Published:Updated:

கேக் எடுங்க...கொண்டாடுங்க..!

ஆண்டனிராஜ், என்.சுவாமிநாதன்படம்: எல்.ராஜேந்திரன்

கேக் எடுங்க...கொண்டாடுங்க..!

ஆண்டனிராஜ், என்.சுவாமிநாதன்படம்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

விதவிதமான கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக் வகைகளை ரெடி செய்வதில் பேக்கரிகள் எல்லாம் இப்போது படுபிஸி! அவர்களிடம் சேகரித்த இரண்டு சூப்பர் சாஃப்ட் கேக் ரெசிபிகள் இங்கே..!

கேக் என்றதும் நெல்லை வாசிகளின் நினைவுக்கு வருவது, 'மெக்நெல் கேக்ஸ் அண்ட் பேக்கர்ஸ்’தான். ''கிறிஸ்துமஸ் கேக் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று இப்போதே கூடுதல் ஊழியர்களை தயார் செய்து விட்டேன்!'' என்று குஷியோடு சொல்லும் கடை உரிமையாளர் பிரதீப், ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 'பட்டர் ஸ்பாஞ்ச் கேக்’ செய்வதற்காக சொன்ன ரெசிபி இது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: முட்டை - 7, முழுசர்க்கரை (கல்கண்டு அளவில் இருக்கும் சர்க்கரை) - 250 கிராம், பேக்கிங் பவுடர் - 10 கிராம் (அல்லது) கேக் ஜெல் - 15 கிராம், மைதா மாவு - 250 கிராம், வெண்ணெய் (உருக்கியது) - 250 கிராம், வெனிலா எசன்ஸ் - 5  மில்லி, பட்டர் எசன்ஸ் - 5 மில்லி.

கேக் எடுங்க...கொண்டாடுங்க..!

செய்முறை: முட்டை, சர்க்கரை, கேக் ஜெல் அல்லது பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெள்ளை நிறத்துக்கு வரும். அதனுடன் இரண்டு எசன்ஸையும் சேர்க்கவும். இதனுடன் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்தக் கலவையை நன்றாக அடித்துக் கிளறுவது கேக்கின் சுவையை அதிகரிக்கும். உருக்கப்பட்ட வெண்ணெயை இதனுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை பேப்பர் மோல்டில் வைத்து 180 டிகிரி வெப்பம் கொண்ட 'மைக்ரோவேவ் அவன்’-ல்  வைத்து மூடவும். சரியாக 45 நிமிடம் கழித்து எடுத்தால், சூடான பட்டர் ஸ்பாஞ்ச் கேக் ரெடி!

கேக் மீது கிரீம் பூசினால்... சுவையாகவும், பார்வையாகவும் இருக்கும். 250 கிராம் வெண்ணெய், 250 கிராம் ஐசிங் சுகர் இரண்டையும் நன்றாக அடித்துக் கலக்கினால்... கிரீம் ரெடி!

நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ள 'தி கேக் வேர்ல்ட்’ பேக்கரியில், இப்போது செம ரஷ்! ''கிறிஸ்துமஸ் சமயங்களில் எங்க கடையில் ஹாட் சேல் ஆவது, பிளம் கேக்தான். பிளம் கேக்கை பொறுத்தவரை இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, காரம்னு சகல சுவையும் இருக்கும். அதுமாதிரிதான் மனித வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் கலந்து இருக்கும். இதை சிம்பாலிக்கா காட்டுறதுக்குதான் கிறிஸ்துமஸ் அன்னிக்கு பிளம் கேக்கை கட் செய்து கொண்டாடுறாங்க'' என்று விளக்கம் தந்த கடை உரிமையாளர் வெங்கடசுப்பு, பிளம் கேக் ரெசிபி சொன்னார்- ஆறு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு!

கேக் எடுங்க...கொண்டாடுங்க..!

தேவையானவை: கிறிஸ்துமஸ் பழம் (உலர்ந்த திராட்சை) - கால் கிலோ, சீனி (சர்க்கரை)- 50 கிராம், ஆரஞ்சு பீல் - 10 கிராம், இஞ்சி பீல் - 25 கிராம், பேரீச்சம் பழம் - 50 கிராம், செர்ரிப்பழம் - 50 கிராம், தேன் - 25 மில்லி, ரம் - 50 மில்லி, ஒயின் - 50 மில்லி, பைனாப்பிள் பீல் - 25 கிராம், மைதா மாவு - கால் கிலோ, சீனி கால் கிலோ, வெண்ணெய் - கால் கிலோ, முட்டை - 8, மிக்சர் புரூட் ஜாம் - 100 கிராம், மிக்சர் புரூட் எசன்ஸ் - ஒரு மூடி, ஸ்பைஸ் பவுடர் - 10 கிராம், முந்திரிப் பருப்பு - 50 கிராம். (ஆரஞ்சு பீல், இஞ்சி பீல், பைனாப்பிள் எசன்ஸ் மார்ட்களில் கிடைக்கும்.)

கேக் எடுங்க...கொண்டாடுங்க..!

செய்முறை: முதலில் உலர்ந்த திராட்சை பழத்துடன் சீனியைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைக்கவும். பின் அதனை ஒரு நாள் ஆற விடவும். அதனுடன் ஆரஞ்சு பீல், இஞ்சி பீல், பைனாப்பிள் பீல், பேரீச்சம் பழம், செர்ரிப் பழம், தேன், ரம், ஒயின் கலவையைச் சேர்த்து ஒரு மூடிய பாத்திரத்தில் ஊற வைக்கவும். தனியாக மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சீனியையும் சேர்க்கவும். அப்படிச் சேர்க்கும்போது இடைஇடையே முட்டையை உடைத்து ஊற்றி, சீனி கரை யும் அளவுக்கு நன்றாகக் கிளறவும். இப்போது அது ஒரு மென்மையான பொருளாக உருவாகியிருக்கும். இதனுடன் மைதா மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் ஜாம், எசன்ஸ், ஸ்பைஸ் பவு டர் கலவையையும் சேர்த்து, தனியாக தயார் செய்து வைத்திருக்கும் உலர்ந்த திராட்சை பழக் கலவையை யும் சேர்க்கவும். இதனுடன் முந்திரிப் பருப்பையும் சேர்த்து, முப்பது நிமிடங்களுக்கு 'மைக்ரோ அவன்’ல் வேக வைத்து எடுத்தால், கிறிஸ்துமஸ் கேக் தயார்!

கேக் எடுங்க... கொண்டாடுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism