Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஓவியங்கள் : 'ஹரன்'

'டிரைவர் அங்கிளை யார் திட்டுவா..?!’

குட்டீஸ் குறும்பு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

நான்கு வயதான என் சுட்டிப் பேரனுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தவன், அடிக்கடி கைகளை வெளியே நீட்டி விளையாடிக் கொண்டிருந்தான். ''இப்படி  கைய நீட்டினா டிரைவர் அங்கிள் திட்டுவார்'' என்று பயமுறுத்தி கன்ட்ரோல் செய்தேன். உடனே நல்ல பிள்ளையாகிவிட்டான். சிறிது நேரம் கழித்து, ''பாட்டி, அங்க பாருங்க... டிரைவர் அங்கிளே வெளியில கைய நீட்டி நீட்டி விளையாடுறார். அவரை யார் திட்டுவா?'' என்று கோபமாகக் கேட்டான். பின்னால் வந்த வண்டியை, முன்னால் போக கையால் சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்ததை இப்படி அவன் சொல்ல... நானும், பக்கத்து ஸீட்டில் இருந்தவர்களும் ரசித்துச் சிரித்ததோடு, பேரனுக்கு விஷயத்தைப் புரிய வைத்தோம். அவனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்!

- ஏ.ஜே.தில்ஷாத் பேகம், சத்தியமங்கலம்

சென்ஸார் போர்டு பேரன்கள் !

குட்டீஸ் குறும்பு !

சென்ற வருடம் நானும், என் கணவரும் அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அன்று தொலைக்காட்சியில் ஆங்கிலப் படம் ஓடிக்கொண்டிருந்தது. பேரன்களிடம், ''ஏதாவது பேட் ஸீன் வந்தா... உடனே சேனலை மாத்திடணும்'' என்று சொல்லிச் சென்றான் மகன். இருவரும் சமர்த்தாக தலையாட்டினார்கள். சிறிது நேரத்தில் ஒரு முத்தக் காட்சி வர, இரண்டு பேரன்களும் ஓடிப்போய்க் கைகளால் டி.வி ஸ்க்ரீனை மறைத்துக் கொண்டு, ''பாட்டி, தாத்தா... பேட் ஸீன் வருது... கண்ணை மூடிக்கோங்க!'' என்று சொன்னதும், அமெரிக்காவே அதிரச் சிரித்துவிட்டோம் நாங்கள். அவர்களுக்கு சொன்ன அட்வைஸை, எங்களுக்குச் சொன்னதாக நினைத்துக்கொண்ட குழந்தை மனதை நினைத்து இன்னும் சிரிக்கிறோம்!

- சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம்

'கரன்ட் அனுப்புங்க... தேவயானி ஆன்ட்டி !’

குட்டீஸ் குறும்பு !

ஏழு வயதான என் பேரன் வெங்கடேஷிடம், ''தேவயானி நடிக்கும் 'முத்தாரம்’ சீரியல் காலையில வருது. கரன்ட் இல்லாம பார்க்க முடியறதில்லைப்பா’' என்று பேச்சுவாக்கில் சொன்னேன். அடுத்த நாள், அந்த சீரியல் பற்றிய விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க... 'என் நாத்தனாருக்கு வளைகாப்பு... நீங்க எல்லோரும் வாங்க!’ என அதில் அழைத்தார் தேவயானி. உடனே என் பேரன், ''நீங்க காலையில கரன்ட்டை அனுப்புங்க ஆன்ட்டி. அப்பத்தான் நாங்க வளைகாப்புக்கு வரமுடியும்!’' என்று போட்டானே ஒரு போடு... கரன்ட் கட் கடுப்பு மறைந்து, வெடிச் சிரிப்பு வந்தது எங்கள் வீட்டில்!

- எஸ்.பட்டம்மாள், கும்பகோணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism