Published:Updated:

புது வீடு !

ம.மோகன், படங்கள்: வி.செந்தில்குமார் பக்காவான பிளானிங் தொடர்

புது வீடு !

ம.மோகன், படங்கள்: வி.செந்தில்குமார் பக்காவான பிளானிங் தொடர்

Published:Updated:
##~##

''எங்களோட கனவும், கலை ஆர்வமும் இந்த வீடு. அதனாலதான் சுவர்ல ஒரு சின்ன ஆணி அடிக்கிறதா இருந்தாலும், ஒரு முறைக்கு பத்து முறை... அதோட தேவை என்ன, அந்தத் தேவையோட ஆயுள் என்னனு யோசிப்போம். அநாவசியமா சுவரைக் காயப்படுத்த எங்களுக்கு மனசே வராது!''

- தங்கள் வீட்டை அத்தனை நேசிக்கிறார்கள் சி.டி.கிருஷ்ணமூர்த்தி - ராஜலட்சுமி தம்பதி! அவர் களின் இல்லக் கனவை நனவாக்கிக் தந்திருப்பவர், ஆர்க்கிடெக்ட் ராஜு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இப்பவும் ஏதோ ஒரு வேலையா சென்னை, பெரம்பூர், ஜவஹர் நகர் பக்கமா வந்தா, ஒரு எட்டு இவங்க வீட்டுக்கு வராம போக மாட்டேன். அந்தளவுக்கு இந்த வீடும், இந்தத் தம்பதியும் எனக்கு நேசமானவங்க!'' எனும் ராஜு, இந்த வீடு எழுந்த ஃபார்மாலிட்டிகளைப் பேசினார்...

'' 'ஜாயின்ட் புரமோஷன் மூலமா என்னோட ஒரு கிரவுண்ட் இடத்துல ஃப்ளாட் கட்டிக் கொடுங்க. என்னோட பங்குக்கு ரெண்டு ஃப்ளாட்டும், கணிசமான தொகையும்னு அக்ரிமென்ட் போட்டுக்கலாம்!’னு எனக்குப் பழக்கமானார் கிருஷ்ணமூர்த்தி சார். ஆனா, சொந்தமான தனி வீடு ஆசை அவர் மனசில் இருந்ததையும் பகிர்ந்துக்கிட்டப்போ, அவர் மனசு போலவே பிளான் போட்டோம்.

அவரோட இடத்துல ஒரு பகுதியில அழகான தனி வீட்டை அவருக்காக கட்ட முடிவெடுத்தோம். ஒரு கிரவுண்ட் நிலத்தோட முன்பகுதியில 1,000 சதுர அடியை விட்டுட்டு, மீதி இடத்தை விற்பனை செய்து, அந்தத் தொகையில் ஒரு பகுதியை வெச்சே 1,000 சதுர அடியில் தனி வீடு கட்டலாம்னு சொன்னப்போ, சாருக்கு சந்தோஷம். சொன்னபடியே எழுந்தது இந்த வீடு!'' என்ற ராஜு, தொடர்ந்து வீட்டின் கட்டுமான விவரங்களைச் சொன்னார்...

புது வீடு !

''1000 சதுர அடி இடமா இருந்தாலும், வீடு கட்டறதுக்கு 767 சதுர அடி இடத்தைத்தான் எடுத்தோம். தரை தளம்,   முதல் தளம் ரெண்டுமே தலா 767 சதுர அடியிலதான் அமைஞ்சுருக்கு. தரை தளத்துல போர்டிகோ, அதை அடுத்து வராண்டா,  ஹால்னு வடிவமைக்கறது... வீட்டுக்கு வரும் வெளியாட்கள், நண்பர்கள், விருந்தினர்களை அவரவர்களுக்கான எல்லை வரை வரவேற்று வழியனுப்ப வசதியா இருக்கும்.

புது வீடு !

போர்டிகோவுக்கு 9.4ஜ்5 அளவிலும், வராண்டா, ஷூ ரேக் போர்ஷனுக்கு 9.1ஜ்3 அளவிலும் இடம் ஒதுக்கினோம். கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்ட 767 சதுர அடியில ஹால், ரெண்டு படுக்கை அறை, ஒரு கிச்சன், யுடிலிட்டி ஸ்பேஸ், ரெண்டு கழிவறைனு பிரிச்சுக் கட்டினோம். இதனால் இடம் சுருங்கிடக்கூடாதேனு ஹாலையும் டைனிங் ஹாலையும் தடுப்புச் சுவர் இல்லாம கட்டினதோட, அருகிலேயே சமையறை அமைச்சோம் (தேவைப்பட்டா, ஃபிரெஞ்ச் டைப்ல ஸ்க்ரீன் தடுப்பு வெச்சுக்கலாம்). இந்த யுக்தி... சின்ன இடத்தையும் அழகா, விரிவா காட்ட உதவுது. 12.6 ஜ்17.9 அளவிலான தரை தள ஹாலுக்கும், 19.0ஜ்12.9 அளவிலான முதல் தள ஹாலுக்கும் பக்கத்துலயே மேலும் கீழும் 9.1ஜ்7.8 அளவிலான சமையலறை அமைஞ்சது இப்படித்தான்!'' என்று சின்ன இடத்தை பெரிதாகக் காட்டும் சூட்சமம் சொன்னார் ராஜு.

புது வீடு !

''தரை தளத்தோட கிச்சனை அடுத்து, பின் பக்கத்துல 9 ஜ் 4 அளவிலான யுடிலிட்டி ஓபன் ஸ்பேஸும், முதல் தளத்தோட முன்பக்கத்துல 9ஜ்3 அளவிலான பால்கனி ஸ்பேஸும் இருக்கும். இது ஆடைகள் உலர்த்த, வடாம் வத்தல் காய வைக்கனு பல பயன்பாட்டுக்கும் உதவும். டைல்ஸ் நிறத்துலயே மேற்புற ரூஃப் பெயின்ட்டும் இருந்தா, அந்த அறை வெளிச்சமாவும், விசாலமாவும் தோற்றமளிக்கும்... இந்த வீட்டோட அறைகளைப்போல. 6ஜ்4 அளவிலான பூஜை அறையில், சுவர் முழுக்க படங்களை மாட்ட ஆணி அடிக்கிறது, ஸ்டிக்கர்ஸ் ஒட்டுறதுனு சுவர்களை சேதப்படுத்தாம, மர ரீப்பர் கட்டைகளை சுவரில் செட்டப் செய்து, அதில் பக்திப் படங்களை மாட்டினோம்'' என்று, எல்லோரும் குறித்து வைத்துக் கொள்ளும் ஐடியாவாக சொன்னார்.

புது வீடு !

''இடத்தை மேடாக்குறதுதான் கட்டப்போற வீட்டோட முதல் வேலையா இருக்கும். தரையில் இருந்து 5.5 அடிக்கு உயர்த்தி இந்த வீட்டைக் கட்டியிருக்கோம். மழைக் காலங்கள்லயும், சாலைகள் அடிக்கடி மேம்படுத்தப்படும் போதும், அதுக்கு உயர்த்திக் கட்டப்பட்ட வீடு ஈடுகொடுக்கும். மேட்டுப்பகுதியில்தானே இடமே இருக்குனு எல்லாம் இதில் எந்த சமரசமும் வேண்டாம். வீட்டை கட்ட ஆரம்பிக்கும் போதே மின்சாதனப்பொருட்கள் பயன்படுத்துற ஊக்குகளில் தொடங்கி சுவர் மேற்புற பெயின்ட் டிங் வரைக்கும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யணும். அப்போதான் வீடு முடியும்போது அது சரியா இல்லை, இது இப்படி ஆயிடுச்சுனு எந்தக் குறையும் இல்லாம முழு திருப்தி இருக்கும்'' என்றவர்,

புது வீடு !

''அப்படி திருப்தியா கட்டினாலும், அந்த வீட்டோட அழகை நாளுக்கு நாள் மெருகேத்துறது அந்த வீட்டுப் பெண்கள்தான். அவங்களோட உழைப்பும், பாதுகாப்பும்தான் ஆண்டுகள் கடந்தும் ஒவ்வொரு வீட்டையும் அன்பு நிறைந்த கூடா ஆக்கும்!'' என்று கவிதையாக முடித்தார் ராஜு!

புது வீடு !

போகிக்கு போகி சுத்தம் செய்வது என்றில்லாமல், அவ்வப்போது கழிவுகளை களைந்தால்... அழகு நிரந்தரமாகுமே வீட்டில்!

- கட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism