Published:Updated:

சுனாமி 7-ம் ஆண்டு....

ஆறாத பல காயங்கள்... ஆறுதலான சில ஜீவன்கள் !கரு.முத்து, என்.சுவாமிநாதன் படங்கள்: ரா.ராம்குமார்

சுனாமி 7-ம் ஆண்டு....

ஆறாத பல காயங்கள்... ஆறுதலான சில ஜீவன்கள் !கரு.முத்து, என்.சுவாமிநாதன் படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

2004, டிசம்பர் 26-ம் தேதி... லேசில் மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! கடந்துவிட்டன ஏழு ஆண்டுகள். ராஜநிலா போல... இன்னும் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும்கூட பல ஆயிரம் பேருக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்தி வைத்துவிட்டது அந்த சுனாமி. அதேசமயம், ஆக்னஸ் போல சிலருடைய வாழ்க்கையில், அதன் பிறகு கொஞ்சம் மருந்து போட்டிருப்பது ஓர் ஆறுதல்!

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகேயுள்ள சின்னவாய்க்கால் கடலோரக் குப்பத்தில் கணவன் குணசேகரனுடன் மகன், மகள் என்று முத்தான இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை வசந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தவர் ராஜநிலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சொந்தமா ஃபைபர் போட் வெச்சுருந்தோம். அன்னிக்கி ஞாயித்துக் கிழமைங்கிறதால கடலுக்கு போகல. 'மீனு வித்த காசு பத்தாயிரம் வரணும். வாங்கிட்டு வா...’னு சொன்னாரு. மொடசலோடை கடற்கரையை நோக்கி நடந்துட்டு இருக்கும்போதே... தென்னை மர உசரத்துக்கு கடல் பொங்கி வந்துச்சு. அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன். ஆணும் பொண்ணுமா பதினஞ்சு பொணம் என்னைச் சுத்தி ஒதுங்க... 'அய்யய்யோ!'னு அலறிக்கிட்டு வீட்டுக்கு திரும்பி ஓடி வந்தேன். 'புருஷன் கடல்ல போயிட்டார். பையனுக்கு ஒண்ணும் ஆகல. பொண்ணு அதோ கெடக்கா பாரு...’ன்னாங்க. ஆஸ்பத்திரியில மூணு நாள் போராட்டத்துக்கு பிறகு உயிர் பொழைச்சுட்டா.

சுனாமி 7-ம் ஆண்டு....

'வலை பின்னிக்கிட்டு இருக்கும்போது... ஆக்ரோஷ அலை வந்ததும்... ரெண்டு கையிலயும் ரெண்டு பசங்களைத் தூக்கிக்கிட்டு ஓடி வந்து காப்பாத்தினவர, அடுத்த அலை தூக்கிட்டு போயி, கொடியம்பாளையத்துல பொணமா ஒதுக்கிப் போட்டுடுச்சு. அதில்இருந்து, இன்னிவரைக்கும் நான் பொணமா வாழ்ந்துகிட்டிருக்கேன். ஆறாவதும், அஞ்சாவதும் படிக்குதுங்க புள்ளைங்க. அதுங்கள வாழவைக்க கருவாடு வாங்கி வித்து பொழைப்பு நடத்துறேன். ஒரேடியா போய்இருந்தா... இம்புட்டு சிரமம் இல்லைதானே?''

- இன்னமும் ஓயவில்லை ராஜநிலாவுக்கு கண்ணீர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் சுனாமி குடித்த உயிர்கள் இருநூறுக்கும் அதிகம். அதில் ஆக்னஸுடைய நான்கு குழந்தைகளும் அடக்கம். இப்போது அந்தக் குடும்பத்தை துன்பத்தில் இருந்து மீட்டிருக்கின்றன புதிய உயிர்கள் மூன்று! ஆம்... ஆக்னஸ் இப்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாக மறு அவதாரம் எடுத்துள்ளார்!

''எங்க வீட்டுக்காரர் ராஜ்... கடல் தொழில்ல இருக்காரு. அருண் பிரமோத் (8), பிரதீமா (6), பிரதீஷா (4), ரஞ்சிதா (2)... எங்களுக்கு நாலு குழந்தைங்க. சுனாமிக்கு முந்தின நாள் சொந்தமா ஒரு கட்டுமரம் வாங்கினாரு. குடும்பத்தோட கடலுக்குள்ள சுத்திப் பார்த்தோம். சுனாமி அன்னிக்கு காலையில தொழில் விஷயமா தூத்தூருக்கு கிளம்பி போனாரு. கொஞ்ச நேரத்தில் ஊருக்குள்ள ஒரே சத்தம். சுதாரிக்கறதுக்குள்ள வீடு தேடிவந்த ஆக்ரோஷ அலையில் குடிசை இடிஞ்சுடுச்சு. நாலு குழந்தைகளையும், ரெண்டு கையால இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன். ஆனா, இரக்கமே இல்லாத அந்த அலை, நாலு பிள்ளைகளையும் பறிச்சுட்டுப் போயிடுச்சு. இன்னொரு அலை... ரோடு, வயல் எல்லாத்தையும் தாண்டி, கொண்டு போய் என்னை ஒரு இடத்துல தள்ளிவிட்டுருச்சு. தூத்தூருக்கு போயிட்டிருந்தவர், வழியிலயே அலையில் சிக்கி தப்பியிருக்காரு. எதார்த்தமா என்னைப் பார்த்தவரு, அலறி அடிச்சுட்டு ஓடி வந்து காப்பாத்தினாரு.

சுனாமி 7-ம் ஆண்டு....

பிரதீஷா, ரஞ்சிதா ரெண்டு பேரும் பொணமா கிடைச்சாங்க. ஆனா... பிரமோத், பிரதீமா கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்ல. நாலு பிள்ளைகளையும் பறிகொடுத்ததை நினைச்சு, பல தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். நானும், என் வீட்டுக்காரரும் இடிஞ்சு போயிட்டோம். இந்த நிலையிலதான், 'நீங்க குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தாலும், மறுபடியும் குழந்தை பெத்துக்க வாய்ப்பு இருக்கு. இன்னொரு ஆபரேஷன் பண்ணிக்கோங்க’னு டாக்டருங்க கவுன்சிலிங் கொடுத்தாங்க. நம்பிக்கை இல்லாமலே ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். ஆனா... அடுத்தடுத்து மூணு குழந்தைங்களுக்கு தாயாகிட்டேன்.

இறந்து போன நாலு மொட்டுகளையும் திரும்ப இந்த மண்ணுக்கு கொண்டு வரணும்னு எனக்கு ஆசை. ஆனா, மூணாவது பிரசவம் (மொத்தத்தில் ஏழாவது பிரசவம்) சிசேரியன்ங்கறதால... 'ஏற்கெனவே ஏழு பிள்ளை பெத்த உடம்பு’னு சொல்லி மறுபடியும் குடும்பக்கட்டுப்பாடு செய்துட்டாங்க'' என்று பெருமூச்சு விட்ட ஆக்னஸ்,

சுனாமி 7-ம் ஆண்டு....

''இறந்து போன பிரதீஷா, பிரதீமா, அருண் பிரமோத் நினைவா இந்தக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரதீஷா, ஆரோக்கிய பிரதீமா, ஆரோக் கிய பிரமோத்னு பேரு வெச்சுட்டோம்.  ரஞ்சிதா வோட பேரை, பேரப்புள்ளைங்க யாருக்காவது வெச்சுப்போம்!'' என்று கண்ணீர் துடைத்தார்!

ஆம்... காலம் அவர் கண்ணீரைத் துடைத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism