Published:Updated:

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி
பிரீமியம் ஸ்டோரி
தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

புதுசு...இந்துலேகா.சி

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

புதுசு...இந்துலேகா.சி

Published:Updated:
தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி
பிரீமியம் ஸ்டோரி
தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

“ஆடைகளைப் பொறுத்தவரைக்கும், ‘மிஸ்’ஸா இருக்கும்போது ஒரு ஸ்டைலை ஃபாலோ பண்ற பொண்ணுங்க, மிஸஸ் ஆனதும் வேற ஸ்டைலை ஃபாலோ பண்ண விரும்பறாங்க. குறிப்பா, கல்யாணத்துக்கு ஹெவியா டிரஸ், நகைகள் எல்லாம் போட்டு களைப்படைஞ்சு, கல்யாணத்துக்கு அப்புறம் ரிலாக்ஸா, கம்ஃபர்டா இருக்கணும்னு நினைக்கறாங்க. இவங்களோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி கம்ஃபர்ட் ஃபிட் டிரஸ்கள்தான் இப்போதைய ட்ரெண்டு” என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மலர் விக்ரம், தான் வடிவமைத்த ஆடைகளைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பகிர்கிறார்... 

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

ரு பக்கம் மட்டும் கஃப்தான் ஸ்டைலில் புதுவித தோற்றத்தில் ஈர்க்கும் இந்த வெந்தய மஞ்சள் டிரஸ்ஸுக்கு, இப்போதைய ட்ரெண்டான ஆக்சிடைஸ்டு ஜுவல்லரி அல்லது ரூபி, கேட்ஸ் ஐ, சஃபயர் போன்ற கற்கள் பதித்த நகைகள் மற்றும் ஒரு காலில் மட்டும் ஆங்க்லெட் அணியும் பொழுது உங்களுக்குள் இருக்கும் கலை ஆர்வம் உங்கள் தோற்றத்தில் பிரதிபலிக்கும்.

 ரூ. 1,680

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி
தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

வித்தியாசமான கலர் காம்பினேஷனில், முகைஷ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள அசிமெட்ரிக் டிசைன் டிரஸ், கெட் டு கெதர், நண்பர்களுடனான பார்ட்டி, கணவருடன் அவுட்டிங் என அனைத்துக்குமே பொருத்தமானது.

 ரூ. 2,790

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

பிரின்டட் காட்டன் மெட்டீரியலில், இரு பக்க கவ்ல் டைப் டிசைன் மற்றும் எல்போ ஸ்லீவ் என புதுவித தோற்றம் தரும் இந்த டிரஸ்ஸுக்கு தோதான நகைகளைத் தேடி அணிந்தால் கூடுதல் அழகில் மிளிரலாம்.

 ரூ. 2,680

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

ழுத்துப் பகுதியில் மட்டும் சம்கி வேலைப் பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த அஜ்ரக் பிரின்டட் காட்டன் டிரஸ்ஸின் சிறப்பே, ஒரு லேயருக்கு மேல் ஓவர்லாப் செய்யப்பட்டுள்ள வித்தியாசமான வடிவமைப்புதான். இதற்கு ஃபிளாட் அல்லது ஹை பம்ப் காலணிகளை அணிந்தால் பொருத்தமானது. லேஸ் வைத்த ஷூக்களை தவிருங்கள்.

 ரூ. 3,850

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

ஜ்ரக் பிரின்டட் காட்டன் மெட்டீரியலில், கஃப்தான் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த ஷார்ட் டாப் சிம்பிளாகவும், யுனிக்காகவும் இருக்கும்.

 ரூ. 1,460

தனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி

ங்க பார்ட்னருடன் ஒரு ஜாலி டிராவலுக்கு, இந்த வெர்டிகல் பிரின்டட் காட்டன் கவ்ல் டிரெஸ் பெஸ்ட் சாய்ஸ்.

 ரூ. 1,975

உதவி: Malar Vikram Bridal Couture, சென்னை

மாடல்கள்: பிரியதர்ஷினி விஜய், ஸ்வேதா ரேணுகுமார்

படங்கள்: Virtuoso Studios, Thivakaran Photography, சென்னை