Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...

'போலி மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விவாகரத்து பெற்ற கோவையைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது' என்கிற செய்தியைப் படித்ததுமே... 'நான் அவனில்லை' படத்தில் பெண்களை விதம் விதமாக ஏமாற்றும் ஹீரோவின் செயல்பாடுகள் எல்லாம்... ஒரு விஷயமே இல்லை என்கிற அளவுக்கு நீங்களும் ரொம்ப அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள்தானே தோழிகளே!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவாகரத்துக்கு மனைவியின் சம்மதம் கிடைக்காத நிலையில்.... பக்காவாக கிரிமினல் மூளையைக் கசக்கி, பல லட்சங்களை செலவழித்து, போலியாக ஒரு மனைவி¬யை ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தையும் ஏமாற்றி... விவாகரத்து பெற்றிருப்பது... நீதிமன்றங்களின் வரலாற்றிலேயே முதல் முறை!

ஒரு நீதிமன்றத்தையே இப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் எனும்போது, இன்றைய நவீன உலகில் பெண்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப உஷாராகத்தான் இருக்க வேண்டும் போல!

இதைப் பற்றித்தான், அடுத்த 14 நாட்களுக்கு 'வழிகாட்டும் ஒலி'யில் (044-42890013) எச்சரிக்கை மணியாக ஒலிக்கப் போகிறார் பிரபல வழக்கறிஞர் அஜிதா. அவரிடம் கோவை விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோது... ''பெண்கள் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், இதுபோல ரூம் போட்டு யோசித்து கிரிமினல் வேலைகளை செய்பவர்களிடம் இருந்து தப்பிப்பது சுலபமல்ல. இத்தனைக்கும் விவகாரத்து வழக்கில் திருமண புகைப்படத்தைக் காண்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. அதையெல்லாம் மீறி, போலியாக விவாகரத்து பெற்றிருக்கிறார். இதன் மூலம், பெண்களைவிட, நீதிமன்றங்கள்தான் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண்களின் எதிர்காலத்தை உள்ளடக்கியிருக்கும் விவாகரத்து மாதிரியான வழக்குகளில், இன்னும் கடுமையான விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைளில் நீதித்துறை இறங்க வேண்டும்'' என்று சொன்னார்.

உண்மைதான்! நீதித்துறைக்கே விடப்பட்ட சவால்தான் இந்த மோசடி என்பதில் சந்தேகமில்லை. கூடவே... சம்பந்தப்பட்ட பெண்களும் முடிந்தவரை கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருப்பது, பின்னாளில் கண்ணீர் பெருக்கெடுக்காமல் இருப்பதற்கான வழியாக இருக்கும்தானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism