Published:Updated:

அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா

அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா

த்ரீ ரோஸஸ் மா.பாண்டியராஜன் - படம் : பா.காளிமுத்து

அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா

த்ரீ ரோஸஸ் மா.பாண்டியராஜன் - படம் : பா.காளிமுத்து

Published:Updated:
அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா

க்கா இருக்கிற தம்பிகளுக்கு அம்மாவுக்குப் பின் அக்காதான் எல்லாமே. ஓர் அக்கா இருந்தாலே அந்த வீட்டில் தம்பியாகப்பட்டவன் கொடுத்துவைத்தவன். `சூப்பர் சிங்கர்' அஜய் கிருஷ்ணாவுக்கோ மூன்று அக்காக்கள்.   

அக்காக்களே என் பலம்! - பாடகர் அஜய் கிருஷ்ணா

‘`ஒரு முக்கோணத்தின் உச்சியில் இருக்கிற கூர்மை நானென்றால், என்னைத் தாங்குகிற பில்லர், பேஸ்மென்ட், பலம் எல்லாமே என் அக்காக்கள்தான். எனக்காக அவங்க செய்த தியாகங்களையெல்லாம் அவ்வளவு ஈசியா சொல்லிட முடியாது. மூத்த அக்கா வனிதாவுக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. இரண்டாவது அக்கா வதனிக்கும் மூணாவது அக்கா கவிதாவுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. அவங்க எனக்காகவே வேலைக்குப் போயிட்டிருக்காங்க’’ என்று அஜய் கிருஷ்ணா சொல்லும்போது இடைமறித்துப் பேச ஆரம்பித்தார் பெரிய அக்கா வனிதா.

‘`அஜய்க்குப் பத்து வயசு இருக்கும்போது எங்கப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து, அவரால வேலைக்குப் போக முடியாத நிலை. அப்போதான் எங்களுக்குப் பசின்னா என்னன்னே தெரிஞ்சது. ‘அப்பா, நான் ஒரு பையனா பிறந்தா என்னை வேலைக்கு அனுப்புவீங்கதானே... என்னை ஒரு பையனா நினைச்சுக்கோங்க. வேலைக்குப் போறேன்பா’னு சொல்லிட்டு நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். 800 ரூபாய் சம்பளத்தை வெச்சு குடும்பம் நடத்தினோம். அப்போ அஜய்க்கு விவரம் தெரியாத வயசு. என் தங்கச்சி வதனிதான் அவனுக்குள்ள இருந்த பாடும் திறமையை கண்டுபிடிச்சா’’ என்று வதனியின் பக்கம் பார்வையைத் திருப்புகிறார் வனிதா

``அஜய் குழந்தையா இருந்தப்போவே `சின்னதம்பி’ படத்துல வந்த `போவோமா ஊர்கோலம்...’ பாட்டைப் பாடிட்டே இருப்பான். `நம்ம தம்பி நல்லா பாடுறானே அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சா நல்லாருக்கும்’னு எனக்குத் தெரிஞ்சவங்க கல்யாணம், வரவேற்புனு எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் `என் தம்பியைப் பாட வைங்க’னு போய்க் கேட்பேன். யாருனே தெரியாதவங்க வீட்டு விசேஷத்துலேகூட என் தம்பியைப் பாட வெச்சிருக்கேன்’’ என்று சொல்லும் போதே வதனி சிரிக்க, தம்பியின் முதல் மேடை அனுபவத்தைப் பகிர்ந்தார் சின்ன அக்கா கவிதா. 

‘`அஜய்க்கு ஏழு வயசு இருக்கும்போது ஸ்கூல்ல நடந்த போட்டிக்காக, ‘பூட்டைத் திறப்பது கையாலே... நல்ல மனம் திறப்பது மதியாலே...’ பாட்டை பக்காவாகச் சொல்லிக்கொடுத்தோம். எங்க வீட்டுக்குள்ளே நல்லாப் பாடிட்டு இருந்தவன், அவ்ளோ பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் அழுதுட்டே ஓடி வந்துட்டான். நாங்க அவனை சமாதானப்படுத்தி மறுபடியும் மேடைக்கு அனுப்பி வெச்சோம். இரண்டு வரியை மட்டும் பாடிட்டுத் திரும்பவும் ஓடி வந்துட்டான். மறுபடியும் அவனை மேடைக்கு அழைச்சுட்டுப் போய், ‘என் தம்பி நல்லா பாடுவான். அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க’னு கேட்டா, `நீதான்மா அப்படிச் சொல்ற. அவன் எங்க பாடுறான்’னு சொல்லிட்டார். அஜய்க்குக் கிடைச்ச முதல் மேடையிலேயே அவன் பாடாம இறங்கி வந்தது எங்களுக்கு வருத்தமா இருந்தது. அதுக்கப்பறம் நாங்களே அஜய்க்கு நிறைய பயிற்சி கொடுத்து டெவலப் பண்ணினோம்’’ என்று கவிதா சொல்ல, ‘`தம்பி படிப்புலேயும் நல்லா வரணும்னு அவனை இன்ஜினீயரிங் வரை படிக்க வெச்சோம்'’ என்றபடி தொடர்ந்தார் வனிதா.

‘`ஒருத்தர் லோன் வாங்கித்தரேன்னு சொல்லி, அப்பாகிட்டே சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிட்டு, எங்க வீட்டை அடமானம் வெச்சு பேங்க்ல பணம் வாங்கிட்டு ஓடிட்டார். பேங்க்ல இருந்து வீட்டை ஜப்தி பண்ண வந்தப்போதான் எங்க அப்பா அந்த விஷயத்தையே எங்ககிட்ட சொல்றார். பல இடங்களில் கடன் வாங்கி, அந்தப் பணத்தைக் கட்டி வீட்டைத் திருப்பினோம். அந்த நேரத்தில்தான் அஜய் காலேஜ் படிச் சுட்டிருந்தான். அதற்கும் கடன் வாங்கித்தான் ஃபீஸ் கட்டினோம். இப்படிப் பல கடன்களை அடைக்க, ஹேண்ட் பேக் மாட்டிக்கிட்டு வேலைக்குக் கிளம்பினோம். இன்னிக்கு வரை அந்த பேக்கைக் கழற்றலை. எனக்கு எப்படியோ போராடி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. என் தங்கச்சி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணணும்’’ என்று வனிதா கண்கலங்க, அஜய்யும் உருகினார்.

``இத்தனை கஷ்டங்களையும் கடன்களை யும் பார்க்கும்போது பாடுறதையெல்லாம் விட்டுட்டு வேலைக்குப் போயிடலாம்னு தோணும். ஆனா, இவங்க என்னை விடமாட்டாங்க. ‘அஜய்பா இவ்வளவு முயற்சி பண்ணிட்ட... விட்டுடாதே. வீட்டை நாங்க பாத்துக்குறோம். நீ முயற்சி பண்ணிட்டே இரு’னு என்னைத் தடுத்திடுவாங்க. இப்போ விஜய் டி.வி `சூப்பர் சிங்கர்' மூலமா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நம்புறேன். மூணு அக்காக்கள் மாதிரியே எங்க மாமா பாலமுருகனும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கார்'' என்கிற அஜய்யைத் தொடர்கிறார் வனிதா.

‘`எங்க வீட்டுப் பிரச்னைகளை அவருடைய பிரச்னைகளா நினைச்சுட்டு முடிஞ்ச உதவிகளைச் செய்கிறார் என் கணவர். அஜய்க்கு டெங்கு வந்து சீரியஸா இருந்தபோதும், இவர்தான் கூடவே இருந்து பார்த்துக்கிட்டார். இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்’’ என நெகிழ்கிறார் வனிதா.

‘` ‘முகவரி’ படத்துல வர்ற வசனம் மாதிரி, எட்டு அடி தோண்டிட்டேன். இன் னும் ரெண்டு அடிதான் இருக்கு. என் அக்காக் களோடு சேர்ந்து என்னை சப்போர்ட் பண்ண இப்போ நிறைய பேர் இருக்காங்க. அவங்க நல்ல மனசே என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு போகும்னு நினைக்கிறேன்’’ எனக் கண்களில் நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் அஜய் கிருஷ்ணா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism