Published:Updated:

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!
தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

இந்த இதழ்  அவள் விகடன்: https://bit.ly/2BJI2Mv

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!
தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

``சண்முகதேவினு ஒரு பெண் எங்ககிட்ட வரும்போது ரெண்டு பெண் உதவியாளர்களை வெச்சுக்கிட்டு வீடுகளைச் சுத்தம் செய்து கொடுக்கிற வேலை பண்ணிட்டிருந்தாங்க. அவங்களுக்கு வழிகாட்டினோம். இன்னிக்கு அவங்க ஹவுஸ்கீப்பிங் கம்பெனி நடத்தறாங்க. டர்ன் ஓவர் ரூ.2 கோடி’’ - வேலை தேடுவோரை வேலை உருவாக்குபவர்களாக மாற்றும் முனைப்பால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழிலதிபர்களாகத் தலை நிமிர்ந்திருக்கும் பி.ஒய்.எஸ்.டி பின்னணியில் செயல்படும் லட்சுமி வெங்கடேசன் கடந்து வந்த பாதையுடன் 'வெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்' கவர் ஸ்டோரியில் நமக்கும் வழிகாட்டுகிறார். 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

* இளையராஜாவின் இசையில் முதல் பாடல் வாய்ப்புத் தருணம்..? * ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவம்... * நீங்கள் தமிழ் கற்றுக்கொள்ள பாடலாசிரியர் வைரமுத்து உதவினாராமே? * பாடகியாக ஆகவில்லை எனில்..? - 'அவள் அரங்க'த்தில் வாசகிகளின் கேள்விகளுக்கு இசைச்சாரல் பதில்களை சற்றே விரிவாகவே தந்திருக்கிறார் `சின்னக்குயில்' சித்ரா. 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

"...ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பையன்மீது எனக்கும் இனக் கவர்ச்சி ஏற்பட்டது... விவரம் தெரிந்து 23 வயதில்தான் எனக்கு 'முதல் காதல்' அனுபவம் வாய்த்தது. ஆனால்..." - சொந்த அனுபவங்களுடன், காதல் என்ற மூன்றெழுத்துக்கு முந்நூறு தத்துவார்த்த விளக்கங்களோடு அசரடிக்கிறார் சின்னத்திரை நாயகி சரண்யா. 'என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா' என்ற அனுபவப் பகிர்வு ஈர்ப்பு மிக்கது. 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

``ஓரிடத்துக்குப் போக ஷேர் ஆட்டோ பேசிட்டிருந்தேன். அப்போ ஒரு பெண் வந்து, 'எனக்குத் தெரியும் வாங்க... நான் அந்த ஸ்கூல்லதான் வேலைபார்க்கிறேன்'னு கையைப் பிடிச்சுக் கூப்பிட்டுப் போய் ஒரு ஷேர் ஆட்டோவுல உட்காரவெச்சாங்க. எனக்கு சந்தேகம் வந்தது. சில விஷயங்கள் நடந்தது. நான் எஸ்கேப் ஆகிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பெண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று..." - சென்னையைச் சேர்ந்த பயண ஆர்வலர், போட்டோகிராபர் சனா உதயகுமாரின் அனுபவங்களைச் சொல்லும் 'தனியே... தன்னந்தனியே...' நமக்குச் சொல்லும் சேதிகள் பற்பல. 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

``ஒரே ஒரு டிபன் கேரியரோடு ஆரம்பிச்ச பிசினஸ் இது. இன்னிக்கு இதுதான் எனக்கு வாழ்வாதாரமா மாறியிருக்கு...’’ என்கிற மதுமிதா, ஆர்வமுள்ளோருக்கு வழி காட்டுகிறார். கவனமாக இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்களைத் தருகிறது 'கேட்டரிங் - நீங்களும் செய்யலாம்!' சக்ஸஸ் கட்டுரை!

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

``வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; அசலுக்கு எந்தப் பங்கமும் வரக் கூடாது" என்பதில் நம்மவர்கள் படுகுறியாக இருப்பார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப கெட்டி. இதுமாதிரியானவர்களுக்கு ஏற்றவை கடன் பத்திரங்கள். இதில் முதலீடு செய்து பலன் பெற வழிகாட்டுகிறது 'கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!' தொடர் பகுதி. 

இந்த இதழ்  அவள் விகடன்: https://bit.ly/2BJI2Mv

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரான ஜெயஸ்ரீ, சாஃப்ட்வேர் வேலையைப் புறந்தள்ளிவிட்டு, முழுநேர போட்டோ கிராபரானதன் பின்னணியில் இருப்பது அழகான கதை. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டோகிராபராக வலம் வரும் இவரது அனுபவக் குறிப்புகளை உள்ளடக்கிய 'போட்டோகிராபி - ஜெயஸ்ரீ' கட்டுரையில் தெரிந்துகொள்ள புதியவை உண்டு.

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ், சின்ன வெங்காயம் துவையல், பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ், மிளகு ரொட்டி, தவா கத்திரிக்காய் கிரிஸ்ப்ஸ் என விதவிதமான 30 சமையல் குறிப்புகளைத் தருகிறது, '30 வகை ஈஸி ரெசிப்பி! - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்' இணைப்புப் பகுதி. 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

மிக்ஸ்டு நவ சிறுதானியம் ரொட்டிகள், கேழ்வரகு சப்பாத்திகள், கொள்ளு ரொட்டிகள், கினோவா ரொட்டிகள், சோளம் சப்பாத்திகள், ஓட்ஸ் ரொட்டிகள்... எழுத்து - வீடியோ வடிவிலான செய்முறைகள் மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்தையும் விவரிக்கிறது 'கிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி'ப் பகுதி. 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா? மார்பகங்களை அழகுபடுத்தும் சிகிச்சைகளால் ஆபத்தா? ஹார்மோன் தெரபி சிக்கலை ஏற்படுத்துமா? மார்பக மசாஜ் நல்லதா? உடல் எடையும் உணவுப் பழக்கமும் மார்பகங்களைப் பாதிக்குமா? - எளிமையான புரிதலைத் தருகிறது 'மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்!' எனும் ஹெல்த் ஆர்ட்டிகிள். 

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

குங்குமப்பூவை நீர், பால் அல்லது பன்னீரில் கரைத்து அதன் சத்து களை முழுவதுமாகப் பெற்றுக்கொண்டு, உணவுத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தலாம். உணவுகளில் இயற்கையான நிறம், மணம், சுவைக்கு கியாரண்டி தரும் குங்குமப்பூவின் ஆரோக்கியப் பலன்களையும், ஐந்து வகை எளிய ரெசிபிக்களையும் தருகிறது 'அஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ' பகுதி

தொழிலும் எழிலும்: அவள் விகடனின் பக்குவமான 12 கட்டுரைகள்!

சரும அழகென்பது காஸ்ட்லியான க்ரீம்களிலோ, ஸ்பா சிகிச்சைகளிலோ மட்டும் வந்துவிடுவதில்லை. அடிப்படையான சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது எனும் ஷீபா `சருமம் - பியூட்டி' பகுதியில் தரும் 7 நாள்களில் பின்பற்றத்தக்க எளிய டிப்ஸ் முயற்சி செய்யத்தக்கது.

இந்த இதழ் அவள் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:    https://bit.ly/2QqAyGg