Published:Updated:

என் ஜூ(வ)ன் வாழுது !

ரேவதிபடம்: வீ.நாகமணி

என் ஜூ(வ)ன் வாழுது !

ரேவதிபடம்: வீ.நாகமணி

Published:Updated:
##~##

சுக துக்கங்களையெல்லாம் தூக்கியெறிந்து, உன்னதமான புது உறவின் வருகைக்காக உடலையும், உணர்வுகளையும் உருக்கி, மழலையை ஈன்றெடுக்கும் தாய்மைப்பேறு... பெண்மைக்கே உரிய பெரும்பேறு. ஆனால், பல்வேறு காரணங்களால்... பிள்ளைப்பேறு வாய்க்காமல் ஏங்கித் தவிப்போரின் கூட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் சோகம்.

இதுபோன்றோரை மகிழ வைப்பதற்காகவே டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் உள்ளிட்ட பல்வேறு முறைகள் கை கொடுக்கின்றன இந்த நவீன மருத்துவ உலகில்! இந்த வரிசையில் லேட்டஸ்ட்... 'சைட்டோபிளாஸ்மிக் இடமாற்ற சிகிச்சை' !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெண்ணின் கரு முட்டை தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடமிருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று குழந்தைப்பேறு அடைய வைப்பதுதான் இதுவரை தீர்வாக இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் (ஜீன்) தாயின் மரபணுவுக்குப் பதில், வேறு ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்கிற மன உணர்வு அதிகம் மேலிடும். ஆனால், சைட்டோபிளாஸ்மிக் இடமாற்றம் மூலம், அந்த மனக்குறையையும் போக்கும் வகையில்... முழுமையாக தாயின் மரபணு கொண்ட குழந்தையே பிறக்கும்''

- உணர்வுபூர்வமாக சொல்லி அதிசயிக்க வைக்கிறார்... சென்னையிலிருக்கும் 'மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டர்'-ன் மருத்துவ அறிவியலாளரான டாக்டர் பி.எஸ்.ஆர். மூர்த்தி.

என் ஜூ(வ)ன் வாழுது !

''குழந்தைப் பேறுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை பெண்ணின் வயது மிகவும் முக்கியம். வயதை கணக்கில் வைத்துதான் ரிசல்ட்டை சொல்ல முடியும். 25 வயது முதல் 34 வயதுக்குள் ஒரு பெண் எவ்வளவு சீக்கிரம் டாக்டரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் அதிகம்.

இயற்கையாகவே, பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியதும், ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு சினைத் துகள்கள் முட்டையாக வளரத் தேர்ந்தெடுக்கப்படும். இதில் ஒன்று மட்டும் முழுமையான வளர்ச்சி அடைந்து, மற்றவை வெளியேற்றப்படும். வயது ஏற ஏற... கரு முட்டையின் தரம் குறைந்து கொண்டே போகும். உதாரணத்துக்கு... 20 வயதான பெண்ணுக்கும், 40 வயதான பெண்ணுக்கும் உற்பத்தியாகும் முட்டைகள் ஒரே தரத்தில் இருப்பது இல்லை. அதாவது, 40 வயதில் ஒரு பெண்ணுக்கு முட்டையை வெளியே எடுத்தோம் எனில், அதன் வயதும் நாற்பதாகத்தான் இருக்கும். ஆம், பெண் குழந்தை பிறக்கும்போதே, சினைத்துகள்களோடுதான் பிறக்கிறது. எனவே, வயதான கருமுட்டை எனும்போது... குழந்தை பிறப் பதற்கான வாய்ப்பும் குறை வாகவே இருக்கும்!'' என்று  விளக்கம் தந்த டாக்டர், சைட்டோபிளாஸ்மிக் இடமாற்ற சிகிச்சை மூலம் சமீபத்தில் தங் கள் மையத்தில் குழந்தை பாக்கி யத்தைப் பெற்ற  ஒரு பெண்  ணின் கதையைச் சொன்னார்.

என் ஜூ(வ)ன் வாழுது !

''பல்வேறு கருத்தரிப்பு முறை களைக் கையாண்டு பலன் இல் லாமல்தான் அவர் எங்களிடம் வந்தார். அவருக்கு சிகிச்சையை ஆரம்பித்தோம். அவரிடம் இருந்த 5 முட்டைகளில் ஒரே ஒரு முட்டை மட்டும் தரத் துடன் இருந்தது. அந்த ஒரு முட்டையில் இருந்து சைட்டோ பிளாசத்தை தேவையான அளவுக்கு உறிஞ்சி எடுத்து, மற்ற நான்கு முட்டைகளுக்குள்ளும் செலுத்தி, ஐ.சி.எஸ்.ஐ.  எனப் படும் இன்ட்ரா சைட்டோ பிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக் ஷன் (ICSI -Intracytoplasmic sperm injection)வாயிலாகக் கருத்தரிக்க வைத்தோம். மூன்று முட்டைகள் கருக்களாக மாறிய தும், அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்தோம். ஒரு ஆண், ஒரு பெண் என அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.  இப்படிப் பிறக்கும் குழந்தை முற்றிலும் பெற்றோரின் மரபணுவையே கொண்டிருக் கும்'' என்று உற்சாகமாக சொன்ன டாக்டர்,

''ஒருவேளை அனைத்து முட்டைகளும் தரம் குறைந்த தாக இருந்திருந்தால், வேறு  ஒரு பெண்ணிடமிருந்து தரமான முட்டையை தானமாகப் பெற்று, அதிலிருந்து 5 முதல் 8 சதவிகிதம் வரை சைட்டோபிளாசத்தைப் பிரித்து எடுத்து, குழந்தைப்பேறு பெற வேண்டிய பெண்ணின் தரம் குறைந்த முட்டையில் சேர்த்து அதன் தரத்தை உயர்த்துவோம். இப்படி பிறக்கும் குழந்தையும் முழுக்க தாயின் மரபணு சார்ந்ததாகவே இருக்கும்'' என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism