Published:Updated:

புது வீடு !

ம.மோகன் படங்கள்: ப.சரவணகுமார்

புது வீடு !

ம.மோகன் படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

''எவ்ளோ நாளைக்குத்தான் வாடகை வீட்டுலேயே இருக்கிறது..? இந்த புது வருஷத்திலாவது சொந்தமா ஒரு இடத்தை வாங்கி வீட்டை கட்டிடணும்!'' என்கிற கனவு, பெருநகரங்களில் மாத சம்பளத்தின் ஓர் பகுதியை வீட்டு வாடகைக்குக் கொடுக்கும் ஒவ்வொருவருக்குமே இருக்கும்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த படப்பை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருகில் உள்ள வாரணவாசியில் சுமார் 800 சதுர அடியிலேயே பிரமிப்பான வீட்டைக் கட்டி, வீடு தேடலில் இருக்கும் அனைவரையுமே அசத்திக் கொண்டிருக்கிறார் 'இன்னோ - குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்’-ன் இயக்குநர் ராஜமன்னார் ராமசாமி. அந்த சாமர்த்தியத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்!

''பொதுவா எல்லாரும் இடம் வாங்குறதுக்கு நிறைய பணம் போட்டுட்டு, வீடு கட்டும்போது டைல்ஸ் எதுக்கு, கிரானைட் எதுக்குனு சிம்ப்பிளா யோசிப்பாங்க. அதை மாற்றி யோசிச்சு, சின்ன இடத்துல, பிரமிப்பா வீட்டைக் கட்டறதுதான் என் திட்டமா இருந்தது. அப்படி உருவானதுதான் இந்த வீடு. ஒரு வீட்டில் நுழைஞ்சவொடன, அதோட ஹால்தான் நம்மை இம்ப்ரஸ் பண்ணும். அதனாலதான் வீட்டுல ஹாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாலமா கட்டியிருக்கேன்'' என்று நேரடியாக கட்டுமான விஷயத்துக்குள் வந்தார் ராஜமன்னார்.

புது வீடு !

''விசாலமான ஹால் எல்லாம் 800 சதுர அடியில எப்படி சாத்தியம்?னு தோணலாம். அதுக்காகத்தான் பெட்ரூம், அட்டாச்டு பாத்ரூம், குழந்தைங்களுக்கான ஸ்டடி ரூம் எல்லாத்தையும் முதல் தளத்துக்கு ஷிஃப்ட் செய்துட்டு, தரைதளத்துல ஹால், கிச்சன், டைனிங் ஹால் மற்றும் ஒரு சின்ன பாத்ரூம் மட்டும் அழகா ட்ராயிங் செய்தோம். 800 சதுர அடி நிலத்துல, 680 சதுர அடி மட்டுமே கட்டடத்துக்குப் பயன்படுத்திக்கிட்டோம். மீதி இடத்தை பூச்செடி, ஓபன் ஸ்பேஸுனு விட்டுட்டோம். தரை தளம் மற்றும் முதல் தள சுவரை உயரமா எழுப்பினதால, அறைகள் எல்லாம் பார்வைக்கு விசாலமா தெரியுது!''

புது வீடு !

- சின்னச் சின்ன ஐடியாவால் அழகாகியிருக்கிறது அந்த வீடு.

''வீட்டோட முன்பகுதியில நல்ல இடவசதி இருக்கறதால வரவேற்பறை தனியா வேண்டாம்னு முடிவெடுத்தேன். அதனால, கதவை அடுத்தே 10.3ஜ்10.6 அளவுள்ள ஹால், 10.9ஜ்9 அளவுள்ள டைனிங் ஹால், 8ஜ்10 அளவுள்ள சமையலறைனு தரை தளம் அமைஞ்சுது. வீட்டோட பின்பக்கத்துல புல் பதியமிட்டதால, மாலை நேரத்துல டீ, காபி டம்ளரோட அங்க போய் நிக்கும்போது, அவ்வளவு இதமா இருக்கும். வீட்டோட முன்பக்கம் சிமென்ட் சறுக்கலான பகுதி இருக்கே... அதுதான் கார் பார்க்கிங்.

புது வீடு !

ரெண்டு படுக்கை அறைகளை நல்ல விஸ்தாரிப்பா முதல் தளத்துல கட்டியாச்சு. 9ஜ்12 அளவிலான குழந்தைகளோட ஸ்டடி ரூம்ல, ஸ்டடி டேபிள் பர்னிச்சர் உண்டு. ஆனா, டி.வி. நாட் அலவ்டு. அதுக்கு எதிர்ல இருக்குற 10ஜ்10 அளவிலான படுக்கை அறை, விசாலமானது. முதல் தளத்துல பின்பக்கம் ஒரு சின்ன பால்கனி இருக்கு. அது குழந்தைகள் ரிலாக்ஸ் செய்யவும், பெரியவங்க காலையில் சூரிய உதயம் பார்க்கவும் வசதியா இருக்கும். மொட்டை மாடி துணி உலர்த்த, குழந்தைகள் விளையாடனு பயன்படும். தரை தளம், முதல் தளம் எல்லாம் சேர்த்து மொத்தம் 980 சதுர அடியில் கட்டியிருக்கோம். மொத்தத்துல, இடம் வாங்கியது, தரை தளம், முதல் தளம், மொட்டை மாடி எல்லா செலவுகளையும் பார்த்தா, ஒரு சதுர அடிக்கு

புது வீடு !

2,750 வீதம் செலவாகியிருக்கு. ஆக, இந்த வீட்டுக்கு

புது வீடு !

27 லட்சம் செலவாகி இருக்கு!

புது வீடு !

பொதுவா, வீடு கட்டின புதுசுல ஆடம்பரமான ஃபர்னிச்சர்களையும், எலெக்ட்ரிக் பொருட்களையும் ஆசையா வாங்குவோம். ரெண்டு, மூணு வருஷங்கள்லயே அந்த பொருட்களை மெயின்டெயின் பண்றதுல கொஞ்சம் கொஞ்சமா ஆர்வம் குறைஞ்சுடும். இடம் வாங்கும்போதே பக்கத்தில் ரயில் நிலையம் இருக்கா, ஏர்போர்ட் இருக்கா, போஸ்ட் ஆபீஸ் இருக்கானு விசாரிக்கும்போது ஆரம்பிக்கிற ஆர்வம்... வீட்டைப் பயன்படுத்துறதுலயும், பாதுகாக்குறதுலயும் கடைசி வரைக்கும் குறையாம இருக்கணும். எவ்வளவு பணம், உழைப்பை இந்த வீட்டில் கொட்டியிருக்கோம்ங்கிற எண்ணம், வீட்டுல எல்லாருக்கும் எப்பவும் இருக்கணும்!'' என்று பாடம் சொல்லி முடித்தார் ராஜமன்னார்.

புத்தாண்டில் புது வீடு அமையட்டும்

      - கட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism