Published:Updated:

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்
பிரீமியம் ஸ்டோரி
மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

முதல் பெண்கள்

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

முதல் பெண்கள்

Published:Updated:
மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்
பிரீமியம் ஸ்டோரி
மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

1921-ம் ஆண்டு... காக்கிநாடாவில் காந்தி உரையாற்றுவதாக ஏற்பாடு. விதவைகள் மற்றும் வெளியுலகத் தொடர்பு அதிகம் இல்லாத பெண்களுக்குத் தனியாக உரை நிகழ்த்த வேண்டும் என்று விண்ணப்பித்தாள், 12 வயதே நிரம்பிய சிறுமி ஒருத்தி. விடுதலைப் போராட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் பணமுடிப்பு தந்தால் காந்தி பேசுவார் என்று சொல்லப்பட, வசூல் வேட்டையில் இறங்கிவிட்டாள். குறித்த நாளும் வந்தது. காந்தியும் வந்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் முன் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார். அந்தப் பேச்சை தெலுங்கில் மொழிபெயர்த்து மேடையில் பேசியது... அதே சிறுமிதான்! காந்தியின் உரையைக் கேட்டு, பெண்கள் தங்கள் கை வளையல்களையும், கழுத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர். அன்று முதல் ஆந்திராவில் காந்தி எங்கு உரை நிகழ்த்தினாலும் அந்தச் சிறுமிதான் மொழிபெயர்ப்பு செய்தாள்.

அன்றைய தினம் வீடு திரும்பியவுடன் அந்தச் சிறுமி தன் அத்தனை `பார்ட்டி ஃப்ராக்’ உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தினாள். இனி தான் பள்ளிக்குச் செல்லப்போவதில்லை என்று பெற்றோரிடம் அறிவித்தாள். சுதேசி இயக்கத்துக்குத் தன் முழு ஆதரவையும் தரப்போவதாக அந்த 12 வயது சிறுமி கூறவும் தெருவே அதிசயித்தது.  அந்த வயதில் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்து அதன் தலைமை ஆசிரியராக 21 வயது வரை வழிநடத்தியதும் சிறுமி துர்காபாயின் பெரும் சாதனை. பின்னாளில் கிட்டத்தட்ட நூறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் தொடங்க துர்காபாய்க்கு உதவியது அவரின் இந்தத் தன்னம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும்தான்.

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

1909-ம் ஆண்டு ராஜமுந்திரியில் பிறந்த துர்காபாய், தன் எட்டாவது வயதில் சுப்பாராவ் என்ற உறவினருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். கணவர் வீட்டுக்குச் செல்ல மறுத்து, தாய்வீட்டில் தங்கிவிட்ட துர்காவை விவாகரத்து செய்துவிட்டு, திம்மையம்மா என்ற பெண்ணை மறுமணமும் செய்துகொண்டார் சுப்பாராவ். பின்னாளில் சுப்பாராவ் இறந்துவிட, அவர் மனைவி திம்மையம்மாவை இறுதிக்காலம் வரை தன்னுடன் வைத்துக்கொண்டு பேணிப் பாதுகாத்தவர் துர்காபாய். தன் 15-வது வயதில் காதி கண்காட்சி ஒன்றைத் திறந்துவைக்க வந்த நேருவை, அனுமதிச்சீட்டு இல்லாத காரணத்தால் விழா அரங்குக்குள் நுழைய அனுமதிக்க மறுத்துப் பரபரப்பைக் கிளப்பினார் துர்கா. சிறுமியின் துடுக்குத்தனம் நேருவை அப்படியே கட்டிப் போட்டுவிட்டது. வாழ்நாள் முழுக்க அவர்களுக்குள் நல்ல நட்பு மலர இந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது. சில ஆண்டுகளில் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. மயிலாப்பூர் துவாரகா தெருவில் குடியிருந்த துர்காபாய், `லிட்டில் லேடீஸ் ஆஃப் பிருந்தாவன்’ என்ற மகளிர் அமைப்பைத் தொடங்கி சமூகப்பணியாற்றி வந்தார். பின்னாளில் துர்காபாய் தொடங்கிய ஆந்திர மகிளா சபா என்னும் ஆலமரத்தின் வித்து இந்த அமைப்பு.

1930-ம் ஆண்டு திருவல்லிக் கேணியில் தொடங்கியது சென்னையின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம். வீரர்கள் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப் பட்டுவிட, போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் துர்கா. `இரும்பு மனுஷி’ என்று காங்கிரஸ் தலைவர்கள் புகழும் அளவுக்குச் செயலாற்றிய துர்காவைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஓர் ஆண்டு சிறைவாசம் துர்காவுக்குள் நிறைய மாற்றத்தைக் கொண்டுவந்தது. கல்வி அறிவு, சட்ட உதவியின்றி பெண்கள் சிறைகளில் வாடுவதைக் கண்ணுற்ற துர்கா பெரும் கலக்கமும் மனவேதனையும் அடைந்தார். தொடராமல் விட்ட படிப்பை இனியேனும் கையிலெடுத்து சட்டம் பயில வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார். சிறைவாசம் முடித்து திரும்பிய துர்கா, 1941-ம் ஆண்டு தன் 32 வயதில் சட்டக்கல்லூரி இறுதித் தேர்வில் வெற்றிபெற்றார். 1942-ம் ஆண்டு பார் கவுன்சிலுக்கு அழைக்கப்பட்டார். கையில் சுத்தமாகப் பணம் இல்லை. அவருக்கு உதவ முன்வந்தார் மிர்சாப்பூர் அரசி. தான் ஒருவர் மட்டுமே கல்வியால் பலன் அடைந்தால் போதாது என்பது புரிய, பள்ளி ஒன்றை நிறுவ ஆசைகொண்டு, அரசியின் உதவியுடன் இடம் ஒன்றை வாங்கினார் துர்கா. ஆந்திர மகிளா சபா இப்படித்தான் தொடங்கியது.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், செவிலியர் பள்ளிகள், தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள், சட்டக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையங்கள், முதியோர் இல்லம், மகளிர் விடுதிகள் எனக் கிட்டத்தட்ட 23 நிறுவனங்களை உருவாக்கினார். மன்னர் பரம்பரை, செல்வம் கொழித்தவர்களிடம் இருந்து நிதியுதவி பெற்றே இந்தச் சமுதாயக் கூடங்களைத் திறந்தார். கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். `பணம் படைத்தவர்களிடம் இருந்து பெறப்படும் பணம் கறைபடிந்ததா என்ன? ஏழைகளுக்கு உதவும் என்றால் யார் கொடுத்தாலும், என்ன செய்தாலும் நல்லதே’ என்று தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி தந்தார். 1950-ம் ஆண்டு திட்ட கமிஷன் அமைக்கும் முடிவெடுத்ததும் நேருவால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். திட்ட கமிஷன் குழுவில் உறுப்பினரானார். தொடர்ச்சி யாக மகளிர் நலன், ஏழை எளியவர் நலனுக்காகத் திட்டங் கள் தீட்ட உதவினார். குடும்ப நீதிமன்றங்கள் தேவை என்று போராடினார். அவரது அந்த ஆசை மட்டும் அவர் மரணத் துக்குப் பிறகே நிறைவேறியது.

1952-ம் ஆண்டு அவர்மீது காதல் கொண்டு திருமணம் புரிந்துகொள்ள வேண்டினார், நேருவின் நெருங்கிய நண்பரான சிந்தாமன் தேஷ்முக். முதலில் தவிர்த்தாலும், அவரின் கண்ணியமான நடவடிக்கைகள் பிடித்துப் போக, தன் 43-வது வயதில் சிந்தாமனைத் திருமணம் செய்துகொண்டார் துர்கா. திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் நேரு மற்றும் சுசேதா கிருபளானி. ஒருவர் பொருள் ஈட்ட வேண்டும், மற்றவர் நாட்டுக்காக சேவை புரிய வேண்டும் என்று தம்பதி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இருவரும் ஒரே நேரத்தில் திட்ட கமிஷனில் பணிபுரிய நேர்ந்தபோது, தன் பணியை ராஜினாமா செய்தார் துர்கா. ஏற்கெனவே திருமணம் புரிந்து மனைவியை இழந்த சிந்தாமனை மணமுடித்தாலும், அவரது முதல் திருமண பந்தத்தில் பிறந்த மகளைத் தன் மகள் போல பாவித்து வந்தார். சிந்தாமன் - துர்கா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத பாசம்கொண்டிருந்தார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பணியாற்றிய சிந்தாமனை பின்னிருந்து இயக்கிய உந்துசக்தி துர்காதான். உலகம் முழுக்கப் பயணித்தது இந்த ஜோடி. தோட்டங்களைப் பெரிதும் விரும்பிய மனைவியை எங்கு சென்றாலும் அங்குள்ள தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவதைத் தன் வாடிக்கையாகக்கொண் டிருந்தார் சிந்தாமன்.

1975-ம் ஆண்டு இருவருக்கும் பத்மவிபூஷண் விருது வழங்கிக் கெளரவித்தது இந்திய அரசு. சமூகப் பணியின் அன்னை என்று துர்காவை அன்போடு அழைத்துவந்தார் இந்திரா காந்தி. மத்திய சமூக நல வாரியத்தின் தேவையை வாதாடி அரசுக்குப் புரியவைத்த துர்கா, அதன் முதல் தலைவரானார். 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவரும் ஆனார். `தி ஸ்டோன் தட் ஸ்பீக்கத்’ என்ற புத்தகத்தை எழுதிய துர்கா, 1980-ம் ஆண்டு சுயசரிதையான `சிந்தாமனும் நானும்’ என்ற புத்தகத்தையும் எழுதினார். 1981-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தென்னகம் முழுக்க இயங்கும் ஆந்திர மஹிளா சபா பள்ளிகளும், எளியோருக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி தரும் மருத்துவமனைகளும் காலம் உள்ள வரை துர்காவின் பெயர் சொல்லும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஹம்சத்வனி 

ஓவியம் :  கார்த்திகேயன் மேடி

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

லைக்கு ஹென்னா பயன்படுத்துபவர்கள் ஹென்னாவுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 10 டீஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து அப்ளை செய்யவும். அழகு வண்ணத்தில் கூந்தல் ஜொலிக்கும்.

மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவர்; தேசிய மகளிர் கல்வி கவுன்சிலின் முதல் தலைவர் - துர்காபாய் தேஷ்முக்

குளிப்பதற்கு முன்பு தயிரை உடல் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து மிதமான   சுடுநீரில் குளித்தால், வறண்ட சருமம் தன் ஈரப்பதத்தை மீட்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism