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்!'' என்றாள் சின்ஸியராக. பாட நோட்டை பார்க்காமல், ஹோம் வொர்க் எழுத வேண்டும் என்று கஷ்டப்பட்டு புரிய வைத்த பிறகு, அவள் சிரித்த சிரிப்பு... ஆஹா!

- பி.குமாரி, சென்னை-12

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism