பாரம்பரியம் பேசும் பக்தி தொடர்

திருமாலுக்குத் திருவோணமும், சிவபெருமானுக்குத் திருவாதிரையும் உரிய நட்சத்திரங்கள்.

சிவனுக்கு, 'ஆதிரையான்' என்கிற பெயரும் உண்டு. அழித்தல் சக்தியான ருத்ரனைக் குறிப்பது ருத்ரா நட்சத்திரம். வடகிழக்கு மூலையில் உள்ள மிருகசீரிட நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெற்றிருப்பது ஆருத்ரா. சில கோள்களும் நட்சத்திரங்களும் மனிதருள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. ஆருத்ரா நட்சத்திரம், காந்த சக்தியை மனிதர்கள் மீது பொழிந்து, அவர்தம் குற்றங்களை நீக்கிப் பொலிவைத் தருகிறது. எனவே, ஆருத்ரா வழிபாடு... மனிதருள் இருக்கும் தீய சக்திகளை அழிக்க வல்லதாகப் போற்றப்படுகிறது.

ஆதிரைத் திருநாள் தொடர்பாகப் பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் 'ஆஹா... அற்புதம்’ என்று யோக நித்திரை கலையாமலே பாராட்டுக் குரல் எழுப்பினார். ஆதிசேடனும், திருமகளும் காரணம் வினவ, தில்லையம்பலத்தில் கூத்தாடும் பெருமானின் ஆனந்த நடனத்தை மனக் கண்ணால் கண்டு மகிழ்ந்ததாகக் கூறினார். அத்திருநட னத்தைக் காண விழைந்த ஆதிசேடன் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்கு கீழே பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக மாறி பூவுலகம் வந்தார். தில்லைக் கூத்தனின் நடனம் காண பல காலம் தவமிருந்தார். வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) நட்பு கிடைத்தது. 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நாவுக்கரசரால் போற்றப்பட்ட நடனக் காட்சியை, இருவரும் தில்லையில் கண்டு களித்த நாள்தான்... திருவாதிரைத் திருநாள்!

சிதம்பரத்தில் சேந்தனார் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். விறகு விற்கும் தொழில் புரிந்த அவர், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அடியவர்களுக்கு அன்னமிடல், பாடல்கள் பாடுதல் என்று செம்மையாக வாழ்ந்து வர, அவருடைய பெருமையை உலகுக்கு உணர்த்த இறைவன் விரும்பினார். திருவாதிரை நாளன்று பெருமழை பெய்தது. விற்பதற்கு வைத்திருந்த விறகுகள் அனைத் தும் நனைந்து போனதால், வியாபாரம் நடக்க வில்லை. அடியவர்க்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தனார் கவலையுடன் இருந்தபோது, இறைவன் சிவனடியாராக இல்லத் துக்கு வந்தார். சேந்தனாரின் மனைவி வீட்டிலிருந்த அரிசி நொய்யை (குருணை) வெல்லப்பாகுடன் கலந்து களியாகக் கிண்டி, அடியவர்க்குப் படைக்க, அவரும் மகிழ்ந்து உண்டு சென்றார். மறுநாள் காலையில் தில்லை வாழ் அந்தணர்கள் ஆலயக் கதவைத் திறந்தபோது... சிவன் சந்நிதியிலும், திருமேனியிலும் களி சிதறி இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். வழக்கம்போல இறைவழிபாட்டுக்காக அங்கு வந்த சேந்தனார் மூலம், நடந்ததையறிந்து வியந்தனர். அதுமுதல் திருவாதிரை நாளன்று களி படைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சிவனுடைய வழிபாட்டில் பஞ்சபுராணம் பாடல் தொன்றுதொட்டு வழங்கி வரும் மரபு. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு, பெரிய புராணம் பாடி ஓதுவார்கள் வழிபடல் முறையாகும்!

'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னியதில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே’
என்ற திருப்பல்லாண்டு பாடலைப்பாடி, ஆதிரை நோன்பு நோற்பது சிறப்பானது.

ஆதனூரில் ஆதிதிராவிட இனத்தில் பிறந்தவர் நந்தனார். மார்கழி மாதம் திருவாதிரை விழாவைத் தில்லையில் சென்று வழிபடப் பெரிதும் விழைந்து, 'நாளை போவேன்,’ 'நாளை போவேன்’ என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றதால், 'திருநாளைப் போவார்’ என்று அழைக்கப்பட்டார். இவர், ஒரு அந்தணரிடம் வேலை பார்த்து வந்தார். 'நிலப்பரப்பை உழுது முடித்த பின்னர்தான், தில்லைக்கு போக முடியும்' என்று அந்தணர் கூறிவிட, அடியவர் படும் துன்பம் கண்டு இரங்கி, நந்தனாருக்காக ஒரே இரவில் நிலமனைத்தையும் உழச் செய்தார் இறைவன். நந்தனாரின் பக்தியையும் இறைவன் கருணையை யும் கண்ட அந்தணர், மன்னிப்பு வேண்டினார். தில்லை சென்ற நந்தனார், பிறவிப் பிணி நீங்கும்படி. அங்கு வளர்க்கப்பட்ட நெருப்பில் மூழ்கி இறைவனுடன் இரண்டறக் கலந்தார்!

- கொண்டாடுவோம்...

களி பிரசாதம்!

'திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பது பழமொழி. எப்படிக் களி செய்வது?

வெறும் வாணலியைச் சூடுபடுத்தி, ஒரு ஆழாக்கு பச்சரிசிக்கு அரை ஆழாக்கு பாசிப்பருப்பு என்ற அளவில் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் ரவை போல உடைக்க வேண்டும். பிறகு அதனை பிரஷர் குக்கரில் வேகவிட வேண்டும். கொதித்து, வடிகட்டிய வெல்லத்தை, அதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து வேகவிட்டு... தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி போட்டுக் கலந்தால்... களி தயார்!

ஏதேனும் ஏழு காய் வகைகளை (கிழங்குகளும் போட வேண்டும்) வேகவிட்டு, பருப்பு சேர்க்காமல் தேங்காய் அரைத்து விட்டு செய்யும் குழம்பு... 'தாளகக் குழம்பு' என்றும் 'ஏழு காய்க்கூட்டு' என்றும் கூறப்படும்.

இவற்றைப் படைத்து, சிவநாமங்களைச் சொல்லிக் கன்னிப் பெண்கள் விரதமிருந்தால் நல்ல கணவனைப் பெறலாமென்றும், எல்லா வளமும் தேக நலனும் பெறலாமென்றும் சிவமகாபுராணம் கூறுகிறது!