Published:Updated:

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

Published:Updated:
ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

சென்னை, பெரம்பூர் அருகிலுள்ள சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தம். காற்று பலமாக அடித்த ஒரு மாலைப்பொழுது. பேருந்து நில்லாமல் போன எரிச்சலுடன் பலரும் காத்திருந்தோம். அப்போது ஓர் இளம்பெண் கை நிறைய சாப்பாட்டுப் பொட்டலங்களோடு வந்து, அங்கிருந்த ஆதரவற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்த ஒரு பாட்டியிடம், ‘`யார் அவர்?’’ என்று கேட்டோம். ‘`யாருன்னு தெரியலம்மா. அப்பப்ப வரும்... சாப்பாடு கொடுக்கும்; வேற ஏதாச்சும் வேணுமான்னு கேக்கும்... போயிடும்” என்றார். அந்தப் பெண்ணைச் சந்திக்கும் ஆவல், இரண்டு நாள்களில் பானுப்ரியாவின் வீட்டு வாசலில் நம்மை நிறுத்தியது.

பழைமை அடைந்த வீடு. வறுமையை உடுத்திய முதியவர் ஒருவர், நிரப்பப்பட்ட தன் உணவுத் தட்டை ஏந்தியபடி அந்த வீட்டிலிருந்து வெளியேற, அடுத்து வந்த பானுப்ரியாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரின் அறிமுகம் கேட்டோம்.

ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இந்தத் திருப்தி கிடைக்காது! - பானுப்ரியா

“இது எங்க சொந்த வீடுதான். ஆனா, எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்னு இல்லை. இது இந்தச் சமுதாயத்துக்கான வீடு. ஆதரவற்றவர்கள், நாடோடி மக்கள், மாற்றுத்திறனாளிகள்னு யார் வேணும்னாலும் இங்கே வந்து குளிக்கலாம், சாப்பிடலாம்’’ என்கிறார் பானுப்ரியா. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு 27 வயது. தன்னுடைய 10 வயதில் தன் தெருவில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குச் சாப்பாடு பொட்டலங்கள் வழங்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது தினமும் இலவசமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு சாப்பாடு வழங்குவது, நாடோடிகளை வீட்டுக்கு அழைத்துவந்து, குளியலறை வசதி, ஆடை, உணவு வழங்குவது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் ஏற்படுத்திக்கொடுப்பது, வசதியற்ற மாணவர்களுக்குக் கல்விக்கு உதவி பெற்றுத் தருவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது என இவரின் சேவை இந்த 17 ஆண்டுகளில் கருணைக் கிளை பரப்பி விரிந்துள்ளது.

‘`பலரும் என்னை ‘நீ நல்லா இருக்கணும்மா’னு வாழ்த்தும்போது, அதெல்லாம் என் அம்மாவுக்கு உரியதுன்னு நினைச்சுப்பேன். நான் குழந்தையா இருக்கும்போது, ஆதரவற்றவர்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து எங்களோடு உட்காரவெச்சு சோறு போடுவாங்க எங்கம்மா. அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலதான், ஸ்நாக்ஸ் வாங்க எங்கப்பா கொடுக்கும் 50 காசைக்கூட அடுத்தவங்களுக்கு உதவுறதுக்குச் செலவு பண்ண ஆரம்பிச்சேன். நானும் என் தம்பியும் வளர வளர, எங்க வீட்டுல தினமும் ஒரு கிலோ அரிசி வாங்கி சமைச்சு, ஆதரவற்றவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். எங்க பள்ளி, கல்லூரி நண்பர்களும் தங்களால் முடிந்த தொகையைத் தினமும் கொடுப்பாங்க. நல்ல உள்ளங்களின் தொடர் உதவியால்தான், அது இன்றுவரை சாத்தியமாகிட்டு இருக்கு. கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுனு பொருளாதார உதவி தேவைப்படுறவங்களுக்காக, என் முகநூல் பக்கத்தில் கோரிக்கை வைப்பேன்’’ என்கிறார் பானுப்ரியா. இவரின் தம்பி, இப்போது மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அப்பா கேபிள் ஆபரேட்டராக பணிபுரிகிறார்.

‘`தினமும் ஒரு வெரைட்டி ரைஸ் என்பதுதான் எங்க மெனு. சரியா மாலை 6 மணிக்கு 100 சாப்பாடு பொட்டலங்களை எடுத்துட்டு வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். வியாசர்பாடி, பீச், பிராட்வேனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியா. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பாதிச்சாகூட இதுல கிடைக்கிற நிறைவு கிடைக்குமானு தெரியலை. சாப்பாட்டை எங்கம்மா தயார் செய்வாங்க. அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க காய்கறி நறுக்குறது, பார்சல் செய்வது போன்ற உதவிகளைச் செய்து கொடுப்பாங்க” என பானுப்ரியா சொல்வதுபோலவே பக்கத்து வீட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள், கைகளில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டு, பார்சல் வேலைகளை ஆரம்பித்தார்கள். மின்னல் வேகத்தில் பார்சல் வேலைகளை முடித்தனர். ``சரி, நேரம் ஆயிருச்சு, சாப்பாட்டுக்காக எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க’’ என்று பானுப்ரியா கிளம்ப, நாமும் இணைந்துகொண்டோம். பெரம்பூர் மேம்பால இறக்கத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்குச் உணவு வழங்கிய பானுப்ரியா, ‘`எங்க கோபி தாத்தாவைக் காணோம்?’’ என்று கேட்டவாறே பையில் இருந்து ஒரு கேக் பாக்ஸை எடுக்கிறார். ‘’இன்னிக்கு தாத்தாவுக்குப் பிறந்த நாள்னு, என்னிக்கோ ஒரு நாள் சொன்னார். அதை ஞாபகம் வெச்சுக்கிட்டு கேக் வாங்கிட்டு வந்தேன்...’’ என்று அவர் சொல்ல, தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆதரவற்றவர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி ஆனந்தக்கண்ணீரில் முடிய, அவர்களை அணைத்துக்கொள்கிறார் பானுப்ரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சு.சூர்யா கோமதி

படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism