Published:Updated:

எடுத்த சபதம் என்னாச்சு..?

ம.மோகன்

எடுத்த சபதம் என்னாச்சு..?

ம.மோகன்

Published:Updated:
##~##

வருடா வருடம் புத்தாண்டு சபதம் எடுப்பது, நம் 'டிஃபால்ட்’ வழக்கம். சென்ற ஜனவரி 1-ல் எடுத்த ரெசல்யூஷன், இந்த டிசம்பரில் மீண்டும் புத்தாண்டுப் பேச்சு வரும்போதுதான் மூளைக்குள் கிரீன் பல்பு ஒளிர்ந்து நினைவுக்கு வரும் பலருக்கும்!

இதோ... 2012 வந்து கொண்டே இருக்கும் இந்த நேரத்தில்... ''கடந்த புத்தாண்டுகள்ல நீங்க எடுத்த சபதத்தின் கரன்ட் ஸ்டேட்டஸ் என்ன..?'' என்று கேட்டோம் சில செலிப்ரிட்டிகளிடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடுத்த சபதம் என்னாச்சு..?

அனுஜா ஐயர், நடிகை: ''அழகு, ஆடம்பரத்துக்காக நாம பயன்படுத்துற நிறைய பொருட்கள் விலங்குகளின் தோல்ல இருந்தும் தயாரிக்கப்படுதுனு ரெண்டு வருஷத்துக்கு முன்னே தெரிஞ்சுக்கிட்டேன். காலணி, ஹேண்ட்பேக்னு நிறைய லெதர் பொருட்கள் வீட்ல இருந்தது. ஓர் உயிரைக் கொன்னு தயாரிக்கற பொருளை உபயோகிக்கறதை இனியாவது தவிர்க்கலாம்னு தோணுச்சு. 2010 நியூ இயர் அப்போ அதையே சபதமா எடுத்துக்கிட்டேன். இப்போ வரைக்கும் என் வீடு, வார்ட்ரோப்... ரெண்டுமே லெதர் ஃப்ரீ ஆயிடுச்சு. சாதிச்சுட்டேன்ல!''

எடுத்த சபதம் என்னாச்சு..?

நித்யா, டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ''நான் பயங்கரக் கோபக்காரி. அதனால பல ஃப்ரெண்ட்ஸை இழந்திருக்கேன். ஒருமுறை எங்கம்மா திட்டினாங்கனு அவங்ககூட கோபப்பட்டுட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டேன். இப்படி என் கோபத்தால நான் காயப்படுத்தியிருக்கிறவங்க நிறைய பேர். போன வருஷம் என் கோபத்தை விட்டுடணும்னு சபதம் எடுத்தேன். ஒவ்வொரு வருஷமும் ரெசல்யூஷன் எடுக்கறதும், அதுல ஃபெயில் ஆகறதும் எல்லாருக்கும் வாடிக்கைதானே? இந்த 12 மாதங்கள்ல நான் எத்தனை தடவை கோபப்பட்டேங்கிறது எண்ணிக்கை வெச்சுக்க முடியாத அளவுக்கு பெரிய லிஸ்ட். ஸோ, இந்த வருஷமும் என்னோட ரெசல்யூஷன்... கோபத்தை விடுறது. 'பார்ப்போம் பார்ப்போம்!’னு என் ஹஸ்பண்ட் கிண்டல் பண்றார்... பார்ப்போம்!''

எடுத்த சபதம் என்னாச்சு..?

அஞ்சனா, திரைப்பட இயக்குநர்: ''ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல... கடந்த எட்டு வருஷமா 'இந்த வருஷம் இயக்குநர் ஆயிடுவேன்!’ங்கிறதுதான் என்னோட நியூ இயர் ரெசல்யூஷன். ஒவ்வொரு முறையும் அதுக்கான வாய்ப்பு நழுவி, தள்ளி, தூரமானு போனாலும் நம்பிக்கையோட முயற்சிகளைத் தொடர்ந்தேன். போன நியூ இயர்லயும் இதே ரெசல்யூஷனை நான் ரீ-சார்ஜ் செய்துக்க, அந்தக் கனவு ஒரு வழியா 2011-ல் நிறைவேறிடுச்சு. 'வெப்பம்’ படம், என்னை இயக்குநர் ஆக்கிடுச்சு. வெரி ஹேப்பி இயர் இது எனக்கு!''

எடுத்த சபதம் என்னாச்சு..?

சரண்யா பொன்வண்ணன், நடிகை: ''நாம டிசிப்ளிண்டா, சின்ஸியரா இருக்கலாம். ஆனா, மத்தவங்ககிட்டயும் அந்த டிசிப்ளின், சின்ஸியாரிட்டியை எதிர்பார்க்கறதுதான் என்னோட பிரச்னை. தங்களோட தவறுகளுக்கு அவங்க சொல்ற சமாளிப்புகளும், பொய்க் காரணங்களும் என்னை இன்னும் டென்ஷன் ஆக்கும். அதை அவங்க முகத்துக்கு நேரா கேட்கறதால, அவங்க திருந்தப் போறதில்லை. பதிலா, அவங்களோட நியாயம் இல்லாத கோபத்தைதான் நான் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதனால, இந்த விஷயத்துல என்னை நான் மாத்திக்கணும்னு போன வருஷம் நியூ இயர் சபதம் எடுத்தேன். மனிதர்களோட குறைகளை, பொய்களை கண்டுக்காம கடக்கவும் இப்போ நிறைய பழகிட்டேன். என் கணவர்கூட, 'இவ்ளோ பொறுமைசாலியா மாறிட்டியே?!’னு ஆச்சர்யப்பட்டார். இந்த நியூ இயர் கான்சப்ட் சூப்பர் ஐடியாதாங்க!''

எடுத்த சபதம் என்னாச்சு..?

மஹதி, பாடகி: ''புதுசா ஒரு நல்ல பழக்கத்தை ஃபாலோ பண்றதுபோல, இருக்கற கெட்ட பழக்கத்தை விடறதும் நியூ இயர் ரெசல்யூஷனா இருக்கலாம் இல்ல..?! அப்படித்தான் என் நகம் கடிக்கிற பழக்கத்தை விடணும்னு போன நியூ இயர்க்கு சபதம் எடுத்தேன். நகம் வளர்க்கறதுல ஆர்வம் காட்டினா, நகம் கடிக்கிற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா போயிடும்னு ஆசையா நகம் வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, அந்த ஐடியா கொஞ்ச நாளைக்குத்தான் தாக்குப் பிடிச்சது. வளர்ந்த நகத்தை கடிச்சு கடிச்சுத் துப்ப ஆரம்பிச்சுட்டேன். அதை ஏன் கேட்கிறீங்க... இந்த மாசத்துல இருந்தாவது விட்டுடணும்னு கிட்டத்தட்ட இந்த 12 மாசமா நானும் ட்ரை பண்றேன். ம்ஹூம்... முடியல. நீங்க ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்களேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism