Published:Updated:

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!
போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

இந்த இதழ் அவள் விகடன்:  https://bit.ly/2LCZjdl

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

'என்னங்க... ரவுடி சொர்ணாக்கா மாதிரி உட்கார்ந்து, என்னையே பார்த்துக்கிட்டிருக்கீங்க...' என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டேவிட்டார். `இப்படி பச்சையாக சைட் அடித்து மாட்டிக்கொண்டோமே' என்று அசடுவழிந்தது தனிக் கதை. `டீன்ஏஜ் வயது, வெட்கமறியாது' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, என் கடமையைத் தொடர்ந்தேன்.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

ஆனால், அன்றிலிருந்து என்னை 'சொர்ணாக்கா சொர்ணாக்கா...' என்று கிண்டலாக அழைக்க ஆரம்பித்துவிட்டார் நம்ம கணக்கு வாத்தியார். 

- 'என் காதல் சொல்ல வந்தேன்' பகுதியில் தனது ஆட்டோகிராப் அனுபவங்களை அப்படியே பகிர்ந்திருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

``இப்போகூட கனவு மாதிரிதான் இருக்கு. என் சினிமா கரியர் முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சு, ஒரு குடும்ப நிர்வாகியா என் குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இயக்குநர் இரஞ்சித் சார் எனக்கு ரீ- என்ட்ரி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்; ரஜினி சார் என்னைப் பிரகாசப்படுத்திட்டார். நீ, நான்னு ரஜினி சார்கூட ஜோடியா நடிக்க போட்டியிருக்கிற சூழல்ல, அவருக்கு நான் ஜோடியா நடிக்க சம்மதிச்சது பெரிய விஷயம். என் வாழ்நாள் முழுக்க இவங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்" - நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகத் தொடங்கும் நடிகை ஈஸ்வரி ராவின் 'என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு!' எனும் சிறப்புப் பேட்டியில் தன் அழியாத கோலங்களை முழுமையாகப் பகிர்ந்திருக்கிறார். 

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

``23 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட அலுவலகம் செல்லும் பெண்கள்தான் என் இலக்கு. இந்தியப் பெருநகரங்கள், இரண்டாம்நிலை நகரங்களில் எளிதில் வாடிக்கையாளர்களைக் கவர முடிந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களும் எங்கள் தயாரிப்புகளை வாங்கி உடுத்தும் வகையில் சர்வதேச அளவில் கவனம்ஈர்த்தது எங்கள் பிராண்டு. எங்கள் இணையதளத்தின் மூலமாக ஆடைகளை வாங்கியவர்கள், மற்றவர்களிடம் வாய் வார்த்தையாக எங்களைப் பற்றிய குட் ரிமார்க்ஸ் சொன்னதனால் மட்டுமே இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம்..."

- வொர்க்கிங் வுமன்களுக்கான `ப்ரீமியம் வொர்க்வேர்' (Premium Workwear) ஆயத்த ஆடைகளைத் தயாரித்து விற்பனைசெய்யும் ஆயுஷி குட்வானி, மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார். `வொர்க்கிங் இண்டியன் வுமன்'களுக்கான ஆடைகள் உலகின் ட்ரெண்ட் செட்டர் எனப் பாராட்டப்படுபவர் தான் கடந்து வந்த பாதையையும், மாத்தியோசித்ததன் மகிமையையும் 'பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்!' எனும் தலைப்பில் அவள் விகடனிடம் பகிர்ந்திருக்கிறார்.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

1961-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த வெளியுறவுத்துறை பணி விதிகளில், பெண் வெளியுறவுத்துறை அதிகாரி திருமணம் செய்ய அரசின் முன் அனுமதி வாங்க வேண்டும்; எப்போதாவது அவரது திருமண உறவோ, அதனால் விளையும் சிக்கல்களோ அவரது அலுவலகப் பணியை பாதிக்கும் என்று அரசுக்குத் தெரியவந்தால், பணியை ராஜினாமா செய்துவிட வேண்டும். இவை போன்ற கடும் விதிமுறைகள் இருந்தன. சிறு வயது முதலே நீதியையும் நேர்மையையும் நம்பி இருந்தவருக்கு இது கடும் மன உளைச்சலைத் தரவே, நீதிமன்றத்தை அணுகினார் முத்தம்மாள்... 

- இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி... இந்தியாவின் முதல் பெண் தூதரான சி.பி.முத்தம்மாள் சந்தித்த நெருக்கடிகள் அசாதாரணமானவை என்பது மட்டும் தெளிவு. இந்த இதழின் 'முதல் பெண்கள்!' பகுதி தவறவிடக்கூடாத ஒன்று.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

``பாட ஆரம்பிச்ச நாள்களில் என் கச்சேரிக்கு 50 பேர் வந்தாலே பெருசு. அந்த எண்ணிக்கை 60 ஆனா சந்தோஷப்படுவேன். அது 70 ஆனா ரொம்பப் பெரிய விஷயம்னு நினைச்ச காலம் அது. என் வளர்ச்சியும் வெற்றியும் இப்படிப் படிப்படியா வந்ததுதான். ஒரே ராத்திரியில மேஜிக் எதுவும் நடக்கலை. பாட ஆரம்பிச்ச அடுத்த நாளே என் கச்சேரிக்கு ஆயிரக்கணக்குல கிளம்பி வரணும்னு லட்சியம் வெச்சிருந்தா அன்னிக்கே நான் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பேன். `நேற்றைவிட இன்னிக்கு பரவாயில்லையா சரி... இன்னியைவிட நாளைக்கு பெட்டரா... சந்தோஷம்'னு நினைச்சுப்பேன். ஒரு கச்சேரியில வெற்றி பெறணும்னா முதல்ல என்ன பண்ணணும், என்ன பாடணும், ஆடியன்ஸை எப்படி வரவழைக்கணும், அதுக்காக ஏதாவது சிறப்புப் பயிற்சிகள் எடுக்கணுமா, மத்தவங்களுக்குத் தெரியற விஷயங்கள் எனக்குத் தெரியாம இருக்கே, அதை எங்கே, யார்கிட்ட போய் கேட்கறதுனு புரியலை..."

- தன் இசைப் பயணத்தின் போராட்டங்களையும் வெற்றிகளையும் குறித்து மனம் திறந்து பேசுகியிருக்கிறார் சங்கீத கலாநிதி அருணா சாய்ராம். 'மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்!' என்ற அவரது பேட்டி, இசை மட்டுமின்றி ஒவ்வொரு துறையினரும் தங்களைப் பொருத்திப் பார்க்கத்தக்க வகையிலான தன்னம்பிக்கை அம்சங்கள் நிறைந்தவை.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் கோமதியின் 'வீக் எண்டு புரோகிராம்' பல ஆண்டுகளாகவே விழிச்சவால் கொண்டவர்களுடன் நேரம் செலவிடுவது மட்டுந்தான். அதோடு, நிறைய நண்பர்களுக்கு இதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்லி அழைத்துச் செல்கிறார். ஐ.டி நண்பர்களுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விழிச்சவால் உள்ளவர்களின் வாசிப்பையும், அவர்கள் தேர்வுக்குத் தயாராவதையும் எளிமைப்படுத்தும் பணியில் இருக்கிறார். இதற்கிடையில், விழிச்சவால் உள்ளவர்களுக்கு `அம்பேத்கர் அன்றும் இன்றும்' புத்தகத்தை ஒலிப்புத்தகமாக மாற்றும் பணியிலும் இருக்கிறார் கோமதி. 

- கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக விழிச்சவால் உள்ளவர்களுக்குப் பாடம் படித்துக்கொடுப்பது, அவர்களுக்காகத் தேர்வு எழுதுவது, அவர்களுக்குப் பாடம் படித்துக்காட்டவும், தேர்வு எழுதவும் எண்ணம் இருப்பவர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைப்பது, அலைபேசியிலேயே ட்யூஷன் கற்றுத் தருவது எனத் தொடர்ந்து ஈடுபட்டுவரும் நேசக்காரி கோமதி குறித்த 'குரலிலே தெரிவது தேவதை!' எனும் செய்திக் கட்டுரை நமக்கு சொல்லும் செய்திகள் ஏராளம். 

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

'பொண்ணுங்க சாக்ஸபோன் கத்துக்கிறதெல்லாம் தப்பான முடிவு'னு சொன்னவங்களுக்கு என் திறமையாலும் வளர்ச்சியாலும் பதில் சொல்லியிருக்கேன். இன்னிக்கு சென்டர் ஸ்டேஜ்ல நின்னு முழுநேர சாக்ஸபோன் கச்சேரி பண்ற அளவுக்கும்  சீனியர் கலைஞர்களுக்கு வாசிக்கிற அளவுக்கும் வளர்ந்திருக்கேன். இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமாகிறதில்லையே... இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிக்கிற பெண்கள் என்னதான் திறமையானவங்களா இருந்தாலும் அவங்களை மேடையில பின் வரிசையிலதான் நிறுத்துவாங்க. பிரபலமாகிற வரைக்கும் நானும் அந்த அனுபவங்களைச் சந்திச்சிருக்கேன். இப்படிப்பட்ட பாரபட்ச அணுகுமுறையை மாத்தணும்னு ஆரம்பிச்சதுதான் 'குயின்ஸ்' பேண்டு. இது ஃபியூஷன் பேண்டு. அதாவது கிளாசிக்கல் மியூசிக், வேர்ல்டு மியூசிக், வெஸ்டர்ன் பாப், கிராமிய இசைனு எல்லாம் வாசிப்போம்...

- மும்பையைச் சேர்ந்த 'குயின்ஸ்' மேடையேறினால் அதிராத அரங்கமே இல்லை. இவர்கள் இசைக்கருவிகளை இசைக்கிற அரசிகள். பிரபலமான வாய்ப்பாட்டுக் கச்சேரிக்கு இணையான கூட்டம் இவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கும் கூடுகிறது. குயின்ஸ் என்பது முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் 'ஃபியூஷன்' மியூசிக் பேண்டு. ஹை பிட்ச்சில் ஹார்ட் பீட்டை எகிறவும் செய்கிறார்கள். மயிலிறகால் வருடுகிற மாதிரி மெல்லிசையும் தருகிறார்கள். வித்தியாசமான இந்த முயற்சிக்கு வித்திட்டவர் பிரபல சாக்ஸபோன் கலைஞர் லாவண்யாவின் `மாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்!' எனும் பேட்டியும் சந்திப்பும் தெறிக்கவிடும் ரகம்!

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

`முத்து... என்னைக் கல்யாணம் கட்டிருக் கிறீயா"னு கேட்டா. பயலுக்கு வியர்த்துக் கொட்டுது. உடம்பெல்லாம் நடுங்குது. 

``தாயி... நான் இந்த வீட்டுக்குள்ள வந்து, அய்யாமாருங்க உக்கார்ற நாற்காலியில உக்காந்து சாப்பிட்டேன்னு தெரிஞ்சாலே என்னை உசுரோட கொளுத்திருவாக. இதுமாதிரியெல்லாம் பேசாதீய தாயி.எல்லாப்பேரும் `தொழிலாளி', `தொழிலாளி'னு கூப்பிடும்போது நீங்க மட்டும் `முத்து'னு பேரு சொல்லி அழைச்சு என்னை மனுஷனா மதிச்சிக. அம்மா மாதிரி உக்கார வெச்சு சோறு போட்டிக. இதுபோதும் தாயி. இந்த மாதிரி எண்ணத்தை வளத்துக்க வேண்டாம்"னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். அவன் கையைப் புடிச்ச பாப்பு, ``முத்து... இந்த ஜென்மத்துல உனக்கு நான். எனக்கு நீனு எழுதியிருக்கு. அதை மாத்த முடியாது. நிச்சயம் நாம ஒண்ணு சேருவோம்"னு சொன்னாள்...

-  பாப்பு - முத்து காதல் அத்தியாயமும், அதற்குப் பின் நேர்ந்த அநியாயங்களையும் மனத்திரையில் விரித்திருக்கிறது தெய்வ மனுஷிகள் தொடரின் பகுதி. 

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

`ஆசை அறுபது நாள்' என்ற பழமொழியைப்போல, மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த ஜோடிக்கு இடையே பிணைப்பு விட்டுப்போய் பிரச்னைகள் ஆரம்பமாக, பெண்ணைக் கைவிட்டுச் செல்லும் ஆண்கள்தான் இங்கு அதிகம். அந்த நிலையில் பெற்றோர்கள்தாம் மகளை அரவணைக்கின்றனர். அவளுக்கு இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கின்றனர் அல்லது பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்த நிலையில், கர்நாடக நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் நிலையில் இருந்து யோசித்து வழங்கிய தீர்ப்பு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. `சட்டப்படி உங்களுக்குத் திருமண வயதாகி இருந்தாலும், சட்டப்படி நீங்கள் திருமணம் செய்திருந்தாலும், நீங்கள் இருவரும் செய்துகொண்ட திருமணம் செல்லாது' என்ற தீர்ப்பு, நீதித்துறை வரலாற்றில் அபூர்வமானது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு, வழிதவறிச் செல்லும் மகள்களைப் பெற்றோர்கள் மீட்க, இந்தத் தீர்ப்பு கைகொடுக்கும். அந்த வழக்கின் விவரத்தைப் பார்ப்போம்...

- காதலுக்கென்று தனிச் சட்டங்கள் எதுவும் இதுவரை இல்லை. அதனால், காதல் வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளே சட்டங்களாகின்றன. அப்படிச் சில தீர்ப்புகளின் மூலம் காதலுக்கு எழுதப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி 'சட்டம் பெண் கையில்! - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்!' எனும் தலைப்பில் விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

என் கரியரில் ஓர் இடைவெளி வந்த டைம் அது... டி.வி சீரியல்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. 'கொஞ்சம் பொறுமையா இரு. உனக்கு சினிமாவிலேயே நல்ல வாய்ப்புகள் வரும். சீரியல்ஸ்ல எப்போ வேணா நடிக்கலாம்'னு சொன்னவங்க அக்காதான். காத்திருந்தேன்... பிக் பாஸ் வந்தது. இப்போ நல்ல நல்ல படங்கள் பண்றேன். அக்கா பேச்சைக் கேட்டதால என் வாழ்க்கை அடுத்தடுத்து உயரத்துக்குப் போயிட்டிருக்கு. லவ் யூ அக்கா...'' - ஜானு புகழ் பாடுகிற ரித்விகா, 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருந்தபோது அடிக்கடி அக்காவையும் அவர் குழந்தையையும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

- 'சிஸ்டர்ஸ்' பகுதிக்காக 'நம்மால் எதையும் சமாளிக்க முடியணும்!' எனும் தலைப்புடன் தன் அக்கா உடனான பேரன்பு குறித்தும், தன் பர்சனல் பக்கங்களையும் தந்திருக்கிறார் நடிகை ரித்விகா. 

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

பேரீச்சை ஃப்ரைடு ரைஸ்:

தேவை:   சீரக சம்பா அரிசி - 200 கிராம்  பேரீச்சை - 20 (கொட்டை நீக்கவும்)  பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  அஜினமோட்டோ - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை உதிராக வடிக்கவும். பேரீச்சையைத் துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயத்தாள், மிளகுத்தூள், அஜினமோட்டோ, பேரீச்சைத் துண்டுகள் ஆகியவற்றை சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உதிராக வடித்த சாதத்தில் வதக்கியதைப் போட்டு நன்கு கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

- இதுபோல் வித்தியாசமானதும் சுவையானதுமான சத்துகளின் சங்கமமாக 30 வகை பேரீச்சை ரெசிப்பிக்களை தருகிறது இணைப்புப் பகுதி.

போராட்டமும் பேரன்பும்: 6 நிமிட வாசிப்பில் அவள் விகடனின் 12 அம்சங்கள்!

'தி பேப்பர் பேக் பிரின்சஸ்' என்னும் இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டது தான். 1980-ம் ஆண்டு வெளிவந்தது. நான்கு முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளுக்கான இந்தக் கதையை, குழந்தைகளோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தவர்களும் தொடர்ச்சியாகப் படித்துவருவதால்தான் இந்தப் புத்தகம் தொடர்ந்து உலகம் முழுக்க அச்சில் இருந்துவருகிறது. 

பெண்ணியச் சிந்தனையாளர்கள் பலர் இந்தப் புத்தகத்தைப் பாராட்டுவதோடு இன்றுவரை சிபாரிசும் செய்துவருகிறார்கள். அதற்கான காரணங்களை, இந்தப் புத்தகத்தைப் புரட்டும்போதே கண்டுபிடித்துவிட முடிகிறது. உண்மையில், புரட்டும்போதே வாசித்து முடித்துவிடக்கூடிய அளவுக்கு மிகச் சிறிய புத்தகம் இது. மொத்தம் 32 பக்கங்கள். பக்கம் முழுக்க அழகாக விரிந்திருக்கும் பெரிய அளவு படங்களை எடுத்துவிட்டு, எழுத்துகளை மட்டும் தொகுத்தால் முக்கால் பக்கத்துக்குக்கூட வராது. பத்துப் பத்திகள்தான் மொத்தக் கதையுமே. ஆனால், ஒவ்வொரு பத்தியும் ஓர் எதிர்க்குரல்.

- இந்த கெத்தான புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்ட உணர்வுகளையும், போராட்ட குணத்தின் மேன்மையையும் நம்மிடம் கடத்துகிறது 'காகிதப்பை இளவரசி!' எனும் எதிர்க்குரல் பக்கம்!

இந்த வார அவள்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2Q3EEQo