Published:Updated:

சேனல் லகலக !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

சேனல் லகலக !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

வாரத்துல ஒரு நாள் வந்து வயிறைப் புண்ணாக்கிட்டுப் போற 'மாமா மாப்ளே’ (சன் டி.வி) டீமை, அன்னிக்கு நாம 'அண்டர் கஸ்டடி’யில எடுத்தோம்! வளசரவாக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானது!

''என் பக்கத்துல ரெண்டு பொண்ணுங்க இருக்குது... வ்... ஆங்! போட்டி போடக் கூடாது. ரெண்டுல யாருக்கு என்னைப் பிடிக்குதோ கட்டிக்கோங்க... பிடிக்கலைனாலும் கட்டிக்கோங்க. நோ பிராப்ளம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஓபனிங் ஸீன்லயே தேவி கிருபாவையும், சுகுணாவையும் வம்பிழுத்தார், 'லொள்ளு சபா’ மனோகர். ''சனிப்பெயர்ச்சி ஆரம்பிச்சுடுச்சுனு சொன்னாங்கள்ல... அது இப்போ நகர்ந்து நகர்ந்து நம்மகிட்டதான் வருது எஸ்கேப்!''னு மனோகருக்கு பல்ப் கொடுத்தாங்க பொண்ணுங்க.

''ஏ புள்ள... இது நீ அஞ்சாவது படிக்கும்போது எடுத்த கவுன்தானே..? ஏன் வீட்டுல ஒனக்கு புது டிரெஸ்ஸே எடுத்துத் தர மாட்டாங் களா?''னு மனோகர் விடாம தேவிகிருபாவுக்கு செகண்ட் பால் வீச,

சேனல் லகலக !

''தாத்தா(!)... இது நீங்க ஒண்ணாவது படிக்கும்போது போட்ட மொட்டைதானே? வீட்டுல உங்களுக்குத் தலைக்குத் தடவ எண்ணெயே வாங்கித் தரலையா?''னு அதை பூமராங்கா தேவிகிருபா திருப்ப, தன் வழுக்கையை ஒருமுறை தடவிப் பார்த்துட்டு வயலன்டா முறைச்சார் மனோகர்.

''பொண்ணுங்களுக்கு நம்ம வீரம் பத்தி எல்லாம் தெரியாதுல... அதான் விளையாட்டாப் பேசுதுங்க. மன்னிச்சு விட்டிருவோம்!''னு ஸீன்ல பாலாஜி என்ட்ரி ஆக,

சேனல் லகலக !

''ஒட்டடைக்குச்சி உடம்பை வெச்சுருக்கிறவங்க எல்லாம் வீரத்தைப் பத்தி பேசுறாங்க... வாட் எ காமெடி..?!''னு பாலாஜியை சீண்டினாங்க ஸ்வேதாஸ்ரீ.

''என்ன பண்ணணும் சொல்லு... மலையைத் தூக்கணுமா, கடலைக் குடிக்கணுமா... எந்த சேலஞ்னாலும் நான் ரெடி!''னு முஷ்டி முறுக்கின பாலாஜி, ''ஆனா, உன்னை மேக்கப் இல்லாமப் பார்க்கணும்னு மட்டும் சொல்லிடாதே!''னு ஸ்வேதாவை கடுப்பாக்கினார்.

''தோ வர்றேன்...''னு போன ஸ்வேதா, 'சிலம்பத்தை எடுத்துட்டு வந்து சுத்தச் சொல்வாங்களோ, வாள் எடுத்துட்டு வந்து வெட்டச் சொல்வாங்களோ'னு எல்லாரும் ஆவலோட காத்திருக்க, செட்ல இருந்த ஒரு தௌசண்ட் வாலா பட்டாசை எடுத்துட்டு வந்தாங்க.

சேனல் லகலக !

''ஹைய்யோ... அது அடுத்த ஷெட்யூல் ஷூட்-க்கு வாங்கி வெச் சது மேடம்!''னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அலறி ஓடிவர,

''விடுங்க வேற வாங்கிக்கலாம்... பெர்மிஷன் கிரான்டட்!''னு சிரிச்சார் டைரக்டர் சக்திவேல்!

''ப்பூ... கேவலம் இந்தப் பட்டாசுதான் என் வீரத்துக்கு அளவுகோலா..?! வாட் எ ஷேம்..?''னு பாலாஜி ஊதுபத்தியோட சேலஞ்சுக்கு ரெடியாக,

''ஒரு ஊதுபத்தியே... ஊதுபத்தி பிடிக்கிறதே... ஆச்சர்யக்குறி!''னு கலாய்ச்சாங்க ஸ்வேதாஸ்ரீ!

''ஏய்... இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாண்டி..!''னு சுகுணாவும், தேவிகிருபாவும் பாலாஜியைப் பார்த்துட்டே பட்டிமன்றம் நடத்த,

''ஏய்... எதுக்கும்மா நான் சரிப்பட்டு வரமாட்டேன்..?''னு சீரியஸானார் பாலாஜி. ''ஏய்... சொன்னாக் கேளு... நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டப்பா!''னு சீனியர் பாண்டியராஜனும் சவுண்ட் விட,

''அவ்வ்வ்!''னு அழுமூஞ்சி காட்டினார் பாலாஜி.

''ஒண்ணு சொல்லிக்கட்டுமா..?''னு நடுவுல புகுந்த மனோகர், ''ராக்கெட்டை நிக்கவெச்சு விடுங்க... படுக்கவெச்சு விட்டா அப்புறம் நீங்க புஸ்வாணம் ஆயிடுவீங்க!''னு ஏதோ உலக மகா தத்துவம் சொல்லிட்ட மாதிரி மேதாவி லுக் கொடுக்க,

''சார்... வைக்கப் போறது சரவெடி..? சம்பந்தமே இல்லாம ராக்கெட் பத்தி ஏன் பேசுறீங்க..?''னு காண்டானாங்க தேவிகிருபா.

''பொண்ணு இப்போ எல்லாம் நல்லாதான் பேசுது. 'டேக்’ சொன்னாதான் டயலாக்-ஐ மறந்துடுது!''னு சக்திவேல் கூட்டத்துல கட்டு சோத்தை அவிழ்க்க, கிர்ரானாங்க தேவி.

சேனல் லகலக !

அரட்டையில் இருந்து ஒதுங்கி இருந்த மோகன்ராமை வம்பா இழுத்து வந்தார் பாண்டியராஜன். ''நான் பட்டாசுக்கு எதிரான ஆளு. உடல் நலக் குறைவு, சுற்றுச்சூழல் கேடுனு இந்தப் பட்டாசால் ஏற்படுற தீமைகள் நிறைய''னு மோகன்ராம் சொல்ல, மொத்த டீமும் அவரை ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்து, 'அவனா நீ..?!’னு கத்தினாங்க கோரஸா.

சந்தடி சாக்குல, ''ஸ்வேதா கன்னத்துல எக்ஸ்ட்ரா ரோஸ் கவனிச்சீங்களா..?''னு காட்டிக் கொடுத்தாங்க நித்யா ரவீந்தர். விசாரிச்சா, பொண்ணுக்கு ரெண்டு மாசம் முன்னாடிதான் கல்யாணம் முடிஞ்சுருக்கு. கேமராமேன் கோபியை லவ் மேரேஜ் பண்ணியிருக்காங்க.

''ம்ம்ம்... எல்லாருக்கும் நல்லது நடக்குதூஊஊஊ..!''னு பெருமூச்சு விட்ட மனோகரை, பாண்டியராஜன் முறைக்க, ''சார் சார்... நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு இப்பவாச்சும் சொல்லிடுங்க சார்!''னு அவர்கிட்ட கெஞ்சினார் பாலாஜி. பொண்ணுங்கிட்ட டிஸ்கஸ் செய்துட்டு வந்த பாண்டியராஜன், ''நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டனா மாட்டதான்!''னு ஃபைனல் தீர்ப்பு சொல்ல, மொத்த யூனிட்டும் ஜிகுஜிகுனு சிரிக்க, ''எல்லாரும் சேர்ந்துக்கிட்டீங்களா...? அப்போ நான்தான் அவுட்டா.?!''னு மறுபடியும் 'அவ்வ்வ்!’ ஆன பாலாஜி... கடுப்பில் பட்டாசை பத்த வைக்க, ஸ்டார்ஸ் எல்லாரும் சிதறல்ஸ்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism