Published:Updated:

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்
மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

இந்த இதழ் அவள் விகடன்: https://bit.ly/2PxbhFN

* சீரியஸாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில், ‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' என்ற பாடல் ஒலிக்கப்பட, அரங்கம் ஆர்ப்பரித்தது. வெள்ளை உடையில், தனது டிரேட் மார்க் புன்னகையோடு மேடை ஏறினார் நடிகை ஜோதிகா...

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

* பவுர்ஃபுல் விருது தருணம்... ராதிகாவுக்குத் ‘திரைத் தாரகை’ விருதை வழங்க சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா, அம்பிகா மேடையேறினர். சரத்குமார் பேசும்போது, “ஒரு சீனில் இயக்குநரோடு ராதிகாவுக்குப் பிரச்னை. நான் என்னன்னு கேட்டேன். ‘கணவன், மனைவியை அறைகிற சீன். இதுக்காகத்தான் நான் காத்திருந்தேன்னு மனைவி சொல்லணுமாம். நான் மறுத்துட்டேன். அப்படிப் பேசினா, அதன்மூலம் பெண்களுக்கு நான் என்ன சொல்லப்போறேன்?’னு கேட்டாங்க. அதுதான் ராதிகா’’ என்றார் பெருமையுடன். 

* `குணச்சித்திர நாயகி’ விருதைப் பெற மேடையேறிய ஈஸ்வரி ராவ், ‘காலா’ வசனத்தைப் பேசி சில நொடிகள் ‘செல்வி’யாக மாறியபோது, விழாவின் எனர்ஜியே வேற லெவலானது. பா.இரஞ்சித், “என் அம்மாதான் என்னுடைய வலிமையான பெண் கதாபாத்திரங்களுக்கு இன்ஸ்பிரேஷன். என் ஹீரோயின்களின் ரெட்டை மூக்குத்திக்கும் அவங்களே காரணம். கிராமங்களில் பெண் தெய்வங்களுக்குத்தான் எல்லோரும் பயப்படுவாங்க. அவங்கதான் எப்பவும் பவர்ஃபுல்’’ என்றார்.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

- உற்சாகமும் உத்வேகமும் பொங்க நடந்து முடிந்த அவள் விகடன் இரண்டாவது ஆண்டு விருது விழாவின் தொகுப்பை 'அம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்!' எனும் ஹைலைட்ஸில் நிகழ்ச்சியை நேரில் கண்ட அனுபவம் உணரலாம்.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

``கால்டன் ஃபயர் ஆக்ஸிடென்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்க. அதில் சிக்கி மரணத்தை சந்திக்கத் தயாரானேன். ஆனால் தப்பித்தேன். 
அன்னிலேருந்து அடுத்த எட்டு மாசங்களுக்கு ஆஸ்பத்திரிதான் என் அட்ரஸா இருந்தது. நான் பிழைச்சிட்டேன். என் மறுஜென்மத்துக்கு ஓர் அர்த்தம் இருக்கிறதா நினைக்கிறேன். மிச்சமிருக்கிற வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லோரிடமும் அன்பை மட்டுமே பகிர்ந்துக்கிற துக்காக கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற வாய்ப்பு இது...'' - மெல்லிய குரலில் பேசும் மனீஷா, வார்த்தைக்கு வார்த்தை அன்பைப் பகிர்கிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு `கால்டன் குயின்' என்றே அழைக்கப்படுகிறார் மனீஷா. அவரது தன்னம்பிக்கையூட்டும் அசாத்திய பயணத்தைச் சொல்கிறது 'அன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்!' எனும் நெகிழ்ச்சிப் பகிர்வு.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

நாங்க எங்க வெளியே போனாலும் என் கையை இறுகப் பிடிச்சிட்டுதான் நிற்பார். அவர் என் கையைப் பிடிச்சிட்டு இருக்கிறதுலேயே எனக்கு கைவலி வந்துடும். அந்தளவுக்கு இறுக்கமா பிடிப்பார்! `விஜய் சேதுபதி ரொம்ப உண்மையான மனுஷன்'னு சினிமா வட்டார நண்பர்கள் நிறைய பேர் சொல்லுவாங்க, இதுக்குக்காரணம் எங்க குடும்பம்தான்... - விஜய் சேதுபதியின் வளர்ச்சியைப் படிப்படியாக அருகில் இருந்து பார்த்தவர் தங்கை ஜெயஸ்ரீ. 'கதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்!' எனும் விஜய் சேதுபதியின் தங்கை ஜெயஸ்ரீயின் பகிர்வு நிறைய பர்சனல்களை உள்ளடக்கியது.  

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

பொட்டீக்குகளில் சேலையோ, சல்வாரோ வாங்கச் செல்வார்கள். சாதாரண காட்டனாக இருக்கும். விலையோ சில ஆயிரங்களாக இருக்கும். `சாதாரண காட்டனுக்கா இந்த விலை?' என்று கேட்டால், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்துக்கும் டிசைனுக்கும்தான் அவ்வளவு பணம்' என்பார்கள். உண்மைதான்... கைவேலைப்பாடுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எல்லோராலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து இப்படி வாங்க முடியுமா? நாமே கற்றுக்கொண்டு செய்தால்? - 'நீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ்! - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...' எனும் ஆர்ட்டிகிள் எளிதாகவும் முழுமையாக வழிகாட்டுகிறது. 

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

``அம்மா, அப்பா, அக்கா, தம்பிகள்னு அது ஓர் அழகான குடும்பம். முதல் பாதி வாழ்க்கையில சந்தோஷங்களைத் தவிர வேற எதுவுமே தெரியாம வளர்ந்தேன்னு சொல்லலாம். அப்பாவும் ஒரு தம்பியும் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டிருந்தாங்க. ஆனாலும், அந்த இடைவெளி தெரியாத அளவுக்குக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள்னு பாசத்தைப் பரிமாறிக்குவோம். யார் கண்பட்டதோ... வாழ்ந்த வாழ்க்கை மொத்தமும் கனவோனு நினைக்கிற அளவுக்கு ஒரே நாளில் சிதைஞ்சுபோச்சு’’ - 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை ஷர்மிளாவுக்கு. யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும் அவரது கதையையும் நம்பிக்கை மனுஷி ஷர்மிளாவைப் பற்றியும் நமக்குப் பகிர்கிறது 'நமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்!' அனுபவக் கதை!

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

``...கடற்கரையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க சென்டினலீஸ் இளைஞன் ஒருவன் என் மார்புக்கு நேராக அம்பைக் குறிவைத்தான். அப்போது அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்ற பெண்களில் ஒருவர் கைக்குழந்தையுடன் நிற்பதைப் பார்த்தேன். ஓங்கி மொழியில் `கைரி…கைரி இஷிரா… நரியாலி ஜபா ஜபா…' என்று கத்தினேன்... கைக்குழந்தையுடன் நின்ற அந்தப் பெண் குறிபார்த்துக்கொண்டிருந்த இளைஞனை லேசாகத் தள்ளிவிட அம்பு, கடல் நீரில் விழுந்தது. அவர்கள் எங்கள் அணியில் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. `கைரி'  (அம்மா) என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை..." 

இந்த இதழ் அவள் விகடன்: https://bit.ly/2PxbhFN

சமீபத்தில் அமெரிக்க மிஷனரியான ஜான் ஆலன் ஷாவைக் கொடூரமாகக் கொன்று அரைகுறையாகப் புதைத்து வைத்த பழங்குடி இனம்தான் அந்தமானின் வட சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினலீஸ் மக்கள். இவர்களை முதன்முதலில் வெகு நெருக்கத்தில் சந்தித்து உரையாடிய மானுடவியலாளர் மதுமாலா சட்டோப்பாத்யாய். அந்தமான் காடுகளில் ஒரு வித்தியாச பயண அனுபவத்தையும் பழங்குடியினரின் வாழ்க்கையையும் 'அம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை! - `கைரி' மதுமாலா' எனும் பேட்டி. 

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த ஷோபா கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கடும் போராட்டம் நடத்தியிருக்கிறார். தன் மூன்று குழந்தைகளையும் கடைசியாகச் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்று சொல்லும் ஷோபா, ஆபாச வீடியோவில் தோன்றியதாக அவரின் கணவனால் குற்றம்சாட்டப்பட்ட பெண். அந்தப் போராட்டப் பின்னணியையும், இறுதி வரை போராடியதன் உணர்வுபூர்வ காரணத்தையும் பகிர்ந்திருக்கிறார் ஷோபா. 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பில் “நான் அவள் இல்லை!” மிக முக்கியமானது. 

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

``இன்றைக்கு ஆண், பெண் பாடகர்களைத் தனித்தனியே பாடவெச்சு, பிறகு டூயட்டாக மாத்திடுறாங்க. இதனால, இளம் பாடகர்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையறதில்லை. அதனால் ஒருவர் மூலம் இன்னொருவர் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருப்பதில்லை. இதுதான் வருத்தத்தைக் கொடுக்குது” - அந்த நாள் முதல் இந்த நாள் வரை... மிகப் பெரிய சந்தோஷம் முதல் தாங்கவே முடியாத துயரம் வரை... இதுவரை பேசாத விஷயங்களையும்கூட அவள் வாசகிகளோடு பகிர்ந்திருக்கிறார் ‘சின்னக்குயில்’ சித்ரா.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

1970-ம் ஆண்டில் இவரது முதல் ஓவியக் கண்காட்சியிலேயே அத்தனை படங்களும் விற்றுத்தீர்ந்தன. விமர்சனங்களையும் எழுப்பின.
``நிர்வாண ஓவியங்களை வரைந்ததன் பின்னணியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தக் காரணமும் இல்லை. ஒருவரின் மனக்கண்கள் காட்சிப்படுத்துபவற்றின் வெளிப்பாடு அவை. அவ்வளவுதான். அந்த ஓவியங்களுக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது’’ - ஓவியப் புரட்சி, இவரது குரலிலும் தெரிகிறது. - 'தாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்!' எனும் ராஜா ரவி வர்மாவின் எள்ளுப்பேத்தி ருக்மிணி வர்மா பகிர்ந்தவை அத்தனையும் வியப்பில் ஆழ்த்துபவை.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

பூந்தி முந்திரி கீர் - தேவை: ஸ்வீட் பூந்தி - 50 கிராம் அல்லது லட்டு - ஒன்று; முந்திரி விழுது - 2 டீஸ்பூன்; தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்; ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை;  நெய் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: கடாயில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரி விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சற்றே சூடாக்கி, ஸ்வீட் பூந்தி / உதிர்த்த லட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். 

இதுபோல் ஃபிரிட்டர்ஸ் முதல் தொக்கு வரை... சுவையான எளிமையான 30 வகை யம்மி ரெசிப்பிகளைத் தருகிறது அவள் விகடன் இணைப்பு.

மனீஷா முதல் மதுமாலா வரை: தன்னம்பிக்கைத் ததும்பும் அவள் விகடனின் 11 அம்சங்கள்

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் துத்தநாகக் குறைபாட்டால் சருமத்தில் பல பிரச்னைகள் ஏற்படும். துத்தநாகச் சத்து நிறைந்த கோழி, முட்டை, முழு தானியங்கள், பாதாம், தயிர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும். காபி, டீ தவிர்த்து கேரட் ஜூஸ், கொழுப்பு நீக்கிய பால் குடிக்கவும். தினமும் மதிய உணவில் ஒரு கீரை சேர்த்துக்கொள்ளவும். மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். இரவில் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கவும். 

இதுபோல் 'பிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு' எனும் தலைப்பில் பின்பற்றத்தக்க பயனுள்ள ஹெல்த் டிப்ஸ் தந்திருக்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

இந்த வார அவள் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PxTtu8