தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க! - ஷெரினா

இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க! - ஷெரினா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க! - ஷெரினா

மாடல் மங்கைகள்

போர்டு சூப்பர் மாடல் ஆஃப் இந்தியா வேர்ல்டு டைட்டில், லாக்மே இந்தியா ஃபேஷன் வீக், வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக், கிங் ஃபிஷர் ஷோக்களில் ராம்ப் வாக், மலபார் கோல்டு, சென்னை சில்க்ஸ் விளம்பரங்கள் என ஷெரினா உலகளவிலும் உள்ளூரிலும் செம பாப்புலர்!

``நான் மாடலிங்குக்கு வருவேன்னு நினைக்கலை. ராம்ப் வாக் பண்ணுவேன்னு நினைக்கலை. உலக அளவுல என் பெயர் பிரபலமாகும்னு எதிர்பார்க்கலை. ஆனா, அதெல்லாம் நடந்திருச்சு'' - லிப் க்ளாஸுக்கு நோகாமல் பேசுகிற ஷெரினா, கொச்சி சேச்சி!

இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க! - ஷெரினா

``அப்பா, ஆட்டோமொபைல் இன்ஜினீயர். பெங்களூர்ல எங்களுக்கு லக்ஸூரி கார் சர்வீஸ் ஸ்டேஷன் இருக்கு. பைலட் ஆகணும்கிற கனவுல இருந்த எனக்கு, மாடலிங் வாய்ப்பு மால் வழியா வந்தது. நானும் என் ஃப்ரெண்டும் பெங் களூர்ல ஒரு மாலுக்குப் போயிருந்தோம். அப்போ அங்கே `ஃபெமினா மிஸ் செளத் இந்தியா'வுக்கான செலெக்‌ஷன் நடந்திட்டிருந்தது. என் ஃப்ரெண்டு ரொம்ப வற்புறுத்தி என்னையும் அதுல கலந்துக்கச் சொன்னாள். செலெக்ட் ஆகிட்டேன்.

அதன் பிறகு மும்பைல `ஃபோர்டு சூப்பர் மாடல் ஆஃப் இந்தியா'வா என்னை செலெக்ட் பண்ணி கங்கணா ரணாவத் கிரீடம் சூட்டினதை இப்போ நினைச்சாலும் சிலிர்க்குது'' - நிஜமாகவே மெய்சிலிக்கிறது ஷெரினாவுக்கு.

``கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... கிடைக்காம இருக்கிறது கிடைக்காதுங்கிற ரஜினி சார் டயலாக்தாங்க நமக்கு மந்திரம். யார்கூடவும் போட்டிபோட்டு, அவங்களை முந்தி, வாய்ப்புகளை வாங்கணும்னு நினைக்கவே மாட்டேன். எத்தனையோ முறை எனக்கு வந்த வாய்ப்புகளை என் ஃப்ரெண்ட்ஸுக்கு விட்டுக்கொடுத்திருக்கேன். அதனாலவோ என்னவோ, என் வாய்ப்புகளையும் யாரும் தட்டிப் பறிச்சதில்லை. என்கிட்ட பொறாமை இல்லை, ஸோ... போட்டியும் இல்லை'' என்கிற தத்துவப்புயல், தற்போது மையம்கொண்டிருப்பது தமிழகத்தில்!

``மாடலிங்ல நல்ல பேரை சம்பாதிச் சுட்டேன். அந்த நல்ல வைபரேஷனோடு அடுத்து சினிமா என்ட்ரிதானே? மூணு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். சினிமா வுலயும் எனக்கு சப்போர்ட் கொடுங்க'' என ஆதரவு கோருபவர், மாடலிங்கில் நுழையக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்கிறார்.

``நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்க. நேற்றைவிட இன்னிக்கும், அதைவிட நாளைக்கும் நீங்க அழகா தெரியணும். அதுல காம்ப்ரமைஸே கூடாது. எத்தனை விளம்பரங்கள்ல நடிச்சாலும் எத்தனை ராம்ப் வாக்ல நடந்தாலும் கேமராவுக்கு முன்னாடி போஸ் பண்றதையும் நடக்கிறதையும் தினம் தினம் பிராக்டீஸ் பண்ணுங்க. `பிராக்டீஸ் மேக்ஸ் யு பர்ஃபெக்ட்.' கடைசியா ஒரு விஷயம், இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க. அப்படி நம்புங்க. அதுவே உண்மையாகும்.''

நம்பிட்டோம்!

- ஆர்.வைதேகி