'கிராமிய சிறப்பிதழ்' என்றதுமே 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் எப்போதுமே வலியுறுத்தும் அந்த அற்புதமான விஷயம் என் நினைவுக்கு வந்தது...

''கிராமம்... விவசாயம் இரண்டையும் பிரித்தறிய முடியாது. இந்த இரண்டிலிருந்து பெண்களை பிரிக்கவே முடியாது. ஆம், குறிப்பிடத்தக்க சில விவசாய வேலைகளை ஆண்கள் செய்தாலும், பெரும்பாலான வேலைகளைச் செய்பவர்கள் பெண்கள்தான். விவசாயம், வீட்டு நிர்வாகம், குழந்தைகளின் எதிர்காலம் என்று அனைத்திலுமே பெண்கள் எடுக்கும் முடிவுதான் அங்கே இறுதியானதாக இருக்கும். அதற்குக் காரணம்... வாழையடி வாழையாக கிராமப் பெண்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார புத்திசாலித்தனம்தான்.

வீட்டின் வாராந்திர பணத் தேவைக்கு... கோழி, பால் மாடு வளர்ப்பு; குழந்தைகளின் படிப்பு, திருவிழா உள்ளிட்ட பணத் தேவைக்கு... ஆடு வளர்ப்பு மற்றும் காய்கறி சாகுபடி; பெண்ணின் கல்யாண செலவு போன்ற பெரிய பெரிய தேவைக்கு... நெல், பணப்பயிர்கள், மரங்கள் சாகுபடி... இப்படி ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து வைத்து, அந்தந்த வருமானத்திலிருந்து மட்டுமே செலவு செய்வார்கள். 'ஆட்டைத் தூக்கி மாட்டுல போடு... மாட்டைத் தூக்கி ஆட்டுல போடு' என்கிற குழப்பமே அவர்களிடம் கிடையாது.

இத்தகைய கட்டுப்பாடான எளிய பொருளாதார சூத்திரம்தான், இன்றைக்கும்கூட கிராமப்புற குடும்பங்கள் பலவற்றையும் சிதையாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.''

நம்மாழ்வார் இப்படி பெருமைப்பட்டு சொல்லும் இந்த விஷயம், 'தாட்பூட் தஞ்சாவூர்' என்று தாறுமாறாக செலவு செய்துகொண்டிருக்கும் நம்மில் பலருக்கும் மிகப்பெரிய பொருளாதார பாடம்! நமக்கு மட்டுமல்ல... இன்றைக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் உலக நாடுகள் பலவற்றுக்கும்கூடத்தான்!

''நாம் நிறைய செலவு செய்கிறோம். அதைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஜப்பானின் பிரதமரே, தன் நாட்டு மக்களிடம் சமீபத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நம் 'கிராம தேவதைகள்' எத்தனை தீர்க்கதரிசிகள் என்பது இப்போது புரிகிறதுதானே!

உரிமையுடன்

ஆசிரியர்