Published:Updated:

‘அவள்’ என்னும் தேவதை!

‘அவள்’ என்னும் தேவதை!
பிரீமியம் ஸ்டோரி
‘அவள்’ என்னும் தேவதை!

‘அவள்’ என்னும் தேவதை!

‘அவள்’ என்னும் தேவதை!

‘அவள்’ என்னும் தேவதை!

Published:Updated:
‘அவள்’ என்னும் தேவதை!
பிரீமியம் ஸ்டோரி
‘அவள்’ என்னும் தேவதை!

வித்யா குருமூர்த்தி, பெங்களூரு

வ்வொருவர் வாழ்விலும், அவர்களுக்கான சீக்ரெட் கார்டியன் ஏஞ்சல் ஒன்று இருக்குமாம். அந்த ஏஞ்சல் அவருக்கான பாஸிடிவ் எனர்ஜி, நல் வாழ்வு, வேலை, உடல்நலம், அதிர்ஷ்டம், குடும்பம், நல்ல நட்பு, வாழ்க்கைத் துணை போன்ற முக்கிய விஷயங்களை அளிப்பதில் பெரும்பங்கு வகிக்குமாம். அந்த ரகசிய தேவதையைக் குறிக்கும் எண் நியூமராலஜிபடி 21 என்பதாகும்.

`அவள்' உருவான நாள் முதற்கொண்டே நம்மைப் போல எண்ணற்ற பெண்களுக்கு, ஒரு தாய் போல எண்ணற்ற ஆலோசனைகள், தன்னம்பிக்கை டிப்ஸ், மருத்துவக் குறிப்புகள், தொழில் தொடங்க, விரிவாக்கம் செய்ய மற்றும் பலப்படுத்தும் யோசனைகள், பிரச்னைகளுக்கு ஆறுதல் தரும் எக்ஸ்பர்ட் அட்வைஸ் என்று கார்டியன் ஏஞ்சல் போலவே செயல்படுகிறாள்.

`அவள்' ஒவ்வோர் இதழும் தகவல் மற்றும் பொழுதுபோக்குக் களஞ்சியம்தான்.  அவளில் என்னை மிகக் கவர்ந்தவற்றில் சில...

‘அவள்’ என்னும் தேவதை!

அட்டைப் படம்:  பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும் `அவள்' எழுத்தின் பாணியே அசத்தல்தான். அந்த `ள்' மேல் இருக்கும் புள்ளி, முகத்தின் நெற்றிப்பொட்டு போல மிகப் பாந்தமாக அமைந்திருக்கும். `அவள்' எல்லா நிறங்களிலும் எழுதப்படும். எனினும், நான் கவனித்த வரை அதிகம் எழுதப்படுவது மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில்தான்!

 தலையங்கம்: ஆத்மார்த்த நட்பு பேசுவதுபோல `ஸ்ரீ'யின் இயல்பான `நமக்குள்ளே'. அந்தந்த நேரத்தின் முக்கியப் பிரச்னைகளை, அதன் மையக்கருத்தை லாகவமாக எடுத்தாளும் பாங்கு மிகவும் கவர்ந்த ஒன்று.

 தன்னம்பிக்கைக் கட்டுரைகள்: வீட்டில் வழக்கமாகப் பார்க்கும் வேலைகளே எப்போதேனும் அதிகரித்தால் மலைத்துபோகும் ஆட்களுக்கு, போட்டோகிராபி, திரைத் தொழில்நுட்பம், ரயில் ஓட்டுதல், விமானம் ஓட்டுதல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணிகள், பல்வேறு துறைகளில் அநாயாசமாக வெற்றிக்கொடி நாட்டும் பெண்களைப் பேட்டி எடுத்து வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் அவளின் பணி மகத்தானது. படிக்கும் நமக்கும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் பிறக்கின்றன.

 ஜாலி டே: அவள் குழுமம் நடத்துகிற வாசகிகள் திருவிழாக்கள் தனித்துவம் வாய்ந்தவை. தன் சொந்த வீட்டு விசேஷம் போல உணரவைக்கும் வாசகியர் சந்திப்பு, அவர்களின் தனித் திறமையை வெளிக்கொணர சிறந்த தளம் அமைத்துக்கொடுக்கிறது. பழைமை, புதுமை என எல்லாம் கலந்த ட்ரெண்டி கொண்டாட்டமாக அமைந்து, மறக்கவியலாத ஓர் உணர்வுபூர்வ பந்தத்தை பத்திரிகையுடன் ஏற்படச்செய்கிறது இந்த விழா.

 32 பக்க இணைப்பு:
ஸ்பெஷல் ரெசிப்பிகளை இவ்வளவு எளிதாக அறிமுகப்படுத்தியது அவள் புதுமைகளில் ஒன்று. ரெகுலர் சமையலைச் சிறப்பாக்க மற்றும் மேம்படுத்துவதற்கான சிறந்த டிப்ஸ், விழாக்கால சமையல்கள், சிறுதானிய வகை ரெசிப்பிகள் என்று அவளிடம் கற்றுக்கொண்டவை ஏராளம்.

 டிப்ஸ்: அழகுக் குறிப்புகள், சருமப் பராமரிப்புகள், வீட்டுப் பராமரிப்பு, தோட்டக்கலை குறிப்புகள், பேறுகாலம் (முன் & பின்) பற்றிய தெளிவான அறிவுரைகள் என டிப்ஸ் வங்கி `அவள்'!

தவிர லைஃப்ஸ்டைல், பொழுதுபோக்கு, ராசி பலன்கள், உளவியல் கட்டுரைகள்,  பிரபலங்களின் உணர்வுகள் வெளிப்படும் அற்புதமான பேட்டிகள் என்று எல்லா பக்கங்களிலும் சிக்ஸர் அடிக்கும் `அவள்', பெண்கள் பத்திரிகை உலகின் முடிசூடா ராணியாக வலம்வருவதில் வியப்பில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism