Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

முதல் பெண்கள்

இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

முதல் பெண்கள்

Published:Updated:
இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

1930 -ம் ஆண்டு... வேலூர் சிறை யிலிருந்து வெளியே வருகிறார் பெண் ஒருவர். மனமெல்லாம் கலக்கம். அவரது ஓராண்டு வாழ்க்கையைச் சிறைக் கம்பிகள் தின்றுவிட்டன. இருபத்து மூன்றே வயதான அந்தப் பெண் செய்வதறியாது தன் சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தளிப்பரம்பாவுக்கு ரயில் ஏறுகிறார். ஊரில் வந்த வரன் எல்லாம் அவர் சிறை சென்றதையே காரணம் காட்டி மறுத்தனர். மாற்றுத் திறனாளி வேறு. கேட்கவும் வேண்டுமா? திருமணக் கனவை மூட்டைக் கட்டி ஓர் ஓரமாக வைத்துவிட்டு, சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார் அந்தப் பெண். சிறையில் படித்த விவேகானந்தரின் புத்தகம் ஒன்றின் வசனம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது - `உன் மீது நம்பிக்கை வை!'

நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. சிறை சென்ற அந்தப் பெண்தான் இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர்  ஆர்.சிவபோகம். 1907 ஜூலை 23 அன்று பிறந்தார் சிவபோகம். லேடி வெல்லிங்டன் பள்ளியில் படிப்பு. அப்படியே ராணி மேரி கல்லூரியில் பட்டப் படிப்பு. படுசுட்டியான சிவபோகத்தை ஈர்த்தார் ‘சிஸ்டர்’ சுப்பலட்சுமி. சிவபோகத்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது சுப்பலட்சுமியுடனான நட்புதான்.

இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த விடுதலைப் போராட்ட கால கட்டத்தில், சில இளம்பெண்களை ஒருங்கிணைத்து இயங்கி வந்தார் சுப்பலட்சுமி. அம்புஜம் அம்மாள், அவரின் தமக்கை ஜானம்மாள், வை.மு.கோதை நாயகி என ஒரு பட்டாளமே இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காதி உடைகள் தரித்து, ராட்டையில் நூற்றனர் இந்தப் பெண்கள். கூடவே பெண்களுக்கு இந்தியும் சொல்லித் தந்தனர். காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தனர் இவர்கள்.

ஒத்துழையாமை இயக்கம் சூடுபிடித்த நிலையில்தான், கைது செய்யப்பட்டார் சிவபோகம். வேலூர் சிறையில் ஓராண்டு வாசம். வீட்டார் திருமணம் செய்துவைக்க முயல, அதுவும் நடக்கவில்லை. குழம்பிய நிலையில் தன்னிடம் வந்த சிவபோகத்தைத் தேற்றியவர் சுப்பலட்சுமி. தன்னம்பிக்கை ஊற்றெடுக்க, மேல்படிப்பு படிக்க நினைத்தார் சிவபோகம். தேர்ந்தெடுத்த துறை - தணிக்கை. ஆண்களே திணறிக் கொண்டிருந்த துறையைக் கையிலெடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அப்போது நடைமுறையில் இருந்த அரசு அக்கவுன்டன்ஸி டிப்ளோமா படிப்பில் சேர்ந்தார். 1933-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று, `தணிக்கையாளர் படிப்பில் தேர்வான முதல் பெண்' என்ற பெருமையைப் பெற்றார். அடுத்த கட்டமாக, அன்றைய மதராஸ் நகரின் பிரபலமான ஆடிட்டர்களில் ஒருவரான சி.எஸ்.சாஸ்திரி யிடம் ‘ஆர்டிகிள்ஷிப்’ பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்து, தனியாக அலுவலகம் தொடங்க அரசுக்கு விண்ணப்பம் செய்தார்.

அப்போதுதான் ஆங்கிலேய அரசுடனான அவரது அடுத்தகட்டப் போராட்டம் தொடங்கியது. குற்றச்செயல் புரிந்து, கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் தணிக்கையாளர்களாகப் பணிபுரியத் தடை விதித்து சட்டம் இயற்றியிருந்தது அரசு. சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார் சிவபோகம். இங்கு நியாயம் கிடைக்கவில்லை. மேல்முறையீடு டெல்லியை எட்டியது. ஒரு வழியாக, நான்கு ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின் வெற்றி கிட்டியது சிவபோகத்துக்கு. அவர் தணிக்கையாளராகப் பணிபுரிய இருந்த தடையை நீக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். தனி அலுவலகம் அமைத்து, அரசுத்துறை தணிக்கையில் இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்னும் அளவுக்குப் பணியாற்றினார். ரிசர்வ் வங்கி ஆடிட்டிலும்  கோலோச்சினார் சிவபோகம். ஆனால், எளிமையை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை. எங்கு சென்றாலும் பஸ் பயணம்தான். மிகச் சாதாரணமான காதிப் புடவைகளைத்தான் உடுத்தினார்.

1949-ம் ஆண்டு ஐ.சி.ஏ.ஐ எனப்படும் இந்திய தணிக்கையாளர் சங்கம் துவக்கப்பட்டதும், அதன் உறுப்பினரான சிவபோகம், 1955 முதல் 1958-ம் ஆண்டு வரை, ஐ.சி.ஏ.ஐ-யின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் முதல் பெண் தலைவராகப் பணியாற்றினார். இன்றளவும் அந்தப் பொறுப்பை வகித்த ஒரே பெண் இவரே!

1956-ம் ஆண்டு கவுன்சிலின் முதல் மாநாட்டை சர் சி.பி.ராமசுவாமி தலைமையில் வெற்றிகரமாக நடத்தினார். மதராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்தார். தணிக்கையாளர் படிப்புக்குப் பெண்களை ஈர்க்க, ஒரே முயற்சியில் சி.ஏ தேர்வடைந்து அதிக மதிப்பெண் பெறும் பெண்ணுக்கு ஆண்டுதோறும் தங்க லாக்கெட் பரிசளிக்கும் மரபைத் தொடங்கினார் சிவபோகம். இன்று சிவபோகம் மெடல் இரண்டு லட்ச ரூபாய் பரிசுடன் சேர்த்து, சி.ஏ. தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. முப்பது ஆண்டுகள் தணிக்கையாளராகப் பணியாற்றி, எளிமையான வாழ்க்கை வாழ்ந்த சிவபோகம், 1966 ஜூன் 14 அன்று மறைந்தார்.

இன்றையப் பெண்களுக்கு ஒரே ஒரு படிப்பினையை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார் சிவபோகம் - `உன்மீது நம்பிக்கை வை!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!