Published:Updated:

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

மூன்றெழுத்து அற்புதம்படம் : சி.சுரேஷ்பாபு

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

மூன்றெழுத்து அற்புதம்படம் : சி.சுரேஷ்பாபு

Published:Updated:
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

உங்களாலும் முடியும்!

ந்த உலகத்திலேயே எனக்குக் கிடைத்த அம்மா மாதிரி யாருக்கும் கிடைத்திருக்க முடியாது. என் அம்மா பிறக்கும்போது நன்றாகத்தான் பிறந்தார். இரண்டு வயதில் குச்சி வைத்து விளையாடி, தன் கண்ணைத் தானே குத்திக்கொண்டார். அதனால் வலது கண்பார்வையே பறிபோனது. 

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கண்பார்வையோடு படித்தார். ‘குருடி... குருடி’ என்று கிண்டல் செய்ததால் படிப்பைப் பாதியில் கைவிட்டார். கண் போலவே இருக்கும் லென்ஸை வைத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் பார்வை கிடைக்காது. ஆனால், மற்றவர் பார்க்கும்போது கண் இருப்பது போல தெரியும். ஒரு கண்பார்வையிலேயே படித்து ஆசிரியரானார்.

வீட்டிலும் அம்மாதான் எல்லா வேலை களையும் பார்ப்பார். நானும் தம்பியும் இந்த அளவுக்குப் படித்து வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அம்மா சொன்ன வார்த்தைகள்தாம் காரணம். ‘ஒரு கண்ணை வெச்சுப் படிச்சு நானே ஆசிரியராகியிருக்கும்போது உங்களால முடியாதா?’ என்று அம்மா சொன்னபோதுதான் என் அம்மாவுக்கு ஒரு கண்ணில்தான் பார்வை என்று எனக்கும் தம்பிக்கும் தெரிந்தது. அம்மாவுக்கு  இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தும் அப்பா காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் என்பது கூடுதல் சிறப்பு.

- எக்ஸ்.ஏஞ்சல் தினேஷ், அனுமந்தன்பட்டி

பரிசுகள் எனக்கு...  பெருமைகள் அவருக்கு!

நா
ன் பிறக்கும் முன்பே என்னைப் பற்றிக் கனவு கண்டவர் என் தாய். எனக்காக அவர் சேமித்த பொக்கிஷம், இன்று பல பரிசுகளைப் பெற எனக்கு உறுதுணையாக இருக்கிறது.

என் அம்மாவுக்குத் திருமணம் முடிந்து ஆறாண்டுகளுக்குப் பிறகே பிறந்தேன். இந்த ஆறாண்டுகளில் பல மருத்துவப் பரிசோதனைகள் செய்து எதுவும் பலன் தராதபோதும், ஒரு நம்பிக்கையோடு அவர் சேமித்த அந்தச் செல்வத்தைப் பற்றித்தான் எழுதுகிறேன்.

நான் 2000-த்தில் பிறந்தேன். அம்மாவுக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கும் போது அவர் கண்ணில்பட்டதுதான் விகடன் சுதந்திரதின பொன்விழா மலர். இரண்டு புத்தகங்களாக 1997-ம் ஆண்டு வெளிவந்த அந்தப் புத்தகத்தின் விலை 25 ரூபாய்.

அன்றைய சூழ்நிலையில் 25 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை.  `25 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கி அதை வைத்து என்ன செய்யப்போகிறாய்?’ என்று கேட்டிருக்கிறார் என் அப்பா. அதற்கு அம்மா சொன்ன பதிலைக் கேட்டால் ஆச்சர்யம் மேலிடும். அந்தப் பதில்தான் இன்று என் வீட்டு அலமாரியை நிறைத்திருக்கும் சன்மானங்களுக்குக் காரணம்.

அம்மா, ‘`எனக்குக் கண்டிப்பாக ஒரு மகள் பிறப்பாள். அவள் பேச்சில் சிறந்து விளங்குவாள். அன்று இந்தப் புத்தகங்களைத் தேடி வாங்க முடியாது. இதில் இருக்கும் பல நல்ல விஷயங்கள் நாளை நம் மகளுக்குப் பயன்படும். அதனால் இது கண்டிப்பாக வேண்டும்!” - எனக்காக அம்மா சேமித்த புத்தகங்களோடு விகடனில் வரும் கருத்துள்ள பக்கங்களையும் கத்தரித்து பத்திரப்படுத்தியிருக்கிறார். இன்று வரையிலும் இது தொடர்கிறது. இன்று பல மேடைகளில் பேசிப் பரிசும் பாராட்டும் வாங்கும்போது,  `நான் பிறக்கும் முன்பே இதை எப்படி உணர்ந்தார் அம்மா?!’ என்று வியப்பில் ஆழ்வேன். பள்ளி ஆசிரியர்கள் என்னிடம்  `உங்க அம்மா பிஹெச்.டி-யா?' என்று கேட்பார்கள். என் அம்மா எஸ்.எஸ்.எல்.சி-தான் என்றால் நம்ப மறுக்கிறார்கள்.

விகடனில் வந்த சிறந்த கருத்துகளைச் சொல்லிக்கொடுத்து என்னை ஒரு வளரும் பேச்சாளராக மட்டுமல்லாமல், இதே விகடன் குழும இதழ்களில் ஒன்றான சுட்டி விகடனில் இரண்டு வருடங்கள் சுட்டி ஸ்டாராகப் பணியாற்றும் அளவுக்கு என்னை என் அம்மா வளர்த்திருக்கிறார்.

என் தோழிகள் என்னிடம்  `உன் வாழ்க்கையில் உன் அம்மா சிறந்த வழிகாட்டியா இல்லைன்னா நீயும் பத்தோடு பதினொன்றாய்த்தானே இருந்திருப்பாய்?’ என்று வினா எழுப்பியபோதும், என்னுடைய மேடைப்பேச்சை ரசிக்கும், பாராட்டும், அம்மாவைவிட வயதில் பெரியவர்கள் என்னிடம் `கடவுள் உனக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உன் அம்மா’ என்று சொல்லும்போதும், `ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கும் உன்னால் மேடையில் எப்படி இப்படித் தமிழ் பேச முடிகிறது?’ என்று வியப்பில் வினா எழுப்பும்போதும், என் மனம் சலிக்காமல் ஒரே பதிலை எல்லோரிடமும் சொல்லச் சொல்லும். அந்தப் பதில்..  `அம்மாதான் என் முதல் குரு!’ அந்த அன்னைக்கு நான் என்ன செய்துவிட முடியும்... அவளைப் பற்றி அவள் விகடனில் எழுதுவதைத் தவிர?

- ஜெ.காவியாஸ்ரீ, திருச்சி

இதயத்தில் சுமப்பவள்!

ன் அம்மா சாந்திக்குக் கல்யாணமாகி நீண்ட வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் என்னைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். அதற்குப் பிறகு கர்ப்பமானார். என்மீது உள்ள பாசம் குறைந்துவிடும் என்பதற்காகக் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்துக் கலைத்துவிட்டார்.

நான் காதல் திருமணம் செய்துகொண்டேன். என் அம்மா என்னைக் கண்டித்தாலும், மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள். என் திருமணத்துக்குப் பிறகும் என் அம்மாதான் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்துவருகிறார். வீட்டையும் நகையையும் அடமானம் வைத்து எனக்குத் தறி அமைத்துக் கொடுத்தார். அந்தத் தொழில் பல நஷ்டங்களைச் சந்தித்தபோதும் தோழியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து அரவணைத்துச் சென்றவர் என் அம்மா.

- எஸ்.முகிலா, நாமக்கல்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism