Published:Updated:

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

உறவுகள்... உணர்வுகள்...

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

உறவுகள்... உணர்வுகள்...

Published:Updated:
குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

ரே மெச்சிய பிரமாண்ட திருமணம். மறக்க முடியாத திருமணத் தேதி. 12.12.2012. `மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடியையும் திருமணத்துக்குச் சென்றிருந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வரவேற்பையும் விருந்தையும் வருடங்கள் கடந்தும் சிலாகித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னும்கூட அந்தச் செய்தியை நம்பத் தான் முடியவில்லை. யார் கண்களோ பட்டிருக்க வேண்டும். எதிரிக்கும் நடக்கக் கூடாத சோகம் அது.

இரண்டு குட்டிக்குழந்தைகளையும் கணவன் உள்ளிட்ட அன்புக்குரியவர் களையும் தவிக்கவிட்டு, நோய்க்கு இரையானார் அந்தப் பெண். மனைவி இறந்தால் கணவன் புது மாப்பிள்ளை... மாற்றாந்தாய் பொறுப்பில் வளரும் குழந்தைகள்... கதைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் இதுவே நிகழ்வாக இருக்கிறது. மேற்சொன்ன குடும்பத்தில் எல்லோருமே மாற்றி யோசித்திருக்கிறார்கள்.

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

மனைவியை இழந்த கணவன், மகளை இழந்த பெற்றோர், மருமகளை இழந்த மாமனார் மாமியார் என அனைவரின் சிந்தனையும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. பெற்றோரிடமோ, மாமனார் மாமியாரிடமோ குழந்தைகளை ஒப்படைத்துவிட்டுச் சுதந்திரமாகத் திரிய நினைக்கவில்லை அந்தக் கணவர். குழந்தைகள் தன்னிடம் வளர்வதுதான் சரி என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகனின், மருமகனின் வார்த்தைக்கு மதிப்பளித்து, குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிற பொறுப்பை ஆளுக்கு 15 நாள்களாகப் பிரித்துக்கொண்டிருக் கிறார்கள் பெண்ணின் பெற்றோரும், மாமனார் மாமியாரும். அப்பாவுடன் டெல்லியில் வளரும் குழந்தைகளை அங்கேயே போய்ப் பார்த்துக்கொள்வது என உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இவர்களின் சென்னை டு டெல்லி பயணம் இப்படித் தான் தொடர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்``இதை தியாகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. குழந்தைகளை மிஞ்சிய உலகம் ஒன்றிருக்குமா தெரியவில்லை. பாட்டி தாத்தாவாக நாங்கள் செய்வதுகூட பெரிய விஷயமில்லை. குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்கும் பெரியவர்களுக்குமான பொறுப்பு என நினைக்கிற ஆண் சமுதாயத் தில், அதை ஓர் அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கிற எங்கள் மருமகனைப் பார்த்து வியந்து நிற்கிறோம். குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும், நாங்கள் யாரும் எதையுமே கஷ்டமாகப் பார்ப்பதில்லை. காரணம், குழந்தைகள். எங்கள் மகள் இறந்தபோது ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயது; இன்னொரு குழந்தைக்கு நான்கு வயது. அந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் மட்டும்தான் எங்கள் எல்லோருக்கும் பிரதானமாகத் தெரிந்தார்கள்’’ - கண்களில் நீர் தேக்கிச் சொல்கிறார் பெண்ணைப் பெற்றவரும் பிரபல மனநல மருத்துவருமான சுபா சார்லஸ். மகளை இழந்து ஒரு வருடம்கூட முடியாத நிலையில், நெஞ்சை அடைக்கும் துக்கத்துடன் அவர் பேசுவது உறவுகளின் உன்னதம் விளக்கும் யாருக்கும்.

``திருமணம் என்பது, மிகப்பெரிய பொறுப்பு. அந்த  உறவில்  குழந்தைகளே முதன்மையானவர்கள். குழந்தைகளை அன்போடும் அரவணைப்போடும் நல்ல விதமாக வளர்த்தெடுக்கும் பொறுப்புதான் அதில் முக்கியம். குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண காரியமில்லை. அதற்கு நிறைய பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவை. இன்று பலருக்கும் குழந்தைகள் சுமைகளாகவும் தொந்தரவாகவும் தெரிகிறார்கள். தன் ஆசைகளுக்காகவும் இச்சைகளுக்காகவும் குழந்தைகளைக் கொலைசெய்கிற அளவுக்குத் துணிகிற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தாயை `தெய்வம்’ என்கிறோம். தெய்வத்துக்கு இணையான தாய், தன் சுயநலத்துக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொல்வாளா?’’ - கண்ணீருடன் கோபமும் சேர்ந்துகொள்கிறது டாக்டருக்கு.

``நேர்மறையானவை, எதிர்மறை யானவை என உணர்வுகளை இரண்டாகப் பிரிக்கலாம். வைரமுத்து சொன்னதுபோல `கடவுள் பாதி, மிருகம் பாதி’யாக இந்த இரண்டு வகை உணர்வுகளும் கலந்தவன்தான் மனிதன். பயம், கவலை, கோபம், வெறித்தனமான காமம் போன்றவை எதிர்மறை உணர்வுகள். அன்பு, பாசம், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவை நேர்மறை உணர்வுகள்.  நல்ல உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களின் வாழ்க்கை, நாளுக்குநாள் மேம்படும்.

திருமண உறவு என்பது, வெறும் சந்தோஷங்கள் மட்டுமே நிரம்பியதல்ல. சவால்களையும் சகிப்புத்தன்மையையும் எதிர்பார்த்துதான் அந்த உறவில் நுழைய வேண்டும். `என் உடலமைப்பு அப்படி... ஹார்மோன்கள் சுரக்குது. டெஸ்டோஸ்டீரோனும் ஈஸ்ட்ரோஜெனும் அதிகம் சுரப்பதால் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்’ என்கிற வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சுயநலத்தைத் தாண்டி, கணவனும் மனைவியும் யோசிக்கவேண்டியது குழந்தைகளைப் பற்றி. குழந்தைகளுக்காக அவர்கள் செய்கிற எந்தத் தியாகமும் வீணாவதில்லை.

மனிதர்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்த மிருகங்களிடம்கூட மனிதத் தன்மையைப் பார்க்கிறோம். மிருகங்களில் கூட தாய் இறந்துவிட்டால் அதன் குட்டி களை இன்னொரு மிருகம் வளர்க்கும். எந்த மிருகமும் தன் குட்டிகளைக் கொன்றுவிட்டு, இன்னொரு மிருகத்துடன் செல்வதை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், மனிதர்களிடம் அந்தக் கலாசாரம் பரவிவருகிறது’’ வருத்தத்துடன் பேசுகிறவர், இத்தனை பிரச்னைகளுக்குமான பின்னணியையும் சொல்கிறார்.

``மனித சமுதாயத்தில் இந்த விஷம் பரவக் காரணம், அதிகரித்துவிட்ட ஸ்ட்ரெஸ் அளவுதான். ஆசைகள் அதிகமாக ஆக, ஸ்ட்ரெஸ் அளவும் கூடுகிறது.  ஆசைகள் பேராசைகளாக, கூடவே பயமும் சேர்ந்து அது ஸ்ட்ரெஸ்ஸாக வெடிக்கிறது.  இதற் கான ஸ்ட்ரெஸ் பஸ்டர் எது தெரியுமா? குடும்பமும் உறவுகளும்தான்!

வீட்டில் பெற்றோர் இருந்தால் அவர்களிடம் எதற்கும் கருத்து கேட்கலாம். இந்தக் காலத்தில் பல குழந்தைகளும் பாட்டி தாத்தாவின் அன்போ, அரவணைப்போ இல்லாமல் வளர்கிறார்கள். 24 மணி நேரமும் அவர்களுக்கு சோஷியல் மீடியாதான் துணை. நிழல் உலகமே நண்பன்.

வீட்டில் பெற்றோரோ, மாமனார் மாமியாரோ இருந்தால் அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறைகள் அரங்கேறாது. குழந்தைகளை மட்டுமல்ல, நம்மையும் கண்காணிக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வே குழந்தைகளின் பெற்றோரையும் தவறுகள் செய்வதிலிருந்து தடுக்கும். வாழ்க்கைத்துணையைப் பிரிந்து வாழ்கிற நிலையிலும் தகாத உறவையோ, தற்கொலையையோ நாடச் செய்யாது. பெரியவர்களைச் சுமையாக நினைக்கிற இந்தக் காலத்தில், அவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்வதை பலரும் ஏற்க மாட்டார்கள். பெரியவர்களுடன் ஒரே குடும்பமாக வாழ வாய்க்காதவர்கள், தினமும் அவர்களிடம் தொலைபேசியிலாவது உரையாடலாம். குழந்தைகளையும் பேசச் சொல்லலாம்.

பள்ளியிலோ, வீட்டுக்கு வெளியிலோ என்னவெல்லாம் நடந்தது என்று கேட்கிற பொறுமை பெற்றோருக்கு வேண்டுமானால் இல்லாமல் போகலாம். தாத்தாவும் பாட்டியும் அபார பொறுமைசாலிகள், குழந்தைகளின்மேல் அன்பும் அதைவிட அதிகமான அக்கறையும் கொண்டவர்கள். அன்றாட நிகழ்வுகளை அவர்களிடம் பகிரும்போது எங்கேயாவது தவறு நடந்தாலும் அவர்களால் கண்டுபிடித்துவிட முடியும். எனவே, பெரியவர்களை இம்சையாக நினைக்காமல் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் கண்காணிக்கும் சிசிடிவி-யாகப் பாருங்கள்!’’

காலத்துக்கேற்ற அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.

ஆர்.வைதேகி 

சமையல் டிப்ஸ்...

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

பீன்ஸ் கூட்டு மீந்துவிட்டதா... ஒரு பெரிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது பூண்டை எடுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நறுக்கியவற்றை  ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். இத்துடன் தேவையான அளவு உப்பு, (விருப்பப்பட்டால்) சிறிதளவு புளி, பீன்ஸ் கூட்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி இறக்கிக்கொள்ளவும். சிறிது நேரம் ஆறவைத்து, பின்பு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொண்டால் பீன்ஸ் கெட்டிச் சட்னி தயார்.

குழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள்! - டாக்டர் சுபா சார்லஸ்

புளிக்கரைசல் செய்ய கால் கிலோ புதிய புளி, கால் கிலோ பழைய புளி இரண்டையும் ஒன்றரை கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிரஷர் போனதும், கையால் மசித்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism