Published:Updated:

எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!

எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!

பிசியோதெரபிஸ்ட் கவிதாவாழ்த்துகள்சு.சூர்யா கோமதி - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

ந்திய ஒலிம்பிக் அணியில் இடம் பிடித்திருக்கும் முதல் பெண் அத்லெட்டிக் பிசியோதெரபிஸ்ட் கவிதா. பக்கா சென்னைப் பெண்ணான இவர், பேசப் பேச சுவாரஸ்யம்.  

எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!

‘`நான் ஆறாம் வகுப்பு படிச்சப்போ, ஆள் குறைப்புனு சொல்லி எங்கப்பா வரதராஜனை வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் அன்றாடம் கிடைக்கும் வேலைகளைச் செய்துதான் எங்களைப் படிக்க வெச்சாங்க. என் அக்கா, எங்க வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரி. அவளை எல்லாரும் பாராட்டியிருக்கணும். ஆனா, ‘பொண்ணு படிச்சு என்ன சாதிக்கப் போகுது? படிக்கவைக்கிறதுக்குப் பதிலா கல்யாணம் பண்ணிக் கொடுத்துடு’னுதான் எங்கப்பாகிட்ட பலரும் சொன்னாங்க. அவங்ககிட்டயெல்லாம் எங்கப்பா, ‘என் பிள்ளைங்க சமையல் செய்யறதுக் காக மட்டும் பிறந்தவங்க இல்ல’னு சொல்லி வாயடைச்சாங்க'' என்கிற கவிதா, டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டு பிசியோதெரபிஸ்டான கதையைச் சொன்னார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!

‘`12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் எம்.பி.பி.எஸ்-ல சேர்ற அளவுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை என்னால எடுக்க முடியலை. என்னை இவ்வளவு செலவழிச்சுப் படிக்கவெச்சது வீணாபோச்சேனு நான் அழுதப்போ, அம்மாவும் அப்பாவும் அக்காவும், ‘உன் கட் ஆஃப்க்கு பிசியோதெரபி கோர்ஸ் கிடைச்சிருக்கு... சியர்ஸ்’னு அந்தத் தருணத்திலும் என் எனர்ஜி வடியாம உற்சாகப்படுத்தினாங்க. கவுன்சலிங் முடிச்சு சென்னை, முஹம்மது சதக் ஏ.ஜே கல்லூரியில் பிசியோதெரபி கோர்ஸ் சேர்ந்தேன். நான் த்ரோ பால் பிளேயர் என்பதால, அடிக்கடி மைதானத்தில்தான் இருப்பேன். அப்போ யாருக்காவது அடிபட்டுச்சுன்னா பிசியோதெரபி பண்ணுவேன். நான் சிகிச்சை அளிக்கும் முறை, அடிபட்டவர்களிடம் பழகும் விதத்தைப் பார்த்துட்டு, சென்னை ஹாக்கி அசோஸியேஷனில் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தாங்க. அதுதான் ஆரம்பம்’’ என்று சொல்லும் கவிதா, ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என விறுவிறுவென முன்னேறியிருக்கிறார். 

எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கு சந்தோஷப்பட்டேன்!

``ஆசியப் போட்டியில் பூவம்மா தங்கப்பதக்கம் வென்றது... தொடர்ந்து  நம் தேசிய கீதம் ஒலிக்க இந்தியக்கொடி உயரே பறந்தது என அந்த மகிழ்ச்சி தருணத்தில் நானும் ஓர் அங்கமா நின்றப்போ, சிலிர்ப்பா இருந்தது. நான் மதிப்பெண் குறைவா வாங்கினதுக்கும் எம்.பி.பி.எஸ் ஸீட் கிடைக்காமல் போனதுக்கும் அன்னிக்கு சந்தோஷப்பட்டேன்’’ என்கிற கவிதாவுக்கு, ரியோ ஒலிம்பிக்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரிய சர்ப்ரைஸாம். 

``அந்தத் தருணதுல கத்திச் சொல்லணும்போல இருந்துச்சு... ‘அப்பா, உங்க பொண்ணு ஜெயிச்சிட்டா’னு. ஆனா, போன்ல விஷயத்தைச் சொல்லும்போது சத்தமே வரலை. ‘இத்தனை வருஷத்துல உங்க அப்பா அழுததை இன்னிக்குதான் பார்க்கிறேன்’னு அம்மாவும் அழுதுகிட்டே பேசினாங்க. எங்க குடும்பத்திலேயே வெளிநாடு போன முதல் ஆள் நான்தான். என் பள்ளி ஆசிரியர்கள், தோழிகள்வரை அத்தனை பேரும் வந்து வழியனுப்பி வெச்சாங்க. ஒரு பெண் நினைச்சா நிச்சயம் எதையும் சாதிக்க முடியும்” - மகிழ்வும் நெகிழ்வுமாகக் கைகுலுக்குகிறார் கவிதா.

பெண், மனதளவில் நூறு ஆண்களுக்கு இணையானவள் தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism