Published:Updated:

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

கலைஎம்.ஆர்.ஷோபனா

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

கலைஎம்.ஆர்.ஷோபனா

Published:Updated:
அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

‘`காலேஜ்ல ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு இருந்தப்போ, `நாம பெரிய ஃபேஷன் டிசைனர்  ஆகணும்’னு கனவு இருந்தது. என் படிப்பை முடிக்கும்போதுதான், பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்னு ஒரு பிரத்யேக துறையே இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். என் தனித்துவமான ஸ்டைலிங் ஐடியாஸால இதில் இப்போ நல்ல பெயர் எடுத்திருக்கேன்’’ - புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட் ஸ்டெஃப்பி மார்வின்.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

நம் ஊரில் திருமண மேக்கப் என்பது காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. மணப்பெண்ணுக்கு வீட்டிலேயே கொஞ்சம் பவுடரும், லிப்ஸ்டிக்கும் போட்டுவிட்டு அலங்காரம் செய்த காலம் போய், பியூட்டி பார்லருக்குச் சென்று மேக்கப் செய்துகொள்கின்றனர். அல்லது திருமண மண்டபத்துக்கு பியூட்டிஷியனை வரவழைத்து அலங்காரம் செய்கின்றனர். அந்த வரிசையில் இன்று மோஸ்ட் வான்டன்ட் அழகுக் கலைஞர்கள், மணப்பெண்ணின் தனித்துவ அழகம்சங்களை ஹைலைட்  செய்துகாட்டும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்கள்தாம். அப்படி ஒருவரான ஸ்டெஃப்பி, இத்துறையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

‘’நான்  ஃபேஷன் டிசைனிங் முடிச்சுட்டு, மும்பையில மேக்கப் கோர்ஸ் படிச்சேன். இந்தத் துறையில் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன், லண்டனைச் சேர்ந்த தமிழ்பெண், யூடியூப் சென்சேஷன் வித்யா ஹரி. நிறைய விஷயங்கள் அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அவங்களோட சென்னை, மலேசியா கஸ்டமர்ஸுக்கு வொர்க் பண்ணிக் கொடுத்திருக்கேன். இப்போ நான் மேக்கப் வொர்க்‌ஷாப் நடத்துற அளவுக்கு வளர்ந்திருக்கிறதுக்கு, அவங்க வழிகாட்டலும் காரணம்.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

என்னை பிரைடல் மேக்கப் ஆர்ட்டிட்ஸ்ட் என்பதைவிட, ஸ்டைலிஸ்ட்னு சொல்றதுதான் எனக்குப் பிடிக்கும். இப்போ இருக்கிற பெண்கள்ல சிலர், ‘எனக்கு என்ன நல்லாயிருக்கும்னு நீங்களே சொல்லுங்க, ரிசல்ட் செமையா இருக்கணும்’னு பொறுப்பை முழுசா நம்மகிட்ட ஒப்படைப்பாங்க. சிலர், பிரபலமான டிசைனிங் அண்டு மேக்கப்பைவிட, தனக்கு என்ன சூட்  ஆகும்னு தெரிஞ்சுக்கிட்டு, அவங்களே சில ஸ்டைலிங் ரெஃபரன்ஸ்களை நமக்குக் கொடுப்பாங்க. மொத்தத்தில், பிரைடல் மேக்கப்பில் இன்றைய பெண்களுக்கு ஒரு பெரிய ஆர்வம் வந்திருக்கு.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

என் பிரைடல் கஸ்டமர்களில் சில பெண்கள், வெளிநாட்டில் செட்டில் ஆகி, திருமணத்துக்காக இங்கே வந்து, மீண்டும் வெளிநாட்டுக்குக் கிளம்புறவங்களா இருப்பாங்க. அவங்க பிரைடல் மேக்கப் ட்ரடிஷனலா இருக்கணும்னு நினைக்கிற அதே நேரம், ரொம்ப ஃபேஷனபிளாகவும் இருக்கணும்னு  எதிர்பார்ப்பாங்க. அவங்களுக்கு ஈடுகொடுக்கிற அளவுக்கு மேக்கப்ல அட்வான்ஸ்டாகவும், எப்பவும் அப்டேட்டாகவும் இருக்கிறது எனக்கு சேலஞ்சிங்கான விஷயம்தான்.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

பிரைடல் மேக்கப் துறையில் இப்போ போட்டி பெருகிடுச்சு. அதையெல்லாம் சமாளிச்சு நின்னு காட்டுறதுதானே திறமை? சில நேரங்களில், மணப்பெண்ணுக்கு மேக்கப் முடிச்சுட்டு பார்க்கும்போது எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் போனால், கடைசி நிமிஷத்துலகூட  மொத்த மேக்கப்பையும் மாற்ற வேண்டியிருக்கும். அப்படி சில இடங்கள்ல நடத்திருக்கு. ஆனா, அந்த த்ரில் எனக்குப் பிடிச்சிருக்கு. பிரைடல் மேக்கப் என்றாலே ‘மாக் (Mac)’ போன்ற பிராண்டுகள்தான் இங்கு பிரபலம். ‘டார்டே (Tarte)’, ‘நார்ஸ் (Nars)’, ‘பெனிஃபிட்ஸ் (Benefits)’, ‘ஹுடா பியூட்டி (Huda Beauty)’ போன்ற பிராண்டுகளும்  சிறப்பானவை.

அரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்

பிரைடல் மட்டும் என்றில்லை, நான் எல்லாவிதமான மேக்கப்பும் செய்வேன். மும்பையில் நடந்த ‘மிஸ் திவா யூனிவர்ஸ் (Miss Diva Universe)’ நிகழ்ச்சிக்கு, பிரபல மேக்கப் அண்டு ஹேர் டிசைன் பிராண்டான ‘பியான்கா லெளசாடோ (Bianca Louzado)’ உடன் வொர்க் பண்ணியிருக்கேன்; பல மாடலிங் போட்டோஷூட்ஸ்ல  வேலை செஞ்சிருக்கேன்; விளம்பரங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன்; என் கணவர் மார்வினின் ஈவன்ட் மேனேஜ்மென்ட் டீம்லயும் வொர்க் பண்ணியிருக்கேன். இப்படி இந்தியா முழுக்க சுற்றி ‘ஃப்ரீலான்ஸ்’ வேலை பார்த்திருக்கேன். இந்தத் துறையில் கிடைக்கிற சுதந்திரமும், அங்கீகரிக்கப்படுற க்ரியேட்டிவிட்டியும் என்னை இன்னும் ஆர்வமா என்னை செயல்பட வைக்குது. சீக்கிரமே என் பிராண்டு பிரைடல் மேக்கப் ஸ்டுடியோவை ஆரம்பிக்கணும். மணப்பெண் தன்னை அழகாக்கும் வேலையை நம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் நம்மகிட்ட ஒப்படைக்கிற இந்தப் பெரிய பொறுப்பை அதற்கான அர்ப்பணிப்புடன் செய்யணும்... செய்வேன்!”